கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று ( 02.04.2023 ) திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ (JACTTO GEO) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மற்றும் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கீழ்கண்ட போராட்ட இயக்கங்களை நடத்துவது என தீர்மானம் (Resolutions) முடிவாற்றப்பட்டது (Today (02.04.2023) in JACTTO GEO State Coordinators Meeting and State High Level Committee Meeting held in Trichy, it was decided to conduct the following protest movements to insist on fulfilling the livelihood demands of Tamil Nadu Government Employees and Teachers)...

*1. நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிரந்தர அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஒரு லட்சத்திற்கு மேல் ஊதியம் வாங்குகிறார்கள். தொகுப்பூதிய பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை வாங்குகிறார்கள் என்று சொல்லி அவுட்சோர்சிங் நியமனங்களை முன்னெடுப்பதற்கான முன் மொழிவுகளை தமிழ்நாடு முதலமைச்சரை வைத்துக்கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பேசியதைக் கண்டித்து கண்டனத் தீர்மானம் ஏகமனதாக இயற்றப்பட்டது.

*2. எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தினை கூட்டி ஏப்ரல் 7, 8, 9 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் இயக்கத்தை சிறப்பாக நடத்துவது குறித்து திட்டமிடக்கூடிய கூட்டத்தினை நடத்துவது என்று முடிவாற்றப்பட்டது.

*3. எதிர்வரும் ஏப்ரல் 7, 8, 9 ஆகிய தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்குவது என்று முடிவாற்றப்பட்டது.

*4. எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் தேதி நமது வாழ்வாதாரக் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தும் வகையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என்றும் முடிவாற்றப்பட்டது.

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை களத்தில் தீவிரமாக அமல்படுத்தி நமது கோரிக்கைகளை வென்றெடுப்போம். 

ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்!

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...