கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.03.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.03.2023 - School Morning Prayer Activities...

 

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பொறை உடைமை


குறள் எண் : 160

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொ னோற்பாரிற் பின்.


பொருள்:

பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.


பழமொழி :

Never blow hot and cold in the same breath


முன்னுக்குப்பின் முரணாய்ப் பேசாதே. 


இரண்டொழுக்க பண்புகள் :


1. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.


 2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்


பொன்மொழி :


வெற்றி பெற்றபின் அமைதியாக இருப்பவன், பலமுறை வென்ற மனிதன் ஆகிறான்.


பொது அறிவு :


1. தமிழ் மகள் என்று அழைக்கப்படுபவர் யார்?


 ஔவையார்.


 2. 'முர்ரா 'என்பது என்ன?


 எருமையின் உயர் ரக இனம். 


English words & meanings :


 impassable – impossible to travel through or go through.the narrow channels are impassable to ocean-going ships. adjective. 

1. கடந்து செல்ல முடியாத

2. ஊடுருவிச் செல்ல முடியாத. பெயரடை 

ஆரோக்ய வாழ்வு :


கோடையில் விலைக் குறைவில் கிடைக்கும் மற்றொரு ஒரு உணவுப் பொருள் தான் தக்காளி. என்ன தான் தக்காளி அனைத்து பருவ காலங்களில் கிடைத்தாலும், கோடைக்காலத்தில் விலைக் குறைவாக கிடைக்கும். தக்காளியில் மற்ற உணவுகளை விட அதிகளவில் வைட்டமின் சி உள்ளன. இந்த வைட்டமின் சி, நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகின்றன. தக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை புற்றுநோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகின்றன. முக்கியமாக தக்காளியை ஒருவர் சமையலில் சேர்ப்பது மட்டுமின்றி, அவற்றை பச்சையாகவும் சாப்பிடலாம், ஜூஸ் வடிவிலும் உட்கொள்ளலாம்.


கணினி யுகம்


F2


Rename the selected item.


F3


Search for a file or folder in File Explorer.


மார்ச் 21


பன்னாட்டு வன நாள் (International Day of Forests) 







பன்னாட்டு வன நாள் (International Day of Forests) எனப்படும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் சர்வதேசம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2012, நவம்பர் 28 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் நிறுவப்பட்ட இந்நாளை, பல நாடுகள் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறது.



உலகக் கவிதை நாள் (World Poetry Day) 


உலகக் கவிதை நாள் (World Poetry Day) என்பது ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது, உலகம் முழுவதும் கவிதை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் மற்றும் போதனை செய்யவும், ஊக்குவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ எனும் ஐக்கிய பண்பாட்டு நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.


உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) 



உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) ஆண்டு தோறும் மார்ச் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம், பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலையாகும். இது 'கூத்து' வகையை சேர்ந்தது. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. நாட்டுப்புற மரபுரிமைகளிடையில் ஒரு தனிப்புகழை கொண்டுள்ள தொடர்பாடல் ஊடகமாகவே இப் பொம்மலாட்டத்தை அறிமுகப்படுக்கலாம். இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிற திரைப்படத்தின் மூதாதையாகவும் இந்த கலை கருதப்படுகின்றது.


இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Racial Discrimination) 


இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Racial Discrimination) ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைபிடிக்கப்படுகின்றது. 1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாளில் தென்னாப்பிரிக்காவின் ஷாடெங்கிலுள்ள ஷார்ப்வில் நகர்ப்புறத்தில் நிகழ்ந்த, இனவொதுக்கலுக்கு எதிரான அமைதிப்பேரணியின்போது அந்நாட்டுக் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டனர்.


எல்லா வகை இனப்பாகுபாட்டையும் ஒழிக்க முயற்சிசெய்யுமாறு பன்னாட்டுச் சமூகத்தை வேண்டிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1966 ஆம் ஆண்டில் மார்ச் 21-ஐ இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாளாக அறிவித்தது.


நீதிக்கதை :


ஒரு ஒட்டகம் காட்டில் தவம் மேற்கொண்டிருந்தது. அந்தத் தவத்தின் பெருமையை உணர்த்த பிரம்ம தேவர் ஒட்டகத்திற்குக் காட்சியளித்தார். என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். 


இருந்த இடத்தில் இருந்த படியே உணவைப் பெரும் வகையில் என் கழுத்து நீண்டதாக இருக்க வேண்டும். அந்த நீளமான கழுத்தோடு நான் காட்டில் உலா வர வேண்டும் என்று கேட்டது. அவ்வாறே பிரம்ம தேவர் வரமளித்தார். அந்த வரத்தைப் பெற்ற பின் ஒட்டகம் உணவிற்காக அதிகம் முயற்சிக்கவில்லை. நீண்ட கழுத்துடன் எங்கும் திரிந்தது. உணவு எளிதாகக் கிடைத்தது. இதனால் சோம்பல் உற்றது ஒட்டகம். 


ஒருநாள் ஒட்டகம் அப்படி உலவிக் கொண்டிருந்த போது பெருங்காற்று வீசியது. மழை பெய்தது. அறிவற்ற அந்த ஒட்டகம் தன் தலையை ஒரு குகையில் நீட்டிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மழைக்குப் பயந்து தன் மனைவியுடன் ஒரு நரி அந்தக் குகைக்குள் நுழைந்தது. 


குளிராலும் பசியாலும் வாடிய நரித் தம்பதியர்க்கு மிகப் பெரிய வாய்ப்பாக ஒட்டகத்தின் கழுத்து உணவாக அமைந்தது. ஒட்டகத்தின் இருபுறமும் இருந்துக் கொண்டு நரிகள் ஒட்டகத்தின் கழுத்தைக் கடித்து வேண்டிய அளவு மாமிசத்தைப் ருசித்தன. 


தனக்கு நேர்ந்த ஆபத்தை உணர்ந்த ஒட்டகம் தனது கழுத்தை சுருக்க முயற்சித்தது. நீண்ட கழுத்தைச் சுருக்க அரும்பாடுபட்டது. அதற்குள் நரிகள் ஒட்டகத்தின் கழுத்துப் பகுதி முழுதும் சாப்பிட்டு விட்டன. ஒட்டகம் மாண்டு போயிற்று. 


நீதி :



சோம்பல் சில சமயம் உயிருக்கு ஆபத்தாக மாறி விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.


இன்றைய செய்திகள்


21.03. 2023


* தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.


* ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வட்டங்களில் உள்ள 80,567 ஹெக்டேர் வனப்பரப்பில் “தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்” என்னும் புதிய சரணாலயத்தை அரசு ஏற்படுத்தும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.


* இந்தியாவில் ஒரே நாளில் 918 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


* ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்பிகளின் தொடர் அமளியால் இன்றும் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் தொடர்ந்து 6-வது நாளாக எந்த அலுவல்களும் நடைபெறாமல் நாடாளுமன்றம் முடங்கியது.


* நெருக்கம் காட்டும் சவுதி - ஈரான்; பின்னணியில் சீனா - ‘கவனிக்கும்’ உலக நாடுகள்.


* பெண்கள் உலக குத்துச்சண்டை: 2-வது சுற்றில் இந்தியாவின் நிகாத் ஜரீன், மனிஷா வெற்றி.


* இந்திய நடைபந்தய வீரர்கள் விகாஷ், பரம்ஜீத் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி.


Today's Headlines


* An allocation of Rs.40,299 crore has been made for the school education department in the Tamil Nadu budget.


* The budget announced that all schools functioning under various departments like Adi Dravidian and Tribal Welfare Department, Backward, Most Backward and Minority Welfare Department, Hindu Religion and Charitable Institutions Department, and Forest Department will be brought under the School Education Department.


 * An announcement in the budget that the government will set up a new sanctuary called "Father Periyar Wildlife Sanctuary" on 80,567 hectares of forest land in Andhiyur and Kopichettipalayam circles in Erode district.


 * According to the Union Ministry of Health, 918 people have been infected with corona infection in a single day in India.


 * Both Houses of Parliament were adjourned for the whole day today due to continuous violence by the ruling and opposition MPs.  As a result, the Parliament was paralyzed for the 6th consecutive day without any business taking place.


 * Saudi-Iran rapprochement;  China in the background - the 'watching' nations of the world.


 * Women's World Boxing: India's Nikath Zareen beat Manisha in Round 2


 * Indian runners Vikash, and Paramjeet qualify for the Olympics

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns