கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.01.2023 - School Morning Prayer Activities...

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.01.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: நடுவுநிலைமை


குறள் எண்: 112

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப்பு உடைத்து.


பொருள்:

நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்


பழமொழி :

Don’t measure the worth of a person by their size.


கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது


இரண்டொழுக்க பண்புகள் :


1. எந்த காரியம் செய்தாலும் பேசினாலும் நன்கு ஆராய்ந்து செய்வேன் பேசுவேன். 


2. எனது பேச்சு அடுத்தவர்களை ஊக்குவிக்கும் படி பேசுவேன்.


பொன்மொழி :


ஒழுக்கம் போர்க்களம் போன்றது. நாம் ஒழுக்கத்தோடு வாழ வேண்டுமானால், ஓயாமல் மனதோடு போராட வேண்டும்.


பொது அறிவு :


1. குங்கும பூவில் அதிகமாக காணப்படுவது எது? 


ரிபோபுளோவின். 


2. தவளையின் தோல் எத்தனை அடுக்குகளை கொண்டது? 


இரண்டு அடுக்குகள்.


English words & meanings :


rap - a sharp knock. noun. verb. தட்டுதல். பெயர்ச் சொல். வினைச் சொல். wrap- enclose with paper or soft material. verb. noun. சுற்றி கட்டுதல். பெயர்ச் சொல். வினைச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


மொச்சை பயிறில் உள்ள மற்றொரு சத்து மாங்கனீசு ஆகும். மாங்கனீசு எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது. எனவே ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோயை தடுக்க மொச்சை பயிறு உதவுகிறது. கால்சியம் குறைப்பாட்டை போக்கி எலும்பின் வலிமைக்கு உதவுகிறது.


NMMS Q


200 மற்றும் 300 ஆகிய எண்களின் வர்க்கங்களின் கூடுதலில் உள்ள பூஜ்ஜியங்களின் எண்ணிக்கை---------- 


விடை: 4



நீதிக்கதை


கடவுள் கொடுத்த வரம்


அருண் ஆறாம் வகுப்பு மாணவன். அவனது அப்பா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அருணின் நண்பன் பிரகாஷின் தந்தையோ பணக்காரர். பிரகாஷிற்கு அவன் தந்தை கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தார். எப்போதும் பிரகாஷிடம் பண நடமாட்டம் இருந்தது.


ஆனால் அருணோ தன்னிடம் பிரகாஷைப் போல் பணமில்லையே என வருந்தினான். தனக்கும் பணம் அதிகம் வேண்டும் என கடவுளை வேண்டினான். கடவுள் அவன் முன்னால் தோன்றி அருண் உனக்கு என்ன வேண்டும் என்று கேள் தருகிறேன். ஆனால் யோசித்துக் கேள் என்றார்.


அருண் உடனே இறைவா. நான் எதைத் தொட்டாலும் பணமாக வேண்டும் என்றான். அதைக் கேட்டு சிரித்த இறைவன் அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்து மறைந்தார். உடன் அருண் பக்கத்திலிருந்த புத்தகத்தைத் தொட அது பணக்கட்டாய் மாறியது. அப்பா, அம்மாவைக் கூப்பிட்டு அருண் நடந்ததைச் சொன்னான்.


அருணுக்கு பசி எடுக்க. அம்மா உணவு எடுத்து வந்தார். அருண் உணவில் கை வைக்க அது பணமானது. தண்ணீர் குடிக்க டம்ளரை எடுத்தால் அதுவும் பணமானது. பசியால் வாடிய அருண். அப்போது தான் இறைவனிடம் கேட்ட வரம் தவறு என்று உண்ர்ந்தான். மீண்டும் இறைவனை வேண்டினான்.


இறைவன் தோன்ற, அவரிடம், தனக்கு நடந்ததைக் கூறி தன்னை மன்னிக்கும்படியும் தான் கேட்ட வரம் வேண்டாம் என்றும் கூறினான். உடன் இறைவன் அருணைப்பார்த்து அருண் உன்னைப்போன்ற மாணவர்களுக்கு நல்ல கல்வியறிவும் நோயற்ற வாழ்வும் தான் செல்வம். அவை இருந்தால் வாழ்வில் பணம் சம்பாதிப்பது எளிது என்று கூறி அவனுக்கு அவ்விரண்டையும் அருளினார்.



இன்றைய செய்திகள்


27.01.2023


* அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் பொதுப்பணித்துறையின் திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் (CRZ) அனுமதி அளித்துள்ளது.


* அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் 15 லட்சம் ஆண்டுக்கு முந்தைய கல் கருவி படிமம் கண்டெடுப்பு: மத்திய பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை பேராசிரியர் தகவல்.


* மாநிலக் கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கொள்கைவடிவமைப்பு குழு தலைவர் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.


* இருதரப்பு உறவை பலப்படுத்த உறுதியான நடவடிக்கை: இந்தியா-எகிப்து 5 ஒப்பந்தம் கையெழுத்து.


* உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தமிழ் உள்ளிட்ட 4 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார்.


* மூச்சுத் திணறல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வடகொரிய தலைநகரில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


* சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 33-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், சபலென்கா அரைஇறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* The Coastal Regulatory Zone (CRZ) has given its go-ahead to the Public Works Department's plan to widen and dredge the Adyar river estuary.


*  Discovery of 15 lakh-year-old stone tools at Varanavasi message by Ariyalur district Professor of Department of Epigraphy, Central University.


* Justice Murugesan, chairman of the policy formulation committee, said that a draft report containing recommendations for the state education policy would be submitted to the Tamil Nadu government by April.


 * A concrete step to strengthen bilateral relations: India-Egypt signed in 5 agreements.


* Chief Justice DY Chandrachud has announced that the Supreme Court judgments will be translated into 4 regional languages ​​including Tamil and uploaded on the court website from August 15.


 *A five-day curfew has been announced in the North Korean capital following the rise in respiratory-related illnesses.


 * Indian player Manika Patra has moved up to the 33rd position in the international table tennis rankings.


* Australian Open tennis: Djokovic, Sabalenka advance to semi-finals.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...