கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இயற்கையோடு இசைந்த வாழ்வுக்கான சில ஆலோசனைகள் (Some tips for living in harmony with nature)...



இயற்கையோடு இசைந்த வாழ்வுக்கான சில ஆலோசனைகள் (Some tips for living in harmony with nature)...


1. உடம்பு சூடு ஆகாமல் பாத்துக்கணும். வாரத்தில் ஒரு நாளாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். 


2. காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் மோரில் சிட்டிகை பெருங்காயம்,உப்பு சேர்த்து குடிக்கலாம். 


3 . இரவில் படுக்கும் போது தொப்புளில் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் விட்டு படுக்க வேண்டும்.


4. நீர்ச்சத்துள்ள காய்கறிகளை கூட்டு செய்து சாப்பிட வேண்டும் மசாலா புளி காரம் சேர்க்கக்கூடாது.


5. காய்கறிகள், பழச்சாறுகள் சாப்பிட வேண்டும். டீ ,காபி பதிலாக சீரகம் அல்லது தனியா போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் சிறிது வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.


6 .அரைமணி நேரம் நடைபயிற்சி, உடற்பயிற்சி, தோப்புகரணம் ,சூரிய நமஸ்காரம் போன்றவற்றில் முடிந்ததை செய்யலாம். 


7. இரவு உறக்கம் 6 மணிநேரம் முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும். 

மதிய உறக்கம் வேண்டாம். 


8. தண்ணீர் ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை 2 டம்ளர் அருந்த வேண்டும். 


9. 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஒரிடத்தில் அமர்ந்து மூச்சு கவனியுங்கள். 


10.தினமும் ஆன்மீகம், அறிவியல், விஞ்ஞானம், இயற்கை, மருத்துவம் ,ஊக்குவிப்பு போன்ற பல புத்தகங்களில் ஏதாவது ஒன்று குறைந்தது 10 பக்கங்கள் படிக்கும் பழக்கம் நல்லது.


11 . கவலை ,கஷ்டங்கள், பிரச்சினைகள் அதிகமாக நினைக்காமல் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு மனதை அமைதியான முறையில் வாழ முனைவோம். 


12.கோபம், வெறுப்பு ,டென்சன் போன்ற உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் எண்ணங்களை தவிர்க்க வேண்டும் .


13 . நாம் இந்த பூமிக்கு சுற்றுலா வந்து இருக்கிறோம் . சந்தோஷமாக ,ஆரோக்கியமாக , ஆயுளுடன் வாழ்ந்து பிறவியின் நோக்கம் அடைவோம்.


14 .சூரியனைபோன்று 500கோடி ஆண்டுகள் வாழ போவதில்லை. 

கொண்டு வந்தது ஒன்றும் இல்லை.

கொண்டு போவதும் ஒன்றும் இல்லை .


15. உண்மையான சொத்து உடல் ஆரோக்கியம், மன அமைதி என்பதை உணர்ந்து வாழ முனைவோம்...!!






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...