கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) போட்டியின் வழிமுறைகள், தேர்வின் அமைப்பு, பாடத்திட்டம் & மாதிரி வினாக்கள் (Dream Teacher Competition Procedures, Exam Structure, Syllabus & Model Questions)...



கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) போட்டியின் வழிமுறைகள், தேர்வின் அமைப்பு, பாடத்திட்டம் & மாதிரி வினாக்கள் (Dream Teacher Competition Procedures, Exam Structure, Syllabus & Model Questions)...


 கனவு ஆசிரியர் போட்டியின் வழிமுறைகள்


Reg.No: xxxxxxxxxxx

Paper Name: 

தேர்வு தேதி : ஏப்ரல் 1, 2023 .

தேர்வு நேரம் : 11:30 AM to 12:15 PM

தேர்வின் கால அளவு: 45 நிமிடம்

விண்ணப்பதாரர்கள் தங்களின் EMIS பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பதிவு ஐடி அவர்களின் சோதனைத் திரையின் மேல் வலது மூலையில் காட்டப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்து உறுதிசெய்ய வேண்டும். தேர்வர் ID நீங்கள் பதிவு செய்த போது பெறப்பட்ட ID எண்ணிலிருந்து வேறுபட்டு இருக்கும் அதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டாம். ஏனெனில் இந்த எண்ணானது கணினியின் மூலம் உருவாக்கப்பட்ட தோராயமான எண் ஆகும்.



 

தேர்வின் அமைப்பு

 

சோதிக்கப்படும் திறன்கள்

#வினாக்கள் 

#மதிப்பெண்கள் 

பொதுவான கற்பித்தலியல் 12 20

பணித்திறன்கள் & தகவல் தொடா்புகள் 10 15


பாடத்திட்டம்

  

கற்பித்தலியல்

கற்பித்தல் முறைகள்

குழந்தைகளை ஈடுபடுத்தும்வகையில் பல்வேறு கற்பித்தல் அணுகுமுறைகளைச் செயல்படுத்துதல்.

திறம்பட வினா தொடுத்தல்

பாடக்கருத்துகளை மாணவர்கள், புரிந்துகொண்டனர் என்பதை அறிய சிந்தனையைத் தூண்டும்வகையில் வினாக்களைக் கேட்டல். வீட்டுப்பாடம் மற்றும் ஒப்படைப்புகள் அளித்தல்

பாடக் கற்பித்தலுக்குத் திட்டமிடல்

எதுவும் விடுபடாதவகையிலும் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும்வகையிலும் பாடக் கற்பித்தலுக்குத் திட்டமிடுதல்.

மதிப்பீடுகளின்

மதிப்பீடுகளின் நோக்கம்

பாடம், மாணவர்களின் தரநிலை ஆகியவற்றிற்கு ஏற்ப வேறுபட்ட மதிப்பீட்டு முறைகளை மேற்கொள்ளுதல்.

கற்றல்

கற்றல் கோட்பாடுகள்

பல்வேறு கற்றல் கோட்பாடுகளைக் கருத்தில் கொண்டு பாடத்தைத் திட்டமிட்டுக் கற்பித்தல்.

கற்போரின் பன்முகத்தன்மை

கற்போரின் பன்முகத்தன்மை, கற்கும் தன்மை ஆகியவற்றை மனத்தில் கொண்டு அனைத்துக் குழந்தைகளுக்கும் ஏற்றவாறு பாடங்களை வடிவமைத்தல், உரிய திறன்கள் பெறுவதை உறுதிசெய்தல்.

தகவல் தொடர்பு

திறம்படக் கேட்பது, பேசுவது, படிப்பது மற்றும் எழுதுவது போன்ற தகவல் தொடர்புத் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருதல்.


குறைதீர்த்தல்

குறைதீர்க்கற்பித்தலுக்கு உதவும்வகையில் மதிப்பீட்டைச் செய்தல்

குழந்தைகளின் நிலையறிந்து அவர்களுக்கு உதவும்வகையிலான சரியான மதிப்பீட்டுக் கூறுகளை வடிவமைத்துச் செயல்படுத்துதல்

குழுப்பணி மற்றும் தலைமைத்துவம்

இணைந்து கற்றல்

அனைத்துநிலை பாடம் மற்றும் வகுப்புகளுக்கிடையேயான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை அறிந்து செயல்படுத்துதல்

குழுக்களில் திறம்படச் செயல்படுதல்

பின்னூட்டம்

வளர்ச்சிக்கு வழிவகுக்கும்விதமான ஆக்கபூர்வமான பின்னூட்டங்களை வழங்குதல் மற்றும் பெறுதல்

தலைமைத்துவம்

சூழல், பணி மற்றும் குழுவின் தன்மை ஆகியவற்றிற்கு ஏற்பப் பல்வேறு தலைமைத்துவ பாணிகளைப் பின்பற்றுதல்

திறன் மிக்கக் குழுக்களை உருவாக்குதல் மற்றும் வளர்த்தல்


மாதிரி வினாக்கள்   

பணித்திறன்கள் & தகவல் தொடர்பு கொள்ளும் திறன்கள்

வினா 1


நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாடங்களுக்குமான பொதுவான பாடப்பொருளை முடிவு செய்ய ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. அறிவியல் ஆசிரியர் ஜான்: "இயற்கைப் பேரழிவுகள்' என்பது நல்லதொரு தலைப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்!" என்றார். ஆங்கில ஆசிரியர் அன்வர்: "நல்ல தலைப்பு! பேரழிவுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் மனித உணர்வுகள் குறித்த உரையை என்னால் எழுதமுடியும்” என்றார். கணித ஆசிரியை அனிதா: "இத்தலைப்பு, அனைத்துப் பாடங்களுக்கும் பொருந்துமா எனத் தெரியவில்லை ... இந்த தலைப்பின் மூலம் நான் புள்ளிவிவரங்களையும் நிகழ்தகவுகளையும் கற்பிக்க முடியுமா?" என்றார். கூட்டத்திற்குப் பிறகு, இயற்கைப் பேரழிவுகள் என்ற தலைப்பினைத் தாங்கள் ஒருங்கிணைந்து தேர்வு செய்ததாக ஜான் ஒருங்கிணைப்பாளரிடம் சுருக்கமாகக் கூறினார். உங்கள் புரிதலின்படி, கலந்துரையாடலில் யார் ஒருங்கிணைந்து ஒத்துழைத்தார்கள்?

  

  

திரு .ஜான்   1      

திரு .ஜான் மற்றும் திரு.அன்வர்   2    

திரு.அன்வர் மற்றும் செல்வி.அனிதா   3    

திரு .ஜான் , திரு.அன்வர் மற்றும் செல்வி.அனிதா   4    RA  


வினா 2


வேறுபட்ட மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்க ஆசிரியர் தெரிவு செய்யப் பயன்படுத்தும் cold-calling எனப்படும் வகுப்பறை மேலாண்மை உத்தியைப் பயன்படுத்துவதற்கான சிறந்த எடுத்துக்காட்டு பின்வருவனவற்றில் எது?

  

  

செல்வி. கீதா, மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்ட இதுவரை கற்பிக்காத ஒரு தலைப்பில் இருந்து மாணவர்களிடம் வினாக்களைக் கேட்கிறார்.   1      

செல்வி.பாத்திமா ஒரு வினாவை வினவியப்பின் மாணவர்களிடம் கைகளை உயர்த்தச் சொல்கிறார்; பின்பு, கையை உயர்த்தாத மாணவர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார்.   2    

திரு. தாஸ் மாணவர்களின் பெயர்கள் எழுதிய ஐஸ்கிரீம் குச்சிகளைப் பயன்படுத்துகிறார், மேலும் ஒவ்வொரு முறை வினாக்களைக் கேட்கும்போதும் ஒரு குச்சியை வெளியே எடுத்து மாணவரைத் தேர்ந்தெடுக்கிறார்.   3    RA  

திரு. சிவா, ஒரு மாணவனைத் தேர்ந்தெடுத்து, அவர் கேட்ட வினாவுக்குப் பதிலளிக்க மற்றொரு மாணவரின் பெயரைச் சொல்லுமாறு கூறி அந்த மாணவரைக் கேட்கிறார்.   4    


பொது கற்பித்தலியல்

வினா


கீழே கொடுக்கப்பட்ட தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்திய சூழல் எது?

  

  

கணினி மென்பொருள்கள் குறித்த பயனுள்ள உயர்நிலை ப்படிப்புகளில் சேரும்படி (சேர்க்கை பெறும்படி) குழந்தைகளிடம் கூறுதல்   1      

வகுப்பறையில் பாடப்பொருளின் உள்ளடக்கப் பயன்பாட்டைச் செய்துகாட்ட, குறிப்பிட்ட காணொளலியை குழந்தைகளுடன் பகிர்தல்   2    RA  

பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் பரிந்துரைக்கப்பட்ட பாடப்புத்தகத்தின் மின்னணு பதிப்பை அனுப்புதல் மற்றும் அதிலுள்ள குறிப்பிட்ட பக்கங்களைப் படிக்கக் கூறுதல்   3    

மாணவர் வருகைப் பதிவைக் கண்காணிக்க பள்ளியின் கற்றல் மேலாண்மை அமைப்பைப் பயன்படுத்துதல்   4






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Kanavu Aasiriyar Contest Guideline

Reg.No: 

Paper Name: 

Test time : 11:30 AM to 12:15 PM

Test duration: 45 minutes

Candidates must check and ensure that their registration ID as provided on their EMIS page is displayed on the top right corner of their test screen.

The candidate ID provided below the registration ID is a randomly generated number, you can ignore the same.




Structure of the test

Competency to be tested

#Questions 

#Marks 

General pedagogy 12 20

Professional competencies & Communication 10 15


Syllabus

  

Pedagogy

Teaching methods

Adopting different teaching methodologies that bring out the core content of the subject in an engaging manner

Effective Questioning

Asking questions during class (checks-for-understanding) and after class (through homework and assignments) that push students’ thinking

lesson planning

Lesson planning should be done to trigger students thought processes while not missing out on any part of the curriculum

Assessments

Purpose of assessments

Different types of assessments are made according to the topic and grade level of the students

Learning

Learning Theories

Awareness of different learning theories and how to utilise them when planning and executing lessons

Learner diversity

Awareness of learner diversity, learning styles and how to ensure that all students learn and gain through lessons

Communication

creating opportunities to develop communication skills like effective listening, speaking reading and writing

Remediation

Making assessment that helps for remedial teaching

Understanding the child’s situation and designing the assessment based on that

Teamwork and Leadership

Collaboration

Importance of collaboration within and across grade and subject teams

Working effectively in groups

Feedback

How to give and receive constructive feedback in a manner that leads to growth

Leadership

Different leadership styles depending on the context, nature of work and the nature of the team 

Building and growing effective teams

Sample questions

Professional Competencies and Communication

Question 1


A teachers' meeting was held to decide a common theme to be used across all middle school subjects. Science teacher Mr. John: "I think 'natural disasters' would be a good topic!" English teacher Mr. Anwar: "Good topic! I can take up text on human emotion in the face of disasters." Maths teacher Ms. Anita: "I am not sure if it can be relevant for all subjects... though maybe I can teach statistics and probability through this topic?" After the meeting, Mr. John summarised for the co-ordinator that they had collectively decided on the topic of natural disasters. As per your understanding, who was being collaborative in the discussion?

  

  

Mr. John   1      

Mr. John and Mr. Anwar   2    

Mr. Anwar and Ms. Anita   3    

Mr. John, Mr. Anwar and Ms. Anita   4    RA  


Explanation for the RA: Mr. John takes the lead by suggesting the topic. Mr. Anwar thinks creatively about how he could use the topic in his English class. Ms. Anita suggests that she could bring in probability and statistics through the topic. Thus, each teacher looked at how they could come together to make a single topic work for all their subjects.


Question 2


Which of the following is the best example of a teacher using the classroom management technique called 'cold-calling'?

  

  

Ms. Geeta asks students questions on a topic that she has not yet taught to gauge students' interest.   1      

Ms. Fatima asks a question and asks students to raise their hands; she picks someone who has not raised their hand.   2    

Mr. Das uses ice-cream sticks with students' names on them and pulls out one each time he asks questions.   3    RA  

Mr.Shiva picks a student and asks this student to name another student to answer the question he has asked.   4    


Explanation for the RA: Mr. Das’ technique is a classic example of cold-calling since his method is based on randomisation. In Ms. Fatima’s and Mr. Shiva’s case, the method is not truly random. Ms. Geeta’s approach is not connected to cold calling or any kind of selection mechanism.

General Pedagogy

Question


Which of the following makes the BEST use of technology to supplement classroom instruction?

  

  

Asking children to enrol for an advanced course on useful computer softwares   1      

Sharing specific video content with children that demonstrates the application of a concept covered in the classroom   2    RA  

Sending an ebook version of the prescribed textbook to parents and children and asking them to read specific pages   3    

Using the school's learning management system to track student attendance data   4    


Explanation for the RA: Since the video content being shared is specific to the classroom content covered and is application-focused, it will best supplement classroom instruction. The other suggestions are disconnected from classroom instruction and will not supplement it as such.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Centennial Schools - District wise

  நூற்றாண்டு பள்ளிகளின் பட்டியல் - மாவட்ட வாரியாக  List of Centennial Schools - District wise  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவு...