கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பட்ஜெட் 2023 - வருமான வரி உச்சவரம்பு மாற்றம் - உள்ளிட்ட முக்கிய தகவல்களின் தொகுப்பு (Budget 2023 - Income Tax Ceiling Change - A compilation of key information)...

பட்ஜெட் 2023 - வருமான வரி உச்சவரம்பு மாற்றம் - உள்ளிட்ட முக்கிய தகவல்களின் தொகுப்பு (Budget 2023 - Income Tax Ceiling Change - A compilation of key information)...


 பட்ஜெட் 2023: வருமான வரி உச்சவரம்பு மாற்றம்


பழைய வருமான வரி திட்டத்தில் வரி செலுத்துவோருக்கான அடுக்குகள் - 2023-2024ஆம் நிதியாண்டு (2024-2025ஆம் மதிப்பீட்டு ஆண்டு):


0-3 லட்சம் - 0%

3- 6 லட்சம் - 5%

6- 9 லட்சம் - 10%

9-12 லட்சம் - 15%

12-15 லட்சம் - 20%

15 லட்சத்திற்கு மேல் - 30%


- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 



பட்ஜெட் 2023: வருமான வரி உச்சவரம்பு மாற்றம்


புதிய வருமான வரி திட்டத்தில் ஆண்டுக்கு 7 லட்சம் வரை சம்பளம் வாங்குவோர் இனி வருமான வரி செலுத்த தேவையில்லை.


பழைய வருமான வரி திட்டத்தில் வரி செலுத்துவோருக்கான அடுக்குகள்:


0-3 லட்சம் - 0%

3- 6 லட்சம் - 5%

6- 9 லட்சம் - 10%

9-12 லட்சம் - 15%

12-15 லட்சம் - 20%

15 லட்சத்திற்கு மேல் - 30%


- நிதியமைச்சர் அறிவிப்பு.




விலை குறையும் பொருட்கள்!


லித்தியம் ஐயான் பேட்டரி இறக்குமதி வரி குறைப்பட்டுள்ளது. டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5% குறைப்பு. இதனால் டிவி, செல்போன் மற்றும் மின்சார வாகனங்கள் விலை குறையும்.


சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது. குறிப்பிட்ட சில மொபைல் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைக்கப்படுகிறது. இதனால் இதன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு டெபாசிட் வரம்பு ரூ. 15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக அதிகரிப்பட்டுள்ளது.


பட்ஜெட் 2023: பிணையில்லா கடன்


ஏப்ரல் 1 முதல் சிறு, குறு நிறுவனங்களுக்கு பிணையில்லா கடன் வழங்கப்படும். அதற்கான ரூ. 9000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


- பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு



பட்ஜெட் 2023: தொழில்நுட்பம்!


5ஜி சேவைக்கான செயலிகளை உருவாக்க இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 100 ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும்.


செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கு 3 மையங்கள் தொடங்கப்படும்.


- பட்ஜெட்டில் அறிவிப்பு


மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை அகற்ற மத்திய மாநில அரசுகள் சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.


இயற்கை விவசாயம்!


ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயம் நோக்கி வழிநடத்துவோம். இயற்கை உரங்கள் பயன்படுத்து ஊக்குவிக்கப்படும்.


மின்னணு நீதிமன்ற 2ம் கட்டப்பணிகளுக்கு ரூ. 7000 கோடி ஒதுக்கீடு.


நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு. 


போக்குவரத்து துறைக்கு ரூ. 75,000 கோடி ஒதுக்கீடு.




சிகரெட் மீதான சுங்க வரி உயர்வு!


சிகிரெட் மற்றும் மற்ற புகையிலைப் பொருட்களும் விலை உயர்கிறது.  16 சதவீதம் வரை வரி உயர்த்தப்படும் என அறிவிப்பு


பட்ஜெட் 2023: நிதிபற்றாக்குறை


மொத்த ஜிடிபியில் நிதிபற்றாக்குறை 5.9 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.


மனிதர்களால் மனிதக் கழிவுகள் அகற்றும் நிலை மாற்றப்பட்டு, நாடு முழுவதும் இயந்திரங்களால் கழிவுகள் அகற்றும் முறை கொண்டுவரப்படும்.


கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணியில் 100% இயந்திரங்களை பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.


இளைஞர்கள் எதிர்காலம், திறன் வளர்ப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும். தொழில்துறை தேவையையும் இளைஞர்களையும் திறனையும் ஒருங்கிணைக்க `30 ஸ்கில் இந்தியா மையங்கள்' அமைக்கப்படும். ஏஐ, கோடிங் உள்ளிட்ட புதிய திறன் பயிற்சிகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.


சிறுதானியங்கள் உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள மிகவும் உதவுகின்றன. அந்த வகையில் சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். தினை ஏற்றுமதியில் இந்தியா 2-வது இடத்தில் இருப்பது பெருமை கொள்ள வேண்டிய விஷயம் என்று தெரிவித்துள்ளனர்.


பசுமை வளர்ச்சி: 2070 -க்குள் ஜிரோ எமிஷன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


வாலன்டரி செட்டில்மென்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.


டிஜிட்டல் லாக்கர் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.


5ஜி ஆப் டெவலப்மென்டுகளுக்கு 100 ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும்.


தற்போதுள்ள மருத்துவ கல்லூரிகளுடன் சேர்த்து, 4 மண்டலங்களில் 157 புதிய நர்ஸிங் கல்லூரிகள் அமைக்க திட்டம்.


வேளாண்மை கடன் சங்கங்கள் மூலமும் விவசாயிகளுக்கு ரூ.63 கோடி கடன் கொடுக்க திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு.


அரசு நிர்வாக நடவடிக்கைகளை நம்பிக்கை அடிப்படையில் மேம்படுத்த ஜன் விஷ்வாஸ் மசோதா கொண்டு வரப்பட உள்ளது. ஸ்டார்ட் அப்களுக்கான தேசிய தரவுகள் நிர்வாக கொள்கை கொண்டுவரப்படும்.


டிஜிட்டல் இந்தியா இலக்குக்கு கேஒய்சி நடவடிக்கைகள் எளிமைப்படுத்தப்படும்.


டிஜிட்டல் தொடர்பான சேவைகளுக்கு பான் கார்ட் பொதுவான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.


அரசு ஊழியர்கள் தங்களின் திறனை ஆன்லைன் மூலம் வளர்த்துக் கொள்ள கர்மயோகி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு.


நகர மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுக்கும் மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.


மாநிலங்கள் உட்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த தேவையான கடன்களைப் பெறுவதற்கான வழிவகை செய்யப்படும்.


வறட்சி சமாளிப்பு, குடிநீர் வசதி மற்றும் விவசாயிகளுக்கு ரூ.5,300 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு.


பழங்குடியின குழந்தைகளுக்கு 'ஏகலைவா' கல்வித்திட்டம் தொடங்கப்படும். அனைத்து பழங்குடியின மக்களுக்கும் குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புறம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்காக ஏகலைவா பள்ளிகளில் புதிதாக 38,800 ஆசிரியர்கள் ஆதிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என அறிவிப்பு.


மாணவர்கள், இளைஞர்களின் அறிவுத் தேடலை மேம்படுத்த தேசிய டிஜிட்டல் லைப்ரரி திட்டமிடப்படும். மேலும் படிப்பறிவு வளர்ச்சியில் இயங்கும் என்.ஜி.ஓக்களுடன் இணைந்து லைப்ரரிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.


பார்மா துறையில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.


இந்தியாவில் Sickle cell anemia ஒழிக்கும் மிஷன் திட்டமிடப்படும்.


மருந்து துறையில் ஆய்வுகளை அதிகரிக்க ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும்" என அறிவிப்பு.



மத்திய பட்ஜெட் 2023 : 7  முக்கிய இலக்குகள்...

1.எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி


2.ஏழைகளின் முன்னேற்றம்


3.பசுமை வளர்ச்சி


4.பழங்குடியினர் மேம்பாடு.


5. விவசாயிகள், பெண்கள் வளர்ச்சி


6.இளைஞர்களின் எதிர்காலம்


7. உட்கட்டமைப்பு வளர்ச்சி.


விவசாயத் துறையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நிதி ஒதுக்கப்படும்..


மீனவர் நலனுக்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு..


நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் குறித்து தரவு தளம் உருவாக்கப்படும்..


அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும்.


தோட்டகலைத்துறைக்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு.


தனிநபர் வருமானம் 9 வருடங்களில் இரட்டிப்பாகி ரூ.1.97 லட்சமாக அதிகரித்துள்ளது..


விவசாயத் துறையில் ஸ்டாட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நிதி ஒதுக்கப்படும் என அறிவிப்பு..


வரும் 2023-2024-ம் நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயம்...


விவசாயக் கடன் வளர்ச்சி இலக்கு 20 லட்சம் கோடியாக உயர்வு.


இந்தக் கடன்கள் கால்நடை வளர்ப்பு, பால் சார்ந்த தொழில்கள் மற்றும் மீன்வளத்துறை ஆகியவற்றில் கவனம் செலுத்தக்கூடியதாக இருக்கும்.


சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


4 மண்டலங்களில் 157 புதிய நர்ஸிங் கல்லூரிகள் அமைக்க திட்டம்.


இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருப்பாதால், இந்திய உலக நாடுகளின் தரவரிசையில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது..


ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கடைகோடி மக்களுக்கும் சேவை உள்ளிட்ட 7 முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் அமைந்துள்ளன என நிர்மலா  சீதாராமன் தெரிவித்துள்ளார். 


பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் தொழில்துறையினருக்கு ஏற்ற பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்" - நிர்மலா சீதாராமன் உறுதி!


உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா இருக்கிறது. இந்திய தனிநபர்களின் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது.


பொருளாதாரத்தை நிலையாக வைத்திருப்பதற்கான வலிமையும், இளைஞர்களின் எதிர்காலத்துக்கு நிறைய வாய்ப்புகளையும் இந்தியப் பொருளாதாரம் கொண்டிருக்கிறது. தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.97 லட்சம் என இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.


11.74  கோடி வீடுகளுக்கு டாய்லெட்,


9.6 கோடி உஜ்வாலா கேஸ் கனெக்‌ஷன்,


47.5 கோடி ஜன் தன் வங்கிக் கணக்கு,


44.5 கோடி பேருக்கு காப்பீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.


Income up to Rs 7 lakh will not be taxed. Only if you are under the New Tax Regime. 


Income Tax slabs announced


Tax rates under the Old Tax Regime will be


0-3 lacs - Nil

3-6 lacs will be 5%

6-9 lacs will be10%

9-12 lac lacs will be15%

above 15 Lac will be 30%


AMRIT KAAL பட்ஜெட் என்றால் என்ன?

அம்ரித் கால் என்ற வார்த்தையை தொடர்ச்சியாக பிரதமர் மோடி பயன்படுத்திவருகிறார். பட்ஜெட் உரையைத் தொடங்கிய நிதியமைச்சர்.


நிர்மலா சீதாராமனும் தனது பட்ஜெட் உரையில் 2023-24 பட்ஜெட் 'அம்ரித் கால்' இலட்சியத்தின் முதல் பட்ஜெட் என்று கூறியுள்ளார். அம்ரித் கால் என்றால் 'புதிய தொடக்கம்' என்று பொருள். இந்தியா @100 என்ற இலக்கை முன்வைத்து புதிய பாய்ச்சலுக்கு முன்னெடுக்கும் பட்ஜெட் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...