கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (05-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



இன்றைய  (05-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 05, 2023




பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். எண்ணங்களின் போக்கில் மாற்றம் உண்டாகும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உற்சாகம் நிறைந்த நாள்.


  


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் :  9

 

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


 

அஸ்வினி :  மாற்றம் உண்டாகும்.

 

பரணி :  அனுபவம் வெளிப்படும்.

 

கிருத்திகை :  ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------

 


ரிஷபம்

ஜனவரி 05, 2023



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கட்டுப்பாடு வேண்டும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். பொருளாதார உயர்வை பற்றிய சிந்தனைகள் மேம்படும். போட்டிகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு

  

அதிர்ஷ்ட எண் :  6

 

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


  

கிருத்திகை :  மகிழ்ச்சியான நாள்.

 

ரோகிணி :  சிந்தித்து செயல்படவும்.

  

மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------

 


மிதுனம்

ஜனவரி 05, 2023



மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மைக்கான சூழ்நிலையும் உண்டாகும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்து செயல்படவும். உடல் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு

 

அதிர்ஷ்ட எண் :  3

 

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு


 

மிருகசீரிஷம் : குழப்பம் உண்டாகும்.

  

திருவாதிரை : மாற்றங்கள் ஏற்படும்.

  

புனர்பூசம் : தாமதம் உண்டாகும்.

---------------------------------------

 


கடகம்

ஜனவரி 05, 2023



சுபகாரிய முயற்சிகளில் அலைச்சலுக்கு பின்பு சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். கலை சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பிள்ளைகளின் திறமைகளை அறிவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் அனுகூலம் உண்டாகும். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் :  3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




புனர்பூசம் : முடிவுகள் சாதகமாகும்.

  

பூசம் : விவேகமான நாள்.


ஆயில்யம் :  அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------

    



சிம்மம்

ஜனவரி 05, 2023



அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம்  உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபமுயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



மகம் : உதவி கிடைக்கும். 


பூரம் : ஒற்றுமை அதிகரிக்கும். 


உத்திரம் : சாதகமான நாள்.

---------------------------------------



கன்னி

ஜனவரி 05, 2023



மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தகவல் தொடர்புத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சுபகாரியங்களை பேசி முடிப்பதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பணிவு வேண்டிய நாள்.



 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் :  3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



உத்திரம் :  தைரியம் ஏற்படும். 


அஸ்தம் : ஆதரவு கிடைக்கும். 


சித்திரை : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

ஜனவரி 05, 2023



நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வர்த்தகம் சார்ந்த துறையில் புதுவிதமான நுட்பங்களுடன் தனலாபத்தை மேம்படுத்துவீர்கள். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும்  மேம்படும். வெளியூர் தொடர்பான புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் :  7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : தீர்வு கிடைக்கும்.


சுவாதி :முன்னேற்றம் உண்டாகும்.


விசாகம் : ஆதரவான நாள்.

---------------------------------------



விருச்சிகம்

ஜனவரி 05, 2023



காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானமாக செயல்பட வேண்டும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். கடன் தொடர்பான நெருக்கடிகள் அதிகரிக்கும். மற்றவர்களின் மூலம் மனதளவில் புதிய மாற்றங்கள் உண்டாகும். தற்பெருமை இன்றி அனைவரையும் அனுசரித்து செல்லவும். செல்லப்பிராணிகள் வழியில் விரயங்கள் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள். 




 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் :  9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : நெருக்கடிகள் அதிகரிக்கும்.


அனுஷம் : மாற்றங்கள் பிறக்கும்.


கேட்டை : பொறுமை வேண்டும்.

---------------------------------------




தனுசு

ஜனவரி 05, 2023



சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் புது உற்சாகத்தைக் கொடுக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகள் குறைவதன் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையில் லாபம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் :  3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மூலம் : தடைகள் விலகும்.


பூராடம் : நெருக்கடி குறையும்.

 

உத்திராடம் : லாபகரமான நாள்.

---------------------------------------




மகரம்

ஜனவரி 05, 2023



குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனம் தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். யோகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் :  2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.


திருவோணம் : புரிதல் ஏற்படும்.

 

அவிட்டம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------



கும்பம்

ஜனவரி 05, 2023



வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழப்பம் நீங்கி தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் ஏற்பட்ட சில பிரச்சனைகள் தீரும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும்.  பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் :  9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


சதயம் : பயணங்கள் கைகூடும்.


பூரட்டாதி : பொறுப்புகள் குறையும்.

---------------------------------------

  



மீனம்

ஜனவரி 05, 2023



வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பணியில் உள்ளவர்களுக்கு மேலான பொறுப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான சுபவிரயங்கள் ஏற்படும். தொலைபேசி தொடர்பான செய்திகளின் மூலம் பயணங்களை மேற்கொள்வீர்கள். இன்னல்கள் விலகும் நாள்.


  

அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் :  1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : நன்மை உண்டாகும். 


உத்திரட்டாதி : சிந்தனை அதிகரிக்கும்.


ரேவதி : சுபவிரயங்கள் ஏற்படும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

09-01-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்:மருந்து கு...