கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு/ அரசு நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ தலைமை ஆசிரியர்கள்‌, ஆசிரியர்கள்‌. மற்றும்‌ ஆசிரியரல்லாத பணியாளர்களின்‌ பணிப்பதிவேடுகள்‌ (SR)- ஈட்டியவிடுப்பு, மருத்துவச்‌ சான்றின்‌ பேரில்‌ ஈட்டா விடுப்பு மற்றும்‌ இதர பதிவுகள்‌ பணிப்பதிவேட்டில்‌ பதிவு செய்ய 21.01.2023 வரை கால நீட்டிப்பு - கணக்கில்‌ உள்ள விடுப்பு விபரங்களை TNSED Schools App-ல்‌ பதிவேற்றம்‌ செய்தல்‌ - IFHRMS Employee IDஐ பதிவேற்றம்‌ செய்தல்‌ - பணிப்பதிவேட்டில்‌ உள்ள பதிவுகளை சரிபார்த்த பின்னர்‌ மேற்கொள்ள வேண்டிய பணிகள்‌ - பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் - பள்ளிக்கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ இணைசெயல்முறைகள்‌ ( Joint Proceedings of Commissioner of School Education and Director of Elementary Education - Headmasters, teachers working in Government/Government aided schools. and Non-Teaching Staff's Service Records (SR)- Extension of time till 21.01.2023 for registration of Earning Leave, Medical Leave and other records in Service Register - Uploading of leave details in TNSED Schools App - Uploading of IFHRMS Employee ID - Verification of records in Service Register - Tasks to be carried out later - Procedures to be followed - Joint Proceedings of Commissioner of School Education and Director of Elementary Education) ந.க.எண்‌.043443/பிடி1/இ2 /2022, நாள்‌. 10.01.2023...

 

>>> அரசு/ அரசு நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌  தலைமை ஆசிரியர்கள்‌, ஆசிரியர்கள்‌. மற்றும்‌ ஆசிரியரல்லாத  பணியாளர்களின்‌ பணிப்பதிவேடுகள்‌ (SR)- ஈட்டியவிடுப்பு, மருத்துவச்‌ சான்றின்‌ பேரில்‌ ஈட்டா விடுப்பு மற்றும்‌ இதர பதிவுகள்‌ பணிப்பதிவேட்டில்‌ பதிவு செய்ய 21.01.2023 வரை கால நீட்டிப்பு - கணக்கில்‌ உள்ள விடுப்பு விபரங்களை TNSED Schools App-ல்‌ பதிவேற்றம்‌ செய்தல்‌ - IFHRMS Employee IDஐ பதிவேற்றம்‌ செய்தல்‌ - பணிப்பதிவேட்டில்‌ உள்ள பதிவுகளை சரிபார்த்த பின்னர்‌ மேற்கொள்ள வேண்டிய பணிகள்‌ - பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் -  பள்ளிக்கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ இணைசெயல்முறைகள்‌ ( Joint Proceedings of Commissioner of School Education and Director of Elementary Education - Headmasters, teachers working in Government/Government aided schools. and Non-Teaching Staff's Service Records (SR)- Extension of time till 21.01.2023 for registration of Earning Leave, Medical Leave and other records in Service Register - Uploading of leave details in TNSED Schools App - Uploading of IFHRMS Employee ID - Verification of records in Service Register - Tasks to be carried out later - Procedures to be followed - Joint Proceedings of Commissioner of School Education and Director of Elementary Education) ந.க.எண்‌.043443/பிடி1/இ2 /2022, நாள்‌. 10.01.2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பள்ளிக்கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ இணைசெயல்முறைகள்‌

ந.க.எண்‌.043443/பிடி1/இ2/2022, நாள்‌. 10.01.2023


பொருள்‌ : பள்ளிக்கல்வி - அரசு/அரசு நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌  தலைமை ஆசிரியர்கள்‌, ஆசிரியர்கள்‌. மற்றும்‌ ஆசிரியரல்லாத  பணியாளர்களின்‌ பணிப்பதிவேடுகள்‌ (SR)- ஈட்டியவிடுப்பு, மருத்துவச்‌ சான்றின்‌ பேரில்‌ ஈட்டா விடுப்பு மற்றும்‌ இதர பதிவுகள்‌ பணிப்பதிவேட்டில்‌ பதிவு செய்தல்‌ கால நீட்டிப்பு - கணக்கில்‌ உள்ள விடுப்பு விபரங்களை பதிவேற்றம்‌ செய்தல்‌ - IFHRMS Employee IDஐ பதிவேற்றம்‌ செய்தல்‌ - அறிவுரைகள்‌ வழங்குதல்‌- தொடர்பாக...


பார்வை : தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ இணை செயல்முறைகள்‌ ந.க.எண்‌.0434437/பிடி1/இ2/2022, நாள்‌.28.12.2022


பார்வையில்‌ காணும்‌ செயல்முறைகளின்‌ படி தமிழ்நாட்டில்‌ உள்ளா அரசு/அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ தலைமை ஆசிரியர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியல்லாத பணியாளர்களது, பணிப்பதிவேடுகளில்‌ ஈட்டிய விடுப்பு, மருத்துவச்‌ சான்றின்‌ பேரில்‌ ஈட்டா விடுப்பு மற்றும்‌ இதர பதிவுகள்‌ நாளது தேதிவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதை 07.01.2023க்குள்‌ உறுதி செய்திட வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டது.


ஆனால்‌ இப்பணி முழுமையாக நிறைவு பெறாத நிலை சில மாவட்டங்களில்‌ உள்ளது கவனத்திற்கு தெரிய வருகிறது. அதனால்‌ 21.01.2023 வரை இப்பணியினை மேற்கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. 21.01.2023 அன்று இதற்கான சிறப்பு முகாம்‌ சம்பந்தப்பட்ட பள்ளிகள்‌/அலுவலகங்களில்‌ நடைபெறும்‌. அதற்குப்‌ பிறகு கால அவகாசம்‌ வழங்கப்பட மாட்டாது என்பதால்‌, ஆசிரியர்கள்‌, தலைமை ஆசிரியர்கள்‌ சம்பந்தப்பட்ட பள்ளிகள்‌/அலுவலகங்களுக்குச்‌ சென்று பணிப்பதிவேட்டிலுள்ள பதிவுகளை சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும்‌.


பணிப்பதிவேட்டில்‌ உள்ள பதிவுகளை சரிபார்த்த பின்னர்‌ மேற்கொள்ள வேண்டிய பணிகள்‌ :-


1) ஆசிரியர்கள்‌, தலைமை ஆசிரியர்கள்‌ தங்களின்‌ பணிப்பதிவேட்டில்‌ உள்ள பதிவுகளை சரிபார்த்த பின்னர்‌ கீழ்க்கண்ட நடைமுறையினைப்‌ பின்பற்றி தங்களின்‌ கணக்கில்‌ உள்ள ஈட்டிய விடுப்பு, மருத்துவச்‌ சான்றின்‌ பேரில்‌ ஈட்டா விடுப்பு இருப்பின்‌ எண்ணிக்கையை TNSED Schools App-ல்‌ பதிவேற்றம்‌ செய்தல்‌ வேண்டும்‌.


* Login to TNSED Schools App

* Click on e-Profile > Leave Management > My Leaves

* Click on the Leave balance to edit the balance with correct numbers

* Please read the alerts and click on submit


2) ஆசிரியர்கள்‌/தலைமை ஆசிரியர்களின்‌ இருப்பில்‌ உள்ள விடுப்பினை பதிவேற்றம் செய்திட My leaves section TNSED Schools App -ல்‌. ஜனவரி 10ம்‌ தேதி enable செய்யப்படும்‌ .


3) அதனைத்‌ தொடர்ந்து பதிவேற்றம்‌ செய்யப்பட்ட இருப்பில்‌ உள்ள விடுப்பு விபரங்களை சரிபார்த்து ஒப்புதல்‌ வழங்குவதற்காக TNSED Schools App மற்றும்‌ emis.tnschools.gov.in ஜனவரி 24ம்‌ தேதி enable செய்யப்படும்‌. 


4) ஆசிரியர்கள்‌; தலைமை ஆசிரியர்கள்‌ தங்கள்‌ இருப்பில்‌ உள்ள விடுப்பு எண்ணிக்கையினை  பதிவேற்றம்‌ செய்த பின்னர்‌ சம்பளம்‌ பெற்று வழங்கும்‌ அலுவலர்‌ (DDO) அல்லது பணிப்பதிவேடு பராமரிக்கும்‌அலுவலர்‌ நிலையில்‌ இருப்பில்‌ உள்ள விடுப்பு எண்ணிக்கையினை சரிபார்த்து ஒப்புதல்‌ அளித்திடவேண்டும்‌. 


உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளின்‌ ஆசிரியர்கள்‌, ஆசிரியல்லாத பணியாளர்கள்‌ சார்ந்த விடுப்பு விபரங்களை தலைமை ஆசிரியர்‌ நிலையில்‌ கீழ்க்கண்ட நடைமுறையைப்‌ பின்பற்றி சரிபார்த்து ஒப்புதல்‌ வழங்க வேண்டும்‌.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...