கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.01.2023 - School Morning Prayer Activities...

 

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.01.2023 - School Morning Prayer Activities...

  

 திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


 இயல்:இல்லறவியல்


 அதிகாரம்: நடுவுநிலைமை


குறள் : 111

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.


பொருள்:

பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்


பழமொழி :

The bearer knows the burden.


சுமப்பவனுக்கு தெரியும் பாரம்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. எந்த காரியம் செய்தாலும் பேசினாலும் நன்கு ஆராய்ந்து செய்வேன் பேசுவேன். 


2. எனது பேச்சு அடுத்தவர்களை ஊக்குவிக்கும் படி பேசுவேன்.


பொன்மொழி :


வார்த்தையில் மட்டும் பணிவு இருந்தால் போதாது நடத்தையிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் உயர முடியும்.


பொது அறிவு :


1. இந்தியாவில் முதல்முறையாக பீரங்கியை பயன்படுத்தியவர் யார்? 


 பாபர்.


 2. ஆசியாவில் உரத் தயாரிப்பில் முதலிடம் வகிக்கும் நாடு எது? 


 சீனா.


English words & meanings :


patience - being willing to wait. noun. பொறுமை. பெயர்ச் சொல்.patients - person treated in a hospital or by a doctor. noun. நோயாளி. பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


மொச்சை பயிறில் மக்னீசியம் அதிகளவு உள்ளது. இந்த மக்னீசியம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.


NMMS Q


ஒரு சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமம் எனில் அது ஒரு_______


விடை: இரு சமபக்க சரிவகம்


ஜனவரி 25


தேசிய வாக்காளர் தினம்


இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக சனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக (National Voters' Day) கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும்.


18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகின்றது.


நீதிக்கதை


வேப்பமரமும்... சிறுவனும்


வேப்பமரம் ஒன்றின் கீழே அமர்ந்து ராமன் அழுது கொண்டிருந்தான். அதைக் கண்ட மரம் தம்பி ஏன் அழறே என்றது. அதற்கு ராமன் எனக்கு யாரையுமே பிடிக்கவில்லை. காலையில் எழுந்ததுமே முதலில் பல் தேய்த்துவிட்டு வா என அம்மா அதட்டுகிறாள். பின் அப்பா காலை எழுந்ததும் படிப்பு. உன் பள்ளிப் பாடங்களைப் படி என்று கண்டிக்கிறார். பின் குளித்து முடித்து பசிக்கலை என்று சொன்னால் அம்மா திட்டி சாதம் சாப்பிடச் சொல்கிறாள்.


பள்ளிக்கு வந்தாலோ பாடம் படிக்கலைன்னும், பாடம் சொல்லிக் கொடுக்கும்போது வேடிக்கைப் பார்க்கக்கூடாது என்று டீச்சர் திட்டராங்க. எல்லாருமே என்னை நாள் முழுக்க திட்டிக்கிட்டேயிருக்காங்க. எனக்கு யாரையுமே பிடிக்கலை என்றான் அழுது கொண்டே.


வேப்பமரம் என் இலைகளை நீ சாப்பிட்டு இருக்காயா? என்றது. ஓ... இலை மட்டுமா உன் இலை, குச்சி எல்லாமே ஒரே கசப்பு. சாப்பிட்டால் வாந்தி வந்துடும் என்றான் ராமன். ஆனால் பல வியாதிகளுக்கு நான் மருந்தாக இருக்கிறேன்.


நான் கசந்தாலும் பலர் வாழ்க்கையில் இனிமை உண்டாகக் காரணமாக இருந்திருக்கிறேன். அது போல் பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வது இப்போது உனக்கு கசப்பாக இருக்கிறது. ஆனால் அந்த கசப்பை ஏற்று அதன் படி நடந்தால் பின் உன்னோட வாழ்க்கை இனிமையாக அமையும் என்றது.


நாமும் நம்முடைய மூத்தவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்று அதன்படி நடந்தால் அனைவராலும் விரும்பப்படுவது அல்லாது மிகவும் சிறந்தவராகவும் ஆவோம்.


இன்றைய செய்திகள்


25.01.2023


* குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


* தமிழகத்துக்கு முழு அளவு நிலக்கரியை வழங்கியது மத்திய அரசு.


* நாட்டிலேயே முதல்முறையாக அதிநவீன தகவல் தொழில்நுட்ப வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடியில் 135 அடி உயரம் கொண்ட டவர் அமைக்கப்பட்டுள்ளது.


* மணிக்கு 160 கி.மீ வேகம் செல்லும் இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில்: சோதனை ஓட்டத்தில் RRTS சாதனை.


* நேபாளத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி இருந்தது.


* உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ வழக்கறிஞர் - அமெரிக்க நீதிமன்றத்தில் அடுத்த மாதம் ஆஜராகிறது.


* 2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த பெண்கள் அணி அறிவிப்பு - 3 இந்திய வீராங்கனைகளுக்கு இடம்.


* உலகக்கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரை இறுதிக்குள் நுழைந்த சானியா-போபண்ணா ஜோடி.


Today's Headlines


* Chennai has implemented 5 layers of security on the occasion of the Republic Day celebrations.  Also drones flying are banned .


 * Central government has provided full amount of coal to Tamil Nadu.


* For the first time in the country, a 135-feet high tower has been constructed at the Chennai airport at the cost of Rs.10 crore for state-of-the-art information technology facility.


* India's fastest metro train at 160 kmph: RRTS record in test run


* An earthquake occurred in Nepal this afternoon.  It was recorded as 5.8 on the Richter scale.


* World's first artificial intelligence robot lawyer - appearing in US court next month


* ICC Women's ODI Team of the Year 2022 Announced - 3 Indian Women's Places


 * Hockey World Cup: Australia beat Spain to reach semi-finals


* Australian Open Tennis: Sania-Bopanna pair into semi-finals

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...