கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.04.2023 - School Morning Prayer Activities...

 

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.04.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: வெஃகாமை


குறள் எண் : 171

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.


பொருள்:

மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்


பழமொழி :

Dig a well before you are thirsty


தாகம் வரும் முன் கிணறு வெட்டி விடு. 


இரண்டொழுக்க பண்புகள் :


1. என் முன் என்னை புகழ்ந்து பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பேன்.


 2. எல்லா காரிங்களிலும் நிதானம் கைகொள்வென். அதுவே என் பலன் ஆகும்


பொன்மொழி :


செய்ய முடிந்தவன் சாதிக்கிறான். செய்ய முடியாதவன் அடுத்தவர்களுக்கு போதிக்கிறான்.


பொது அறிவு :


1. ஐஸ் கட்டி ஆல்கஹாலில் மிதக்குமா? 


 மிதக்காது. 


 2. கண்ணாடி சோப்பு என அழைக்கப்படுவது எது?


 மாங்கனீசு.


English words & meanings :


 Open handed - giving freely. noun. தாராள கை (குணம்) பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


பொதுவாக தென்னிந்திய உணவுகளில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க கறிவேப்பிலை சேர்க்கப்படுகிறது. எல்லா உணவுகளிலும் சேர்க்கப்படும் கறிவேப்பிலை, உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் எண்ணெயிலும் சேர்த்து பயன்படுத்தலாம். இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதத்திலும் கறிவேப்பிலை அதிகமாக பயன்படுத்ததப்படுகிறது.


கணினி யுகம்


Alt + Print Screen - Allows you to take a screenshot of the current page. Ctrl + Alt + Del - With the help of these keys, you can Reboot/Windows task manager


நீதிக்கதை


கதை :


ஒரு நரியானது செடி, கொடிகள் அடர்ந்த காட்டில் வாழ்ந்து வந்தது. 




ஒரு நாள் நரி வேலியைத் தாண்டும்போது எக்கச்சக்கமான முள்சொடியில் மாட்டிக் கொண்டுவிட்டது. 




தப்பிக்க முயல்கையில் நரியின் உடம்பெல்லாம் காயம், கீறல் பட்டது. அதனை கண்டு நரி மிகவும் கோபமடைந்தது. 




முள்செடியைப் பார்த்து, என்ன செடி நீ, பார் உடம்பெல்லாம் கீறிவிட்டாய். நீயெல்லாம் ஒரு நண்பனா? என்று திட்டியது. 




முள்செடி அதற்கு, நண்பா, நான் முள்செடி. என்னை குத்துவதற்குத் தவிர வேறு எதற்காகவும் படைக்கப்படவில்லை, என்னைக் குறை சொல்வதில் பயன் இல்லை என்றது. 




முதலில் தன்னிடம் உள்ள குறையை பார்க்காமல் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தக் கூடாது. 




நீதி :



மற்றவர்களை குறை சொல்லும் முன் தன்னிடம் உள்ள குறையை அறிய வேண்டும்.


இன்றைய செய்திகள்


10.04.2023


* தளி அருகே 700 ஆண்டுகள் பழமையான ஒய்சாளர் கால வீரபத்திரர் சிற்பம் கண்டறியப்பட்டுஉள்ளது என கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தெரிவித்துள்ளார்.


* தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி ஏல அறிவிப்பில் இருந்து விலக்கு - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு.


* பொது இடங்களில் முகக் கவசத்தை கட்டாயமாக்கும் அவசியம் தற்போது இல்லை.தேவைப்படும்போது கட்டாயமாக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


* தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* அடுத்த 5 நாட்களில் நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


*2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் 3,167 புலிகள் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


* தொடரும் பதற்றம்: தைவானை சுற்றி 2வது நாளாக சீனா போர் ஒத்திகை.


* தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: ஜூன் 12 ஆம் தேதி தொடங்குகிறது.


* ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரியான்ஷூ சாம்பியன்.


" உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் ஷிவ தபா, தீபக் உள்பட 13 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.


Today's Headlines


* A 700-year-old Veerabhadra sculpture of the Oysalar period has been found near Thali, said Krishnagiri Government Museum Archivist.Exemption from Coal Auction Notification in Tamil Nadu Delta Areas - Notification by Union Minister Prakalat Joshi.


 * Health Minister M. Subramanian has said that there is no need to make face shield mandatory in public places.


* According to the Meteorological Department, there is a chance of rain at one or two places in Tamil Nadu today and tomorrow.


 * The India Meteorological Department has said that the temperature will gradually increase by 2 to 4 degrees Celsius in most parts of the country in the next 5 days.


 * According to the 2022 census, there are about 3,167 tigers in India, PM Modi said.


 Tensions Continue: China War Rehearses Around Taiwan For 2nd Day


* Tamil Nadu Premier League Cricket: Starts on 12th June.


 * Orleans Masters International Badminton: Indian player Brianshu is the champion.


 *13 players including Shiva Thapa and Deepak have been included in the Indian team for the World Boxing Championship.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...