கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குருபெயர்ச்சி பலன்கள் - கடகம்...

 


குருபெயர்ச்சி பலன்கள் - கடகம்



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை கடகம் ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

குடும்ப ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

சுக ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

சத்ரு ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

கனிவும், கற்பனை வளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே!!

குரு தொழில் ஸ்தானத்தில் நிற்பதால் வியாபாரம் நிமிர்த்தமான எண்ணங்கள் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

பலன்கள்:


குரு ஐந்தாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் சாதுரியமான பேச்சுக்களால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். குடும்பத் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.


குரு ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதால் தாய்வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். புதிய வீடு மற்றும் வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். கால்நடை தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். பெரியோர்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வங்கி சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும்.


குரு ஒன்பதாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தை பார்ப்பதால் எதிர்ப்புகளால் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். ஆடம்பரப் பொருட்கள் தொடர்பான விரயங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

பொருளாதாரம்:


எதிர்பார்த்த வரவுகள் கிடைத்தாலும் அதற்கு ஏற்ப சுப விரயங்களும் ஏற்படும். முதலீடு சார்ந்த விஷயங்களில் ஆலோசனை பெறவும். நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும்.

உடல் ஆரோக்கியம்:


உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உணவு சார்ந்த விஷயங்களில் சில மாற்றங்களால் நன்மைகள் அதிகரிக்கும். தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

பெண்களுக்கு:


சுய தொழில் நிமிர்த்தமான முயற்சிகளில் குறைந்த அளவிலான முதலீடுகள் மேற்கொள்வது நல்லது. பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் நெருக்கமானவர்களிடம் வருத்தங்கள் நேரிடலாம். மனதிற்குப் பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு:


கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். மருத்துவம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். வெளிநாடு தொடர்பான கல்வி வாய்ப்பு சாதகமாக அமையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


வேலை நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பணி நிமிர்த்தமான பயணங்களை அடிக்கடி மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். சக பணியாளர்களை அரவணைத்து செல்வதன் மூலம் ஒத்துழைப்புகள் மேம்படும். நிர்வாகம் தொடர்பான விஷயங்களை அறிந்து செயல்படவும்.

வியாபாரிகளுக்கு:


சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் தொழில் சார்ந்த பிரச்சனைகளை வெற்றிக் கொள்வீர்கள். வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து செயல்படவும். புதிய நபர்களை நம்பி அறிமுகம் இல்லா தொழில்களில் இறங்குவதை தவிர்க்கவும். பங்குதாரர்கள் வழியில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு:


கலை சார்ந்த துறைகளில் உள்ளவர்களுக்கு வித்தியாசமான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுகமான போட்டிகளை அறிந்து வெற்றிக் கொள்வீர்கள். நடைமுறை அறிந்து எதார்த்தமான படைப்புகளால் கீர்த்தி பெறுவீர்கள். சில சிந்தனைகளின் மூலம் நெருக்கடிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு:


புதிய பதவி மற்றும் பொறுப்புகள் சில தாமதங்களுக்குப் பின்பே சாதகமாக அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் மேம்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிராக செயல்பட்டவர்களுக்கு மாறுபட்ட முறையில் பதிலடி கொடுப்பீர்கள்.

நன்மைகள்:


தொழில் ஸ்தானத்தில் நிற்கின்ற குருவினால் குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கையும், ஆதரவும் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் புதிய மாற்றங்கள் பிறக்கும். மாறுபட்ட அனுபவங்களின் மூலம் மனப்பக்குவம் உண்டாகும்.

கவனம்:


தொழில் ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் செய்கின்ற செயல்களிலும், எடுத்துச் செல்லும் உடைமைகளிலும், ஜாமீன் தொடர்பான விஷயங்களிலும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

வழிபாடு:


வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்து வர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும்.


வசதி குறைவாக இருக்கின்ற வயதான ஆசிரிய பெருமக்களுக்கு உதவி செய்து ஆசி பெறுவதன் மூலம் எதிர்பார்த்த சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Procedure to Apply for Leave through Kalanjiyam Mobile App

  KALANJIYAM - APPLY LEAVE ♻️ 01-01-2025 முதல் அனைத்துவகை ஆசிரியர்களும் ▪️CL ▪️RL ▪️EL ▪️ML போன்ற விடுப்புகளை களஞ்சியம் கைபேசி செயலி வழியாக ...