கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.04.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.04.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: வெஃகாமை


குறள் எண் : 172

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்.


பொருள்:

நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்


பழமொழி :

No sweet without sweat


வியர்வை சிந்தாமல் இன்பம் இல்லை.


இரண்டொழுக்க பண்புகள் :


1. என் முன் என்னை புகழ்ந்து பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பேன்.


 2. எல்லா காரிங்களிலும் நிதானம் கைகொள்வென். அதுவே என் பலன் ஆகும்


பொன்மொழி :


ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை


பொது அறிவு :


1. நியூயார்க் நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது? ஹட்சன் நதிக்கரையில் . 2. சுமார் 55 ஆயிரம் ஏரிகளை கொண்ட நாடு எது ? பின்லாந்து.


English words & meanings :


 orthography – the conventional spelling system of a language. noun. எழுத்திலக்கணம். பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு 


பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கறிவேப்பிலை நம் ஆரோக்கியத்திற்கு பல அதிசயங்களை செய்கிறது. உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை பராமரிப்பது முதல் டைப்-2 நீரிழிவு மற்றும் இதய நோய்களைத் தடுக்க உதவுவது வரை உங்களுக்கு பல்வேறு நன்மைகளை இது வழங்குகிறது.


கணினி யுகம்


Ctrl + Alt + Del - With the help of these keys, you can Reboot/Windows task manager. Ctrl + Esc - These keys allow you to activate the start menu.


ஏப்ரல் 11






மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே (மராத்தி: जोतीबा गोविंदराव फुले ஆங்கில மொழி: Mahatma Jyotirao Govindrao Phule) இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதியாவார். சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர்


நீதிக்கதை


கதை :


ஒரு காட்டில் ஒரு சிங்கம் எல்லா மிருகங்களுக்கும் சண்டைப் பயிற்சி அளித்து வந்தது. அதில் ஒரு நரி மிகவும் திறமை வாய்ந்தவன் என்று பட்டம் பெற்றது. 


நரிக்கு பெருமையும், கர்வமும் தாங்க முடியாமல் போனது. என்னோடு சண்டை போட்டு ஜெயிப்பவர்கள் யார் என்று எல்லா மிருகங்களையும் வம்புக்கு இழுத்தது. நரியைக் கண்டாலே வெறுப்பாகும் அளவுக்கு எல்லா மிருகங்களும் ஒதுங்க ஆரம்பித்தன. 


இந்த நரியின் கொட்டத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சிறு அணில் ஆசைப்பட்டது. அது நரியுடன் சண்டையிடுவதற்கு தயார் என்று அறிவித்தது. 


ஒரு சின்ன அணில் தன்னை வென்று விட முடியுமா என்று நினைத்த நரி பந்தயத்திற்கு ஒப்புக் கொண்டது. கண நேரத்தில் அந்த அணில் நரியின் மீது பாய்ந்து எத்தனை இடங்களில் கடிக்க முடியுமோ கடித்து விட்டு ஓடியது. 


என்ன ஏது என்று புரிவதற்கு முன்பே நரியின் உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டிருக்க வலி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தது. 


நீதி :



மற்றவர்களை இழிவாக நினைத்தால் துன்பம் நம்மையே வந்தடையும்.


இன்றைய செய்திகள்


11.04. 2023



* தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.


* போக்சோ வழக்குகளை விரைவாக விசாரிக்க மேலும் 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


* “2023-ம் ஆண்டில் மாவட்ட நீதிபதி பதவியில் உள்ள 45 இடங்களையும், சிவில் நீதிபதி பதவியில் உள்ள 245 இடங்களையும் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தமிழக அரசின் நீதித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


* தமிழகத்தில் கரோனா பரவல் க்ளஸ்டர் பாதிப்பாக இல்லை என்றும் புதிய திரிபின் வீரியம் குறைவாகவே உள்ளது என்றும் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


* வாடிக்கையாளர்களுக்கு பல்க் மெசேஜ் அனுப்பும் சேவை வழங்கும் நிறுவனங்கள் சிலவற்றில் சீன ஹேக்கர்களின் கைவரிசை இருப்பதாக அறியப்பட்டதால் அவற்றை மத்திய அரசு தடை செய்துள்ளது.


* “இந்த ஆண்டு இந்தியாவில் பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கும். எல் நினோ வாய்ப்புகள் அதிகரிக்கும். இது ஆசியாவுக்கு வறண்ட வானிலையைக் கொண்டு வரலாம்” என்று தனியார் வானிலை முன்னறிவிப்பு மையமான ‘ஸ்கைமெட்’  தெரிவித்துள்ளது.


* உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா இன்று இந்தியா வருகை.


* 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: புதிய கேப்டன்களுடன் களம் இறங்கும் அணிகள்.


* கொல்கத்தா அணியின் உத்தரப்பிரதேச வீரர் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 பந்துகளில் 5 சிக்சர்கள் விளாசி கொல்கத்தாவை தோல்வியின் பிடியிலிருந்து வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.


Today's Headlines


* Governor RN Ravi has approved the Online Gambling Prohibition Bill passed again in the Tamil Nadu Legislative Assembly.


* The Tamil Nadu government has approved setting up of special courts in 4 more districts for speedy trial of POCSO cases.


* "In 2023, steps will be taken to fill up 45 posts in the post of District Judge and 245 posts in the post of Civil Judge," the Tamil Nadu Government's Judiciary Policy Brief said.


*  Tamil Nadu People's Welfare and Medical Minister M. Subramanian has said that there is no corona spread cluster in Tamil Nadu and the severity of the new strain is low.


 * The central government has banned some companies that offer bulk messaging services to consumers because they are known to have the hand of Chinese hackers.


* “Monsoon rains in India this year will be less than usual.  El Nino chances increase.  This may bring dry weather to Asia,” said private weather forecasting center 'Skymet'.


* Foreign Minister of Ukraine Emin Tabarova will visit India today.


 * 13th Cricket World Cup: Teams to field with new captains


* Kolkata's Uttar Pradesh player Ringu Singh hit 5 sixes in 5 balls in the last over to take Kolkata from the clutches of defeat to victory.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns