கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.01.2023 - School Morning Prayer Activities...

 

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.01.2023 - School Morning Prayer Activities...


  திருக்குறள் :


பால்: அறத்துப்பால்


அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்


குறள் 103:


பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது.


குறள் விளக்கம்:


இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.


பழமொழி :

A journey of a thousand miles begins with a single step


ஆயிரம் கல் தொலைவுப் பயணமும் ஒரே ஒரு எட்டில்தான் தொடங்குகிறது



இரண்டொழுக்க பண்புகள் :


1.மின்னணு சாதனங்கள் விட மனிதர்கள் முக்கியம். எனவே உற்றாரோடு நல்ல உறவில் இருக்க முயல்வேன்.


2. அனைவரோடும் சிரித்தும் சிந்தித்தும் பேசுவேன்


பொன்மொழி :


எவருக்கும் நீங்களாக போய் அறிவுரை சொல்லாதீர்கள், நீங்கள் அழைக்கப்பட்டால் தவிர எதிலும் தலையிடாதீர்கள்.


பொது அறிவு :


1. இந்தியாவின் முதல் பெண் உலக அழகி பட்டம் பெற்றவர்? 


 ரீட்டா பிரியா.


 2. இந்தியாவின் முதல் இராணுவத் தலைவர் யார்?


 ஜெனரல் கே. எம் .கரியப்பா.


English words & meanings :


hole - opening. noun. துளை. பெயர்ச் சொல். whole - entire. adjective. பெயரடைச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


ஆளிவிதையை பாலுடன் கலந்து சாப்பிடலாம். இதற்கு, நீங்கள் ஒரு கிளாஸ் பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் ஆளி விதை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதற்குப் பிறகு, இந்த பாலை வடிகட்டிக் குடிக்கலாம். வேண்டுமானால் ஆளி விதை பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலை இரவில் தூங்கும் போது குடிக்கலாம். இதன் மூலம் நீங்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.


NMMS Q


அண்டம் மற்றும் விண்மீன்களில் காணப்படும் மிக முக்கியமான தனிமங்கள்_________ 


விடை: H, He


நீதிக்கதை


சமாதானம் அவசியம்


காட்டில் மான் ஒன்று இறந்து கிடந்தது. அதை ஒரே சமயத்தில் சிங்கம் ஒன்றும், கரடி ஒன்றும் பார்த்தன. கரடி, நான் தான் முதலில் மானைப் பார்த்தேன். ஆகவே அது எனக்குச் சொந்தம் என்றது. ஆனால் சிங்கமோ.... நான் தான் முதலில் பார்த்தேன். ஆகவே இந்த மான் எனக்கேச் சொந்தம் என்றது.


இரண்டும், செத்துக்கிடந்த மான் யாருக்குச் சொந்தம் என நீண்ட நேரம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தன. அதனால் இரு மிருகங்களும் சோர்வு மேலிட மயங்கின. அப்போது நரி ஒன்று அங்கு வந்து, இறந்து கிடந்த மானையும், அதற்காக சண்டையிட்டுக் கொள்ளும் சிங்கத்தையும். கரடியையும் பார்த்தது. இதுதான் சமயம் என நரி மானைத் தின்றுவிட்டு ஓடியது.


மயக்கம் தீர்ந்ததும் விழித்துக் கொண்ட கரடியும், சிங்கமும், நரி வந்து மானைத் தின்றுவிட்டுப் போனதை அறிந்தன. நாம் இருவரும் சமாதானமாய் போயிருந்தால், மானை பங்குப்போட்டு உண்டிருக்கலாம். நாம் சண்டையிட்டதால் வேறு ஒருவன் புகுந்து நம்மை ஏமாற்றிவிட்டானே என வருந்தின.


இன்றைய செய்திகள்


13.01.2023


* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1.17 லட்சம் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.7 கோடி ‘சாதனை ஊக்கத்தொகை’ வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


* தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* ரூ.4,276 கோடி மதிப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் கொள்முதல் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்.


* 50,000 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியிலிருந்து வால் நட்சத்திரம் ஒன்று பூமிக்கும், சூரியனுக்கு அருகில் வரவுள்ளது.


* இந்தியாவின் AMBRONOL, DOK-1 Max இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார நிறுவனம்.


* 2வது ஒருநாள்கிரிக்கெட் போட்டி: இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா.


* உலக டேபிள் டென்னிஸ் போட்டிக்கு இந்தியாவின் சரத்கமல், மணிகா தகுதி.


Today's Headlines


* On the occasion of Pongal, the Tamil Nadu government has announced that 1.17 lakh transport corporation employees will be given an 'achievement incentive' of Rs 7 crore.


* The Chennai Meteorological Center has reported that the Northeast Monsoon has receded over Tamil Nadu, Puduwai and Karaikal.


* Defense Ministry approves procurement of indigenously manufactured missiles worth Rs 4,276 crore


 * After 50,000 years a comet from outside our solar system will come close to Earth and the Sun.


*  Do not use India's AMBRONOL, DOK-1 Max cough medicine: World Health Organization.


*  2nd ODI: India beat Sri Lanka by 4 wickets to win the series.


 * India's Sarathkamal, Manika qualify for World Table Tennis Championship.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns