கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

JACTTO GEO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
JACTTO GEO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

March 30! Whose deadline is it? DMK's? JACTO-GEO's?

 

 மார்ச் 30! யாருக்கான இறுதிக் கெடு? திமுகவிற்கா? ஜாக்டோ-ஜியோவிற்கா?


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


March 30! Whose deadline is it? DMK's? JACTO-GEO's?


*இந்த இறுதிக் கெடு JACTTO-GEOவிற்கும் சேர்த்துத்தான்*.  மார்ச் 30க்குள் நியாயமான வாழ்வாதாரக் கோரிக்கை எதையும் MKS நிறைவேற்ற 99.9% வாய்ப்பேயில்லை.


ஒருவேளை மார்ச் 30ல் JACTTO-GEO கூடினால். . . *JACTTO-GEOவில் உள்ள திமுக மோகத்தினரை அடக்கிவைத்துவிட்டு* அடுத்தகட்ட உண்மையான & தீவிரமான களப் போராட்டத்தை அறிவித்தால் மட்டுமே JACTTO-GEOவின் இலட்சக்கணக்கான உறுப்பினர்கள் JACTTO-GEO பதாகையை மீண்டும் உணர்வோடே உயர்த்திப்பிடிக்க முன்வருவர்.


மேலும், மார்ச் 23ல் பெருமளவில் களத்திற்கு வருவார்களா என்பதும் ஐயத்திற்குரியதே! ஏனெனில், 6 ஆண்டுகளாக. . . அவ்வளவு ஏன் நேற்று முன்தினம் (13.03.25) இரவு வரை  JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்களின் நம்பிக்கை நாடகங்களைப் பார்த்துப் பார்த்து JACTTO-GEO பதாகையின் மீதான நம்பிக்கையையே இழந்து வெறுத்துப் போயுள்ளனர் ஆசிரியர்களும் - அரசு ஊழியர்களும்.


'நாங்கள் நாடகமாடவில்லை; நம்ப வைக்கப்பட்டே நாங்களும் ஏமாற்றப்பட்டுள்ளோம்' என்று கூற JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருக்குக்கூட அடிப்படை உரிமை இல்லை என்பதே 100% உண்மை.


'அண்ணா தந்த INCENTIVEஐ தருவேன்' என்ற MKS, 2021ல் தனது முதல் பட்ஜெட் அறிப்பிலேயே தன் வாக்குறுதியைப் பொய்ப்பித்து INCENTIVEஐ பறித்தது தொடங்கி, 2025 வரை நம்பிக்கைக்குரிய ஒற்றை உரிமை மிட்பைக்கூட உறுதிப்படுத்திடாத MKSஐ மட்டுமே மீண்டும் மீண்டும் நம்புகிறோம். . . . நம்புகிறோம். . . . என்று கூறிக்கூறியே இன்று 2025ல் MKSன் இறுதி பட்ஜெட் வரை வலுவான எந்தவொரு போராட்டத்தையும் நடத்திடாதபடி JACTTO-GEO பதாகையின் தீரத்தைத் திட்டமிட்டே வீணடித்துவிட்டு இன்று நாங்களும் நம்பி ஏமாற்றப்பட்டோம் என்றால், அதை நம்ப உறுப்பினர்கள் எவரும் தயாராக இல்லை என்பதே கள உண்மை.


எனவே, தங்களால் இழக்க வைக்கப்பட்ட JACTTO-GEOவின் தீரத்தை அதன் அடிப்படை உறுப்பினர்களின் போராட்டக் குணத்தை மீட்பதன் வழியே நிலைநிறுத்த, முதற்கண் JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் மீதான நம்பகத்தன்மையை உறுப்பினர்கள் மத்தியில் மெய்ப்பித்துக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


ஆனால், இதையெல்லாம் அவர்கள் உணர்ந்துள்ளனரா? அல்லது தங்களைச் சுற்றி வைத்துக்கொண்டுள்ள சேவகர்களின் புகழ் மொழியை மட்டுமே கேட்டுச் செயல்படப்போகின்றனரா? என்பது தான் தெரியவில்லை.


மேலும் கள நிலவலரம் இவ்வளவு மோசமாக, ஒருவகையில் JACTTO-GEO உறுப்புச் சங்கங்களில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருமே முக்கிய காரணம் என்பதே கசப்பான உண்மை. 6 ஆண்டுகளாக நடக்கும் அனைத்தையும் நன்கு அறிந்திருந்தும் தாங்கள் சந்தா செலுத்தும் தங்களது சங்கத் தலைமைகளை உரிமை மீட்பிற்கு நேராக உந்தித் தள்ள முன்வராததோடே, மீறி உந்தித் தள்ள எவரும் முன் வந்தால் அவர்களை சங்க விரோதிகளாகக் கட்டமைக்கும் செயல்படாத் தலைமைகளின் அதிகார மொழிக்கு அடிமையாகி உந்தித் தள்ள முன்வருவோரைத் தூற்றி தங்களது நிலையை மேலும் மோசமாக்கிக் கொள்ளத் தங்களையுமறியாது - சிலர் நன்கு அறிந்தே தூபம் போட்டு வந்துள்ளனர்.


இப்போதாவது அடிப்படை உறுப்பினர்கள் தங்களது பலத்தையும், களத் தேவையையும் உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும். இப்போது இல்லையேல் இனி எப்போதும் இல்லையே!


ஏனெனில் தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் களத்தில். . . .


அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அரசியல் அனாதைகளே!

கொள்வாரும் இல்லை! கொடுப்பாரும் இல்லை!!


*JACTTO-GEO என்பது மதிப்பிழந்துவிட்ட பதாகையே! தீரமும் இல்லை! தீவிரமும் இல்லை!!*


*இந்நிலை மாறாது, நாம் தான் மாற்றியாக வேண்டும்.*


Yesterday (13-03-2025) JACCTO GEO executives interview after meeting with Hon'ble Chief Minister of Tamil Nadu Mr. M.K.Stalin at the Secretariat



நேற்று (13-03-2025) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்த பிறகு அளித்த பேட்டி


Yesterday (13-03-2025) JACCTO GEO executives interview after meeting with Hon'ble Chief Minister of Tamil Nadu Mr. M.K.Stalin at the Secretariat


13-03-2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்த பிறகு அளித்த பேட்டி



>>> இங்கே சொடுக்கவும்...


 




நேற்று 13.3.25 அன்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளையும் இன்றைய தினம் 14.3.25  நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட்டு நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார்கள்.



DMK will be cheated in 2026 if it cheats Teachers, Government Employees - JACTTO GEO

 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை ஏமாற்றினால் 2026ல் திமுக ஏமாந்து விடும் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன்


DMK will be cheated in 2026 if it cheats Teachers, Government Employees - JACTTO GEO coordinator Mayavan





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



JACTTO GEO - இன்றைய 25.02.2025 போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய CL Form


JACTTO GEO - இன்றைய 25.02.2025 போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய CL Form Model


25-02-2025 ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் இணைந்து நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய தற்செயல் விடுப்பு விண்ணப்பம் மாதிரி



Information about the talks held with the Chief Minister and Ministers and protests

 

 முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை மற்றும் போராட்டம் குறித்த தகவல்கள் 


JACTTO GEO Information about the talks held with the Chief Minister and Ministers and protests



தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில மாவட்ட வட்டார பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம் 


இன்று மாலை எட்டு முப்பது முதல் ஒன்பது மணி வரை நடைபெற்ற மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் அவர்களுடன் பேச்சு வார்த்தையில்


 அமைச்சர்கள், முதல்வர் மற்றும் நிதித்துறை செயலாளர் , அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோருடன் நடைபெற்ற ஆலோசனையின் பின்பு பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் அவர்கள்  ஜாக்டோ ஜியோ  சார்பாக இன்றைய கூட்டு தலைமை பொறுப்பை ஏற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் கே பி ரக் ஷித், தமிழக தமிழாசிரியர் கழக கௌரவத் தலைவர் புலவர் ஆறுமுகம், அரசு ஊழியர் சங்க தலைவர் சீனிவாசன் ஆகியோரை அழைத்து அரசின் நிலைப்பாடு குறித்து தமது நிலையை விளக்கினார்கள் 


அரசு கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து நான்கு வாரத்திற்குள் அறிவிப்பு வெளியிடுவதாக, அரசுக்கு நான்கு வார காலம் கால அவகாசம் கேட்டு போராட்டத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள் 


அதன் பின்பு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் 


அரசு நான்கு வருட காலம் அவகாசம் எடுத்துக் கொண்டதாலும், மேலும் கால அவகாசம் அளிப்பதை அடிமட்ட தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என்ற நிலையில்  நாளைய போராட்டத்தை தொடர்வது என்றும், மதுரை உயர்நீதிமன்ற தடையாணைக்கு இணங்க மறியல் போராட்டத்தை மாற்றி அமைத்து 


ஒட்டுமொத்த தற்செயல்விடுப்பு போராட்டம் மற்றும் காலை 11 மணிக்கு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஏகமனதாக தீர்மானித்து ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது 


அதன் அடிப்படையில் செயல்பட மாநில மாவட்ட வட்டார பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் நன்றி


Details of today's talks of JACTTO GEO officials with ministers









அமைச்சர்களுடன் ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்களின் இன்றைய பேச்சுவார்த்தை விவரங்கள்


Details of today's talks of JACTTO GEO officials with ministers


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம் 


இன்றைய தினம் காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகம் பத்தாவது மாடியில் மாண்புமிகு நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு  எ வ வேலு அவர்கள் தலைமையில் மாண்புமிகு நிதியமைச்சர் மற்றும் மாநில பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் மாண்புமிகு மனிதவளமேம்பாட்டு துறை அமைச்சர் ஆகியோர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் உடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது


 பேச்சுவார்த்தைக்கு சுழல்முறை தலைமையாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் திரு  கே பி ரக் ஷித், அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் திரு சீனிவாசன் , தமிழக தமிழ் ஆசிரியர் கழக கௌரவத் தலைவர் புலவர் திரு ஆ ஆறுமுகம் ஆகியோர் தலைமை ஏற்றனர்


 பேச்சுவார்த்தையில் 32 ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டு தமது கருத்துகளை எடுத்துரைத்தனர் 


ஜாக்டோ ஜியோவின் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு மற்றும் ஈட்டிய விடுப்பு சரண் ஒப்படைப்பு, அரசாணை 243 ரத்து உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளும் முழுமையாக அமைச்சர் குழுவிடம் மிக விளக்கமாக தெரிவிக்கப்பட்டது 


இறுதியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்கள் நமது கருத்துகள் அனைத்தையும் உள்வாங்கி இன்றைய தினம் மாலை 7 மணி அளவில் முதல்வரை சந்தித்து 8 மணி அளவில் மீண்டும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை தலைமைச் செயலகத்திலேயே சந்தித்து விவரங்களை தெரிவிப்பதாக தெரிவித்து கூட்டம் முடிவடைந்தது 


உறுதியான எந்த முடிவும் எட்டப்படாத காரணத்தினால் போராட்ட நடவடிக்கைகள் எந்தவித தடையும் இன்றி தொடர்கின்றன 


இரவு 8 மணிக்கு நடைபெறும் அமைச்சர் குழு உடனான பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுகள் தெரிவிக்கப்படும் 


கே பி ரக் ஷித் மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


Ban on JACTTO GEO picketing - High Court orders


ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு


Ban on JACTTO GEO picketing - High Court orders


ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


▪️ அரசு ஊழியர்கள், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்த இருந்த போராட்டத்திற்கு எதிராக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது


▪️ அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்ய 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தகவல்


▪️ இரு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்





Chief Minister meeting JACTTO GEO Executives today 24-02-2025 at 8 PM


ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் முதலமைச்சர் இன்று 24-02-2025 இரவு 8 மணிக்கு சந்திப்பு


Chief Minister meeting JACTTO GEO Executives today 24-02-2025 at 8 PM


சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று இரவு 8 மணிக்கு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு


ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று சந்திப்பு


ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.






10 point demand letter given by JACTTO GEO organization to Hon'ble Chief Minister today (24-02-2025)

 


ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று (24-02-2025) மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கியுள்ள 10 அம்சக் கோரிக்கைகள் கடிதம்


10 point demand letter given by JACTTO GEO organization to Hon'ble Chief Minister today (24-02-2025)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


JACTTO GEO State high level committee members press meeting


 ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு


JACTTO GEO State high level committee members press conference




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


JACTTO GEO negotiation results

 


ஜாக்டோ ஜியோ பேச்சுவார்த்தை முடிவுகள் 


JACTTO GEO negotiation results


🔥 பேச்சுவார்த்தை முடிவுற்றதை தொடர்ந்து நான்கு அமைச்சர்கள் குழு முதலமைச்சர் அவர்களை சந்தித்து விவாதிக்க உள்ளது. முதலமைச்சருடன் விவாதித்து கோரிக்கைகள் ஏற்கப்பட்டது குறித்த மற்ற விவரங்கள் தெரிவிக்கப்படும் 


🔥 முதலமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் போராட்டத்தை தொடர்வதா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் போராட்டம் வாபஸ் பெறப்படும். இல்லையேல் போராட்டம் தொடரும்.


🔥 ஜாக்டோ ஜியோ குழு மீண்டும் 7:00 மணிக்கு அமைச்சர் பெருமக்களுடன் சந்திப்பு


JACTTO GEO State Coordinators Meeting Decisions


ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்


JACTTO GEO State Coordinators Meeting Decisions


04/02/2025 மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் - திருச்சி


06/02/2025 மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்


14/02/2025 வட்ட அளவில் மாலை நேர  ஆர்ப்பாட்டம்


25/02/2025 மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டம்


- ஜாக்டோ ஜியோ


State bearers Interview about the decisions taken at the JACTTO GEO High Level Committee meeting


ஜாக்டோ ஜியோ உயர் மட்டக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பொறுப்பாளர்கள் பேட்டி


State bearers Interview about the decisions taken at the JACTTO GEO High Level Committee meeting 





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்....



தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்க ஜாக்டோ ஜியோ கோரிக்கை...


 கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்க ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கை கடிதம்...


JACTTO GEO coordinators request letter to make time to meet Tamil Nadu Chief Minister regarding demands...




தேர்தல் பயிற்சி வகுப்பு தேதியினை மாற்ற ஜாக்டோ ஜியோ கோரிக்கை...

 தேர்தல் பயிற்சி வகுப்பு தேதியினை மாற்ற ஜாக்டோ ஜியோ கோரிக்கை...


ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO)


தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு


நாள்: 22.03.2024


பெறுநர்

தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர். 

பொது (தேர்தல்கள்) துறை, 

தலைமைச் செயலகம், சென்னை -600 009.


அய்யா,


பொருள் : 2024 பாராளுமன்றத் தேர்தல் 24.03.2024 அலுவலர்களுக்கான முதல் பயிற்சி வகுப்பு கிருத்துவர்கள் பண்டிகையான குருத்தோலை ஞாயிறு தேர்தல் வகுப்பினை 23.03.2024 அன்று மாற்றி நடத்துவது குறித்து.



2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எதிர்வரும் 19.04.2024 அன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் வாக்குப் பதிவு பணிகளில் ஈடுபடவுள்ள தேர்தல் அலுவலர்களான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான முதலாவது பயிற்சி வகுப்பானது 24.03.2024 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வரும் 24.03.2024 அன்று தமிழகத்திலுள்ள சிறுபான்மை சமூகத்தினரான கிருத்துவர்கள் தங்களது மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டின் அடிப்படையில் புனித குருத்தோலை ஞாயிறு பண்டிகையினைக் கொண்டாட உள்ளனர். கடந்த ஆறு வாரங்களாக தபசு காலத்தை கடைபிடிக்கும் கிருத்துவர்கள், *குருத்தோலை ஞாயிறன்று குருத்தோலைகளுடன் புனிதமாக வீதிகளில்* ஊர்வலமாக வந்து ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபடுகின்றனர். அன்றைய தினத்தில், தேர்தல் வகுப்பானது நடைபெற்றால், சிறுபான்மையின கிருத்துவர்களுக்கு தங்களது புனிதப் பண்டிகையான குருத்தோலை ஞாயிறைக் கொண்டாட பெரும் இடையூறாக இருக்கும் என்பதால், தேர்தல் பணியாளர்களுக்கான *முதலாவது வகுப்பினை 23.03.2024 சனிக்கிழமை* மாற்றியமைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


தங்கள் நம்பிக்கையுள்ள,

மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

ஜாக்டோ-ஜியோ





24-02-2024 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை...





>>> 24-02-2024 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை - PDF...



24-02-2024 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை...


*ஜாக்டோ - ஜியோ* ( *JACTTO-GEO* )


*(தமிழ்நாடு ஆசிரியர் அமைப்புகள் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு)*


 *நாள்:24.02.2024* 


*இன்னும் கொஞ்சம் பொறுத்திருப்போம்!*


 *பட்ஜெட் மான்ய கூட்டத்தொடர் வரை போராட்டத்தை நிறுத்தி வைப்போம்!*


 *நமக்கான அறிவிப்புகள் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்!*


*பதுங்கிப் பாயும் வேங்கையின் பொறுமையுடன் பசித்திருப்போம்!*


 *விழித்திருப்போம்!*


 *ஒற்றுமையுடன் இருப்போம்!*


*அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களே, அரசு ஊழியர்களே, அரசுப்பணியாளர்களே*


*நாமெல்லாம் ஒன்று சேர்ந்து நம்முடைய உரிமைகளுக்காக மாநில அரசிடம் தொடர்ந்து நம்முடைய கோரிக்கைகளை வைத்து வருகிறோம். அரசின் கவனத்தை ஈர்க்க பலகட்ட போராட்டங்களை வடிவமைத்து அவற்றை செவ்வனே செயல்படுத்தி அரசுக்கு அழுத்தத்தை தந்து கொண்டிருக்கிறோம். நமக்கான முதல்வர் நம்மிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையிலும் அதே சமயம் அரசின் நிதி ஆதாரங்கள் மேம்படும் வரை நம்மை முதல்வர் காத்திருக்கச் சொன்னதை கருத்தில் கொண்டும் நாம் கடந்த இரண்டரையாண்டுகளாக வாழ்வாதார கோரிக்கைகளுக்கான காலஅவகாசத்தை பொறுத்துக்கொண்டு வந்திருக்கிறோம். இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் நாம் முதல்வரை மூன்று முறைகள் நேரில் சந்தித்து நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முறையிட்டிருக்கிறோம். நம்முடைய நெடுநாள் பொறுமைகளை அவரிடம் எடுத்துரைத்திருக்கிறோம். மாநாடு நடத்தியும் நம்முடைய கோரிக்கைகளில் பால் உள்ள நியாயங்களை அவசியங்களை, அவசரங்களை அவரிடம் எடுத்துரைத்திருக்கிறோம்.*


*தமிழக முதலமைச்சர் அவர்களும், அவர் ஆட்சியேற்ற பிறகு நம்மை சந்தித்த எல்லா தருணங்களிலும் மற்றும் மாநாட்டிலும் அவர்கொடுத்த வாக்குறுதிகளை புறந்தள்ளாமல் தான் கொடுத்த வாக்குறுதிகளை மறக்கவில்லை மறுக்கவில்லை மறைக்கவில்லை என்றும் அவை அனைத்தும் தன்னுடைய நினைவில் உள்ளதாகவும் அவை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையையும் உறுதிபடுத்தி வந்திருக்கிறார். தமிழக முதல்வர் அவர்கள் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் நமக்கான வாக்குறுதிகள் ஒன்றைக்கூட நிறைவேற்றாதது நம்முடைய வேதனைகளையும், கோபங்களையும் கொழுந்துவிட்டு எரியச் செய்த நிலையில் நாம் இதுவரை இரண்டுமுறை போராட்ட களங்களுக்கு தயாரான போது அமைச்சர்களை அனுப்பி தன்னுடைய நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி "சிலகாலம் காத்திருங்கள் நிச்சயம் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் " என்று மீண்டும் மீண்டும் உறுதியளித்து வந்திருக்கிறார்.*


*அதன்பிறகும் சிலகாலம் முதல்வரின் உறுதிமொழியில் இருந்த நம்பிக்கைகளின் பேரில் பொறுமையுடன் காத்திருந்துவிட்டு அரசுத்தரப்பில் எந்த சலனமும் இல்லாத நிலையில் நாம் நம்முடைய கோரிக்கைளில் அதிமுக்கியத்துவமும். அவசியமும் வாய்ந்த பத்து கோரிக்கைகளை முன் வைத்து இப்போது போராட்டகளத்திற்கு தயாராகி வந்தோம். இந்த நிலையில் அரசாங்கத்தின் துாதுவர்களாக மாண்புமிகு அமைச்சர்கள் திரு.எ.வ.வேலு, திரு.முத்துசாமி மற்றும் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை தமிழக முதல்வர் பேச்சு வார்த்தைக்காக நியமித்து அவர்களுடனான பேச்சுவார்த்தை ஜாக்டோ ஜியோவின் முக்கியத் தலைவர்களுடன் நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாகவே இருந்தது. தமிழக முதல்வர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் கோரிக்கைகளை ஒருபோதும் ஒதுக்கித் தள்ள விரும்பியதில்லை என்றும். தற்போதுள்ள நிதி பற்றாக்குறை சூழ்நிலை காரணமாக கோரிக்கைகள் அறிவிக்கப்படாமல் உள்ளதாகவும், நம்முடைய போராட்டங்கள் நியாயமானவையே என்றாலும் அரசாங்கத்தினால் அவற்றை உடனடியாக நிறைவேற்ற இயலாத நிலைமை உள்ளதால் போராட்டங்களை விலக்கிக் கொண்டு இன்னும் சிலகாலம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.*


*ஆனால் நாம் நம்முடைய கோரிக்கைகளில் ஒரு சிலவற்றையேனும் முதல்வர் பரிசீலித்து ஆணையிடுவாரேயானால் நாங்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பது குறித்தோ அல்லது சிலகாலம் காத்திருப்பது குறித்தோ முடிவெடுக்க இயலும் என்று தெரிவித்தோம். அனைத்து ஊழியர்களும் ஆசிரியர்களும் பணியாளர்களும் அரசின் தற்போதைய நிலைப்பாட்டை வெகுகாலம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்றும் நாங்கள் ஒற்றுமையுடனும், பொறுமையுடனும் பொறுப்புடனும் முதல்வரின் வார்த்தைகளை மதித்து இதுகாலம்வரை காத்திருக்கிறோம் என்பதையும் அவர்களுக்கு புரிய வைத்தோம். நம்முடைய பொறுமைகளை புரிந்து கொண்ட மாண்புமிகு அமைச்சர்கள் மாண்புமிகு முதலமைச்சரிடம் இதுகுறித்து தெரிவிப்பதாகவும் சொல்லிச் சென்றனர்.*


*ஆனால் நம்முடன் சுமூகமாக பேசிச்சென்றதற்கு மாறாக மாண்புமிகு அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் பெயரில் வெளியான அறிக்கை ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்தை கொச்சை படுத்துவது போன்றும், அரசாங்கம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து வருவதான தோற்றத்தையும், தமிழ்நாடு மிக இக்கட்டான பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் இந்த காலகட்டத்தில் ஜியோ அதிகப்படியான பணப்பலன்களைக் கேட்டு போராடுவது சரியானதல்ல என்று பொதுமக்களை திசை திருப்பும் வகையிலும் இருந்ததால் அந்த அறிக்கையை நாம் முற்றிலும் நிராகரிப்பதாக தெரிவித்து போராட்டம் தொடரும் என்று அறிவித்தோம்.*


*நம்முடைய போராட்டம் தொடரும் என்ற அறிவிப்பால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மீண்டும் மாண்புமிகு அமைச்சர்கள் நம்முடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். நாம். "முதல்வர் எங்களுடன் பேச வேண்டும். இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே கோரிக்கைகளில் ஏதாவது ஒன்றிரண்டை செயல்படுத்திடும் அறிவிப்பை வெளியிட வேண்டும். மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எத்தனை நாட்கள்/மாதங்கள் கால அவகாசம் தேவைப்படும் என்பதை தெரிவிப்பதன் அடிப்படையிலேயே எங்களுடைய போராட்டத்தை நாங்கள் திரும்பப் பெறுவது குறித்து முடிவு செய்ய இயலும். அதனால் முதல்வருடன் நேரடியாக பேசாமல் நாங்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதற்கான அறிவிப்பை வெளியிடமுடியாது" என்று தெரிவித்தோம்.*


*மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்தமுறையும் நம்முடைய கோரிக்கைகளை அவற்றில் உள்ள நியாயங்களை. அவற்றை நிறைவேற்றுவதில் அரசுக்கு ஏற்பட்டுள்ள காலதாமதங்களை மறுக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால் அதே சமயம் இன்னும் எத்தனை காலம் பொறுமையுடன் காத்திருப்பது என்பதுதான் நமக்குள்ள பெரிய கேள்வியாக உள்ளது. அமைச்சர் பெருமக்கள் அனைவரிடமும் ஏதாவது காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். நாங்கள் உங்களுடைய கோரிக்கைகளில் நிறைவேற்றுவதில் மனம் உள்ளவர்களாக இருப்பதால்தான் பேச்சு வாரத்தைக்கு உங்களை அழைத்திருக்கிறோம் என்றும் அரசாங்கம் தற்போது பல்வேறு வகையான நிதிச்சுமையில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், மாதந்தோறும் அரசு ஊழியர்களுக்கு. ஆசிரியர்களுக்கு, பணியாளர்களுக்கு சம்பளம் அளிக்கவே நிதிப்பற்றாக்குறை உள்ள நிலையில், மத்திய அரசும் பல வகைகளில் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதிகளை தராமல் நிறுத்தி வைத்திருக்கும் சூழலில், நீங்கள் உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற கேட்டுப் போராடுவதால் எந்தப்பலனும் ஏற்படப்போவதில்லை. தமிழக முதல்வருக்கு கொடுக்க மனமிருந்தும் கஜானாவில் பணமில்லை என்று தெரிவித்தனர். இருப்பினும் முதல்வருடன் நாம் பேச ஏற்பாடு செய்வதாகக் கூறி ஏற்பாடு செய்து கொடுத்தனர்.*


*மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நேரில் நம்மை சந்திக்க அழைக்க, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருடனும் அவர் பேசினார். நிதிநிலைமை மிகக்கூடிய விரைவில் சரியாகிவிடும் என்று சொன்ன முதல்வர் உங்கள் கோரிக்கைகளை நான் நிறைவேற்றாமல் யார் நிறைவேற்றப் போகிறார்கள்? என்று கேட்டு மீண்டும் ஒருமுறை அவர் தேர்தல் அறிக்கையிலும், நமது மாநாட்டிலும் தெரிவித்த உறுதிமொழியை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார். நாமும் இந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவதற்குள் சில அறிவிப்புகளையேனும் வெளியிட வேண்டும். வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் எங்கள் போராட்டத்தை நிறுத்தி வைக்கிறோம் என்று தெரிவித்தோம். மாண்புமிகு முதல்வர் அவர்களும் "பரிசீலிக்கிறேன்." என்று சொல்லிச் சென்றார். அவருடனான பேச்சு வார்த்தை மிகவும் நம்பிக்கைத் தரும் விதத்தில் அமைந்திருந்ததால் 15.02.2024ல் நடத்தவிருந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை ஒருமனதாக முடிவு செய்து திரும்பப் பெறுவதாக அறிவித்தோம். சட்டமன்றக் கூட்டத்தொடரில் வெளியாகும் வரும் அறிவிப்பு அதன்பிறகான தமிழக அரசின் நிலைப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போராட்டத்தை தொடர்வதென முடிவு செய்திருந்தோம்.*


*ஒரு போராட்டத்தை அறிவித்து விட்டு முன்று அமைச்சர்களுடன் பேசிவிட்டு அவர்கள் கொடுத்த அறிக்கை நமக்கு திருப்தி அளிக்காத நிலையில் நாம் அந்த அறிக்கையை முற்றிலும் நிராகரித்துவிட்டு போராட்டத்தை தொடர்வதாக அறிவித்ததும் அதன்பிறகு மாண்புமிகு அமைச்சர்கள் நம்மை முதல்வருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து முதல்வரின் வாய்மூலம் கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்ததும் நம்பிக்கையை விதைப்பதாக இருந்தன. பொதுவாக அரசுக்கெதிரான போராட்டங்களை யார் செய்தாலும், அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் போது போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டு பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் முதன்முறையாக நாம் நிதியமைச்சரின் அறிக்கைக்குப் பின்னரும் போராட்டம் தொடரும் என அறிவித்து அது நிலுவையில் இருக்கும்போதே போராட்ட அறிவிப்பை திரும்பப் பெறாமல் முதல்வரை சந்தித்து அவரின் உறுதிமொழிக்குப் பின்னர் ஒருநாள் தற்றகாலிக வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளதோடு காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது இந்த இயக்கத்திற்கு கிடைத்துள்ள வெற்றியாகும். நம்முடைய ஒற்றுமை, விடாமுயற்சி. கொண்ட லட்சியத்தில் உறுதிப்பாடு போன்றவைதான் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று நம்முடைய உரிமைகளை மீளப்பெற வழிசெய்யும்.*


*அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் நம்மை உதாசீனப்படுத்திவரும் நிலையில் வேறு எந்த கட்சியும் ஆட்சியும் நம்முடைய கோரிக்ககைள நிறைவேற்ற முன்வராத சூழ்நிலையில் நமக்கான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று அன்று சொன்ன வார்த்தைகளை இன்றுவரை சொல்லிவரும் திராவிட முன்னேற்றக் கழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் மட்டும்தான் நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றித்தரமுடியும் என்ற நம்பிக்கை மீண்டும் மலர்ந்துள்ளது.*


*நாம் நடத்தும் போராட்டங்கள் அனைத்தும் நம்முடைய உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டங்களே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் காத்திருங்கள் கொடுக்கிறோம் என்று தெரிவிக்கும் இடத்தில், 'முடியாது நாங்கள் போராடியே தீருவோம் என்று எதிர்ப்பாடான நிலை எடுத்து போராட்டத்தை தொடர்வது முறையானதாக இருக்காது என்கிற யதார்த்தத்தை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். தமிழக அரசியல்கட்சிகளில் திமுகவைத் தவிர வேறு எந்த கட்சியும் நமக்கான உரிமைகளை நிறைவேற்றித்தருவோம் என்று ஒரு பேச்சுக்குக் கூட கூறாத நிலையில் "காத்திருங்கள் நான் செய்யாமல் உங்களுக்கு யார் செய்யப் போகிறார்கள்." என்று கூறும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பினை எதிர்த்து நாம் போராட்டகளம் செல்வதானது நமக்காக திறந்திருக்கும் வாய்ப்பு வாசல்களை நாமே அடைத்துவிட்டதாக ஆகிவிடும். மிகுந்த யோசனைகளுக்குப் பிறகே அரசின். தமிழக முதலமைச்சரின் நம்பிக்கை வார்த்தைகளை ஏற்று சில கோரிக்கைகளாவது கூடியவிரையில் நிறைவேறும் என்ற நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டின் அடிப்படையில் போராட்டத்தை தற்காலிகமாக நிறுததி வைத்திருந்தோம். ஆனால் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரும் முடிந்திருக்கிறது.*


*கனத்த இதயத்தோடு நிற்கிறோம். முதலமைச்சரின் வார்த்தைகளிலும், உடல்மொழியிலும் நம்மை ஏமாற்றும் போக்கோ. வஞ்சிக்கும் எண்ணமோ இருப்பதாக தெரியவில்லை. ஒரு பாராளுமன்றத் தேர்தலை எதிரில் வைத்துக்கொண்டு முதல்வர் தன்னுடைய உறுதிமொழிகளை தள்ளிப்போடுவதோ. இல்லையென்று கைவிரிப்பதோ அவர் வகிக்கும் பதவிக்கும் அவருக்கு இருக்கும் பெயருக்கும் புகழுக்கும் அழகாக இருக்காது என்பதை அவர் உணராதவர் இல்லை. இதுவரை அவர் கொடுத்த வாக்குறுதிகளுக்கும் இப்போது கொடுத்திருக்கும் உறுதிமொழிக்கும் வித்தியாசங்கள் பெரிதாக இல்லாத நிலையில் அவரின் வாக்குறுதிகளின் பேரில் பெரிய அளவில் சந்தேகம் எழவில்லை. கூடிய விரைவில் பட்ஜெட்உரை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் எதுவும் தரவில்லை என்பதற்காக நாம் உடனடியாக ஒரு போராட்டத்தை அறிவிப்பது உளமாற நலமாக இருக்காது. கூடிய விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரக்கூடிய நிலையில் கடைசியாக ஒருமுறை நாம் நம்முடைய போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைப்போம். இப்படி நாம் முடிவெடுப்பதால் நம்முடைய போராட்டங்கள் முடிந்துவிட்டதாக அர்த்தமில்லை. சேமித்து வைத்த சக்திகளை வீணடிக்காமல் பாதுகாத்து வைப்போம்.கொடுத்த வாக்குறுதிகள் நீர்த்துப்போனால் மீண்டும் போராட்டத்தை தொடரும் நிலைப்பாட்டில் ஒற்றுமையாக உறுதியாக இருப்போம். புறச்சூழல்களை கவனத்துடன் கண்காணிப்போம். எப்போது போராட்டம் என்றாலும் அதற்கான தயாரிப்புகளோடு தயாராக இருப்போம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பாக ஆசிரியர்கள். அரசு ஊழியர்கள் பணியாளர்கள் குறித்தான தேர்தல் கால வாக்குறுதிகள் குறித்து கொள்கை முடிவினை அறிவிக்க வேண்டுமென ஜாக்டோ-ஜியோ கேட்டுக்கொள்கிறது.*


*தங்கள் நம்பிக்கையுள்ள*


 *மாநில ஒருங்கிணைப்பாளர்கள்*


JACTTO-GEOவின் மூடநம்பிக்கையால் முழுமையாக உருப்பெற்ற தமிழ்நாட்டு அரசு ஊழியர் & ஆசிரியர் இயக்கங்களின் இருண்ட காலம்...



JACTTO-GEOவின் மூடநம்பிக்கையால் முழுமையாக உருப்பெற்ற தமிழ்நாட்டு அரசு ஊழியர் & ஆசிரியர் இயக்கங்களின் இருண்ட காலம்...


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


மூட நம்பிக்கை. . . . இருண்ட காலம். . . . என்ற இந்த இரு சொல்லாடல்களையும் விளங்கிக்கொள்ள வேண்டுமானால், நாம் கடந்து வந்த காலத்தைச் சற்றே நினைவுகூற வேண்டியுள்ளதால் முதலில் அதைத் தொகுத்தளித்துள்ளேன். நமக்கான தேவைகருதி நிதானமாக வாசிக்க வேண்டுகிறேன். வேதனையின் உச்சத்தோடே இப்பதிவைத் தொகுத்துள்ளேன் என்பதால் கால வரிசைப்படியான நிகழ்வுகளில் ஒன்றிரண்டு விடுபட்டிருக்கலாம். ஏனெனில், இப்படியொரு பதிவை எனது விரல்கள் தொட்டுத்தொடுக்குமென நான் கனவிலும் கண்டதில்லை.


*2017 செப்டம்பர் 4:*


JACTTO-GEO செப். 7 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து, 3 அமைச்சர்கள் (திரு.செங்கோட்டையன், திரு.ஜெயக்குமார், திரு.ஆர்.பி.உதயகுமார்) முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உடன்பாடு எட்டப்படவில்லை.



*2017 செப்டம்பர் 6:*


ஈரோட்டில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களைச் சந்தித்து JACTTO-GEO பேசுகிறது. முதல்வர் 4 மாதகால அவகாசம் (நவம்பர் 2017 வரை) கோருகிறார். இதனை ஏற்று சிலர் காத்திருக்க இசைவு தெரிவிக்கின்றனர். ஆனால், அவர்களது முடிவைப் புறந்தள்ளிவிட்டு JACTTO-GEO திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம் நடக்கும் என்று அறிவித்து அதன்படி நடத்தியும் காட்டியது. நீதிமன்ற கண்டனங்களையும் மீறி நடத்தப்பட்ட வீரியமிக்கப் போராட்டத்தால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தலைமைச்செயலாளரை நேரில் பதிலளிக்கப் பணித்து VII PAY COMMISSION பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த காலக்கெடு விதித்தது. போராட்ட காலமும் பணிக்காலமாக ஈடுசெய்யப்பட்டது.



*2019 ஜனவரி 22:*


ஜாக்டோ-ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்ற நிலையில், சென்னையில் கைதான மாநிலப் பொறுப்பாளர்கள் நிபந்தனையின் பேரில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர். +2 செய்முறைத் தேர்வுகளைக் காரணம் காட்டி சிலரும், ஆட்சியாளரின் கைப்பாவையாகி சிலரும், தமது தலைமைகளின் உறுதியான வாக்குறுதியில்லாததால் பலரும் 7ஆம் நாளோடே பணிக்குத் திரும்ப அரசுடனான எந்தவித உடன்பாடுமின்றி 31.01.2019ம் தேதியுடன் போராட்டம் முடிவிற்கு வருகிறது. தினமும் மாவட்டந்தோறும் மாநிலப் பொறுப்பாளர்கள் தவிர்த்த 17,686 போராளிகள் கைதாகி சிறை சென்றனர். 2,338 போராளிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இறுதிநாள் வரை களத்தில் நின்ற 7,898 போராளிகளுக்கு 17B அளித்து பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். பதவி உயர்வு வாய்ப்பு பறிக்கப்பட்டது.



*2020 ஏப்ரல் 28:*


அஇஅதிமுக அரசு பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக 30.06.2021 வரை அகவிலைப்படி உயர்வு வழங்குவதையும் & நிலுவைத் தொகையையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது



*2020 அக்டோபர் 03:*


25.04.1963 முதல் 58 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம் அஇஅதிமுக அரசின் கொள்கை முடிவின் படி இரத்து செய்யப்படுகிறது.



*2021 பிப்ரவரி 02:*


சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று 2019 ஜனவரியில் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள், தண்டனைகளை அனைத்தையும் ரத்து செய்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.



*2021 மார்ச் 13:*


திமுக தனது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும், அண்ணா வழங்கியது போல மீண்டும் உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம் வழங்கப்படும், இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளை வெளியிடுகிறது.



*2021 செப்டம்பர் 07:*


திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழான அறிவிப்பில் 2016, 2017 & 2019 ஆண்டுகளில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோவின் போராட்ட நாள்களைப் பணிக்காலமாக முறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். (இன்றளவும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜாக்டோ-ஜியோவிற்கு அளித்த வாக்குறுதிகளில் தான் முதலமைச்சரான பின்னர் இந்த ஒன்றை மட்டுமே நிறைவேற்றியுள்ளார்.)


மேலும் இதே நாளில்தான் அண்ணா பெயரில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் தான் அளித்த வாக்குறுதிக்கு நேர்மாறாக, ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உயர்கல்வித் தகுதிக்கு ஊக்கத்தொகை மட்டுமே (Incentiveற்கு பதிலாக ஒருமுறை மட்டும் Lumpsum Amount) வழங்கப்படுமென அறிவிக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்.



*2021 டிசம்பர் 19:*


மேற்படி முதல் வாக்குறுதி மீறலைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற TNGEAவின் 14வது மாநில மாநாட்டில் அனைத்து தரப்பிற்கும் மத்திய அரசுக்கிணையான ஊதியத்தை வழங்கியது கழக ஆட்சிதான் என்றும் அரசு ஊழியர் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். (இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசுக்கிணையான ஊதியத்தைப் பறித்தது 2009ல் ஆட்சியிலிருந்த திமுக தான். இவ்வாறாக இது 15 ஆண்டுகால கோரிக்கையாக இன்றும் உள்ளது)



*2022 ஆகஸ்ட் 01:*


மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதில் அவர் செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில் 05.08.2022ல் அறிவித்திருந்த மாவட்டத் தலைநகர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இரத்து செய்யப்படுகிறது.



*2022 ஏப்ரல் 11:*


01.11.1980 முதல் வழங்கப்பட்டு வந்த. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் பெருந்தொற்று காரணமாக 27.04.2020ல் ஓராண்டிற்கு மட்டும் அஇஅதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், திமுக ஆட்சியில் மறு உத்தரவு வரும் வரை தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைத்து 11.04.2022ல் ஆணையிடப்பட்டது.



*2022 செப்டம்பர் 10:*


JACTTO-GEOவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில், "திமுக ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களுமான நீங்கள்தான் காரணம். இந்த அரசு, உங்களது நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தரும் என்று இப்போதும் நான் உறுதி அளிக்கிறேன்." என்று மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். (Incentive & EL Surrenderஐ இரத்து செய்துவிட்டுத்தான் இவ்வாறு உரையாற்றுகிறார்)



*2022 டிசம்பர் 31:*


30.06.2021 வரை ஓராண்டிற்கு அஇஅதிமுக அரசால் DA நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்த களத்திற்கு வந்து குரல் கொடுத்த நிலையில் மே 2021ல் பொறுப்பேற்ற திமுக அரசோ 31.12.2022 (கூடுதலாக ஒன்றரை ஆண்டுகள்) வரையிலான அகவிலைப்படி நிலுவையான 17%ஐ முழுமையாகக் கபளீகரம் செய்கிறது. (ஒன்றிய அரசு தான் நிறுத்தி வைத்ததைப் பின்னர் நிலுவைத் தொகையுடன் முழுமையாக வழங்கியது)



*2023 ஏப்ரல் 8:*


JACTTO-GEO ஏப். 11ல்  தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து, 3 அமைச்சர்கள் (திரு.எ.வ.வேலு, திரு.தங்கம் தென்னரசு, திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி) முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் குழு தெரிவித்ததை அடுத்து போராட்டம் இரத்து செய்யப்படுகிறது.



*2023 அக்டோபர் 30:*


03.10.2020க்குப் பின்பு உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம் இரத்து செய்வதாக அஇஅதிமுக கொள்கை முடிவு எடுத்த நிலையில், அவர்களுக்கு ஒருபடி மேலே சென்று 03.10.2020க்கு முன்பு முடித்து அன்றைய தேதி வரை ஊக்க ஊதியத்திற்குக் காத்திருந்தோரின் விண்ணப்பங்களையும் 3 ஆண்டுகள் காக்க வைத்து இரத்து செய்தது திமுக அரசு.



*2024 பிப்ரவரி 13:*


பிப்ரவரி 15ல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் அறிவித்திருந்த நிலையில், திரு.எ.வ.வேலு, திரு.முத்துசாமி & திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்களுடன் போராட்டம் அறிவித்த JACTTO-GEOவும் அரசு அலுவலர் ஆசிரியர் & உள்ளாட்சிப் பணியாளர் கூட்டமைப்பும் அரசு அழைப்பின்பேரில் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.


*அரசு அலுவலர் ஆசிரியர் & உள்ளாட்சிப் பணியாளர் கூட்டமைப்பு மட்டும் முதல்வர் ஏதும் அறிவிக்காவிடில் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கிறது...*👍


JACTTO-GEO சலனமின்றி இருக்கிறது.


நிதி நிலைமை சரியில்லை என்றும்,  சரியாக சரியாக படிப்படியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களும் அதிகம் செய்கிறோம் என்றும் எனவே வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் மாண்புமிகு அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அறிக்கைவிடுகிறார்.


அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து  JACTTO-GEO பதில் அறிக்கை வெளியிடுகிறது.



*2024 பிப்ரவரி 14:*


வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் NO WORK NO PAY என்று தலைமைச் செயலாளர் ஆணை பிறப்பிக்கிறார்.


இவ்வளவு நடந்து முடிந்த பின்னரும், JACTTO-GEO மட்டும் முதல்வரைச் சந்தித்துப் பேசுகிறது. அவர் புன்முறுவலோடே வரவேற்று நாஞ்செய்யலேனா வேற யாரு செய்வா எனக் கேட்டதாகவும் முதல்வர் மீது நம்பிக்கை வைத்து பிப்ரவரி 15 ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை இரத்து செய்கிறது.



*2024 பிப்ரவரி 15:*


*அரசு அலுவலர் ஆசிரியர் & உள்ளாட்சிப் பணியாளர் கூட்டமைப்பு மட்டும் அறிவித்தபடி பிப்ரவரி 15 ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்துகிறது...*



*2024 பிப்ரவரி 19:*


சட்டமன்ற கூட்டத்தொடரை எதிர்பார்த்து போராட்டத்தை இரத்து செய்த JACTTO-GEOவிற்கும் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகக் கொடிதான ஏமாற்றமே மிஞ்சுகிறது.


*2024 பிப்ரவரி 24:*


பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கூடிய JACTTO-GEO மாநில உயர் மட்டக்குழு கூட்டத்தில், பிப்ரவரி 26 முதல் அறிவித்திருந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தையும் இரத்து செய்துவிட்டு பொறுத்திருப்போம்! நிறுத்திவைப்போம்! காத்திருப்போம்! பதுங்கி பசித்திருப்போம்! விழித்திருப்போம்! ஒற்றுமையுடன் இருப்போம்! என்று நீண்ட நெடிய மூடநம்பிக்கைக் கதையை அறிக்கையாக வெளியிட்டுத் தனது ஆகச்சிறந்த அறப்பணியைத் தேதி குறிப்பிடாமல் இனிதே மூட்டைகட்டி வைத்துவிட்டது.


*** *** *** ****


மேற்கண்ட காலக்கிரமமான செயல்பாடுகளின் வழியே இந்த மூன்றாண்டு காலத்தில் அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கான நம்பிக்கையைத் தக்கவைக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் இந்த ஆட்சியாளர்கள் ஈடுபடாததோடே, அஇஅதிமுக ஆட்சியில் இருந்ததைவிடக் கூடுதலாக JACTTO-GEO, DSE JACTTO, TETOJAC என்ற பதாகைகளில் 40க்கும் மேற்பட்ட கோரிக்கைகளுக்காகப் போராடும் சூழலை உருவாக்கியுள்ள நிலையில், JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அந்த மூடநம்பிக்கைக் கதையில், 'திராவிட முன்னேற்றக் கழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் மட்டும்தான் நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றித்தரமுடியும் என்ற நம்பிக்கை மீண்டும் மலர்ந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளதில் இருந்து ஒன்றுமட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது, ஒட்டுமொத்த ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களும் போராடி எதையும் பெற்றுத்தரும் தொழிற்சங்க இலக்கணத்தைப் பின்பற்றத் தயாராக இல்லாது ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை வைத்து காலம் கடத்தினாலே போதும் அனைத்தும் கிடைத்துவிடும் என்ற மூட நம்பிக்கையில்தான் உள்ளனர்.


இவர்கள் குறிப்பிடுவது போல, திராவிட முன்னேற்றக் கழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே தானாக முன்வந்து அனைத்து கோரிக்கைகளையும் செய்து கொடுத்துவிடுவாரென்றால், குறைகளைக்கூற அவர்கள் கொண்டுவந்த ஆசிரியர் மனசு, ஊழியர் உள்ளம்னு ஏதேதோ இருக்கே!


ஜாக்டோ-ஜியோ இனி எதற்கு?


தனித்தனியே சங்கங்கள்தான் எதற்கு?


போராடாமல் எதுவும் கிடைக்காது என்ற தொழிற்சங்க இலக்கணம் குறித்து மற்றவர்களுக்குப் பாடமெடுக்கும் இடதுசாரி ஆசிரிய & அரசு ஊழியர் சங்கப் பொறுப்பாளர்கள் தத்தமது சங்கத்தில் இருந்து வெளியேறி ஒரு நல்ல சுப முகூர்த்தநாளில் திமுகவிலும் திமுக சங்கங்களிலும் தங்களை இணைத்துக் கொள்ளலாமே!?


தியாகிகளுக்கு வீரவணக்கம் என்று பொருந்தா புகழொலியை இனி முழங்க வேண்டிய அவசியமென்ன? நீங்கள் இன்று பொறுப்பு வகிக்கும் சங்கங்களை உருவாக்கிக் கட்டிக் காத்து உறுப்பினர்களுக்கு அரணாக நின்று தன் இந்நுயிர் ஈந்த தியாகிகளெல்லாம் முட்டாள்களோ? அவர்கள் ஏன் ஆட்சியாளர்களை நம்பாது போராட்டக் களத்தை நம்பி இந்நுயிர் துறந்து உரிமைகளை ஈன்றளித்தனர்?


நீங்கள் இதுவரை காத்துக்கிடந்த காலத்தில் CPSல் இறந்தோரின் குடும்பங்களும் ஓய்வுற்றோரின் குடும்பங்களும் ஓய்வூதியமின்றி நாதியத்துக் கிடக்கிறதே! அவர்களுக்கு உங்களது பதிலென்ன?


இனியும் நீங்கள் நம்பிக்கையை மட்டுமே வைத்து காத்திருக்கத் தயாராகிவிட்டதால் இனி இறக்கப்போவோரின் குடும்பங்களுக்கும் ஓய்வுறப்போவோரின் குடும்பங்களுக்கும் உங்களது பதிலென்ன?


15 ஆண்டுகளாக ஊதியத்தை இழந்து கடைநிலையில் தள்ளப்பட்டுள்ளதோடே, ஓய்வூதியம், ஊக்க ஊதியம், BT பதவி உயர்வு, EL Surrender என அனைத்தையும் இழந்தும் உங்களது கரங்களை வலுப்படுத்திக் கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு உங்களது பதிலென்ன?


பொறுத்திருப்போம்! நிறுத்திவைப்போம்! காத்திருப்போம்! பதுங்கி பசித்திருப்போம்! விழித்திருப்போம்! ஒற்றுமையுடன் இருப்போம்! இது தானோ?


சரி. இது தான் பதில் என்றால், பின்னர் அந்த மூட நம்பிக்கைக் கதையில், 'திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் மட்டும்தான் நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றித்தரமுடியும் என்ற நம்பிக்கை மீண்டும் மலர்ந்துள்ளது' என்ற காட்டாற்று உருட்டு எதற்கு?


மொத்தத்துல தென்னமரத்துல ஒரு குத்து. பனமரத்துல ஒரு குத்து.


ஆட்சியாளர்களுக்காக உறுப்பினர்களின் உரிமைகளைக் காலவரையறையின்றி ஒருபுறம் அடகு வைத்துவிட்டு, மறுபுறம் அடுக்கு மொழியில் உறுப்பினர்களை உணர்வோடே வைக்கிறோம் என்னும் பொறுப்புமிக்கோர் முழுமையாக உள்ள இக்காலம் மெய்யாகவே தமிழ்நாட்டு ஆசிரியர் அரசு ஊழியர் இயக்க வரலாற்றின் இருண்ட காலமே! இதைச் சாத்தியப்படுத்திய பெருமை JACTTO-GEOவில் அங்கம் வகிக்கும் அனைத்துச் சங்கங்களின் மாநிலப் பொறுப்பாளர்களுக்கும் உரியதே!


நானெல்லாம் அப்படியில்லை என்று சொல்ல முன்வரும் எவரும் நாளையே உரிமை மீட்பிற்கான களப்போராட்டத்தைத் தாராளமாக அறிவிக்கலாமே! ஆயிரம் அணிகளுடன் கூட்டு சேர்ந்து வாழ்வோரைவிட ஒற்றை அணியாகப் போராடித் தோற்று வீழ்ந்தாலும் அவர்களை மட்டுமே வரலாறு போற்றும்!


*பின்குறிப்பு :*

JACTTO-GEOவின் அறிக்கையை மூடநம்பிக்கைக் கதையென எப்படி சொல்லலாமென பொங்கும் எந்தவொரு உயிரினமும் மேலிருந்து கொடுக்கப்பட்டுள்ள தேதிவாரியான கால நிகழ்வுகளைப் பொறுமையுடன் நிதானமாகப் படித்துப் பார்த்தால் மெய்யாகவே மனிதனாகலாம்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சந்திப்பு மற்றும் வாக்குறுதிகளை தொடர்ந்து 15-02-2024 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு - ஜாக்டோ ஜியோ பத்திரிக்கை செய்தி...


 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சந்திப்பு மற்றும் வாக்குறுதிகளை தொடர்ந்து 15-02-2024 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு - ஜாக்டோ ஜியோ பத்திரிக்கை செய்தி -  Temporary Adjournment of One Day (15-02-2024) Identification Strike Following Hon'ble Tamil Nadu Chief Minister's Meeting and Promises - JACTTO GEO Press Release...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இன்றைய (14-02-2024) முதலமைச்சர் சந்திப்பு - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பேட்டி...

இன்றைய (14-02-2024) முதலமைச்சர் சந்திப்பு - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பேட்டி...



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



நன்றி : இந்து தமிழ்


ஜாக்டோ - ஜியோவின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு: முதல்வரை சந்தித்த பின் அறிவிப்பு...


சென்னை: நாளை நடைபெற இருந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.


பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்து இருந்த நிலையில், அந்த போராட்ட அறிவிப்பை திரும்ப பெற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், இந்தப் போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றனர்.


 

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், "பழைய ஓய்வூதிய திட்டத்தை பல மாநிலங்கள் செயல்படுத்திவிட்டன. இதை முதல்வரிடம் தெரியப்படுத்திய போது, "நான் தராமல் யார் தர போகிறார்கள். நிச்சயம் பழைய ஓய்வூதியம் வழங்கப்படும். மேலும், மிக விரைவில் நிதி நிலை சரி செய்த பிறகு உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக சரி செய்யப்படும்" என்று முதல்வர் ஸ்டாலின் எங்களிடம் உறுதியளித்தார்.


முதல்வரை சந்தித்ததன் அடிப்படையில் அவர் அளித்த உறுதியின் அடிப்படையில் நாளை நடைபெற இருந்த போராட்டத்தை ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளோம். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவதற்குள் எங்களது பொருளாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஒத்திவைப்பது என்று முடிவு செய்துள்ளோம். 19-ம் தேதிக்கு பிறகு ஜாக்டோ - ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர் மீண்டும் கூடி அடுத்தகட்ட முடிவை தெரிவிப்போம். முதல்வர், அமைச்சர்கள் எல்லோரிடம் இதனை வலியுறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தனர்.



திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் - ஜாக்டோ ஜியோ...

 திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் -  ஜாக்டோ ஜியோ... 


நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.


எங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்.


நாளை மறுநாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும்.


பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் - ஜாக்டோ ஜியோ.


வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.


நிதி நிலைமை சரியானவுடன் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தங்கம் தென்னரசு கூறியதை ஏற்க மறுப்பு...








இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Work bookல் உள்ள தொகுத்தறி மதிப்பீடு (SA) எழுத உத்தேச Time Table

  Work bookல் உள்ள  தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) எழுத உத்தேச Time Table வணக்கம். மதிப்பிற்குரிய HMs & Teachers, Work bookல...