கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சென்னையில் வருகின்ற 11ஆம் தேதி நடைபெற இருந்த ஜாக்டோ- ஜியோ தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் தற்காலிக வாபஸ் (JACTTO GEO Chief Secretariat siege protest scheduled to be held on 11th in Chennai has been temporarily called off)...

 



>>> அமைச்சர்களுடன் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேச்சுவார்த்தை கூட்டம் (காணொளி)...


மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ்  ஆகியோர் தலைமையில், ஜாக்டோ- ஜியோ அமைப்பினர்களுடன் அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



சென்னையில் வருகின்ற 11ஆம் தேதி நடைபெற இருந்த ஜாக்டோ-ஜியோ தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் தற்காலிக வாபஸ் (JACTTO GEO Chief Secretariat siege protest scheduled to be held on 11th in Chennai has been temporarily called off)...


ஜாக்டோ ஜியோ ஏப்ரல் 11 கோட்டை முற்றுகை போராட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி, இன்று 8.4.23 மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழுவானது தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டது.  இந்தப் பேச்சுவார்த்தையானது ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.


முன்னதாக, இன்றைய கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மூன்று அமைச்சர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.


மாண்புமிகு அமைச்சர்கள் ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் தொடர்பான விரிவான தயாரிப்போடு கலந்து கொண்டனர்.  


ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தனர்.  


மேலும், மாண்புமிகு நிதி மற்றும் மனித வள‌ மேலாண்மை துறை அமைச்சர் அவர்களின் ஆசிரியர் அரசு ஊழியர் விரோத போக்கினையும் மாண்புமிகு அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.  இதனால் ஆசிரியர் அரசு ஊழியர் மற்றும் அரசுக்கு இடையே ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தனர்.


மேலும், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தொடர்பான பணிப் பாதுகாப்பு சட்டம், நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.


இப்பேச்சு வார்த்தையின் முடிவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் வாக்குறுதிகளின் அடிப்படையில் ஏப்ரல் 11 கோட்டை முற்றுகை போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற‌ வேண்டுகோளை விடுத்தனர்.


இதன் பின்னர், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூடி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆசிரியர் அரசு ஊழியர்களின் மீதுள்ள அக்கறையின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ததற்கும், மாண்புமிகு அமைச்சர்கள் குழு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையிலும் நல்லெண்ண நடவடிக்கையாக ஏப்ரல் 11 கோட்டை முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.


மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

ஜாக்டோ ஜியோ



>>> அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை  - ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025 ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாள்கள்

Tamil Nadu RL List 2025 - RH leave List 2025 - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 2025 - Restricted Leave Days 2025 (RL / RH List 2025)... 202...