கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விமானம் எவ்வாறு அதன் பாதையில் சரியாக செல்கிறது? (How does the plane follow its path?)...



 விமானம் எவ்வாறு அதன் பாதையில் சரியாக செல்கிறது? (How does the plane follow its path?)...


தரை வழியில் பாதைகள்/ நெடுஞ்சாலைகள் திடப்பொருளில் (solid) உருவாக்க படவேண்டும். பின் அதற்கு தனிப்பட்ட எண் தரவேண்டும் உதாரணத்திற்கு NH45 , SH67. முதலியவை.


வான் வழியிலும்  பாதைகள் உலகம் முழுவதும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வான்வழிப் பாதைக்கும் எண் உள்ளது. எல்லாவற்றையும் ஜெப்ஸன் சார்ட்டில் (Jeppson Chart) காணலாம்.



மேலுள்ள படத்தில் ஏர்வேஸ் A465 காண்பிக்கப்பட்டுள்ளது.


இது கொல்கத்தாவிற்கும் இலங்கை கொழும்புவிற்கும் வரையறுக்கப்பட்ட வான்வழி பாதை.


அனுமதி பெற்றபின் விமானிகள் கண்டிப்பாக அதைப் பின்பற்ற வேண்டும். மீறினால் குற்றமாகும்.


இந்த பாதை மூன்று வான் மண்டலஙகளில் (Flight Information Region) கல்கத்தா FIR, சென்னை FIR, கொழும்பு FIR. செல்கிறது. எல்லைகள் பச்சை நிறத்தில் உள்ளது.


ஒவ்வொரு மண்டலமும் தங்களின் எல்லையில் பறந்து கொண்டிருக்கும் விமானங்களை கட்டுப்படுத்துவார்கள். அதாவது வழியில் வானிலை மோசமாக இருந்தால் விமானி அதை தவிர்க்க சிறிது வான்வழி பாதையில் இருந்து விலகி செல்ல தேவையிருக்கும். அதற்கு முறையான அனுமதி பெற்றுத் தான் விலகவேண்டும்.


ஒவ்வொரு மண்டலத்தை கடக்கும் போது இரண்டு மண்டலங்களுக்கும் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.


ஒருவேளை விமானி மறந்தாலும் அந்த குறிப்பிட்ட எல்லையை கடக்கும் நேரம் தாண்டி விட்டால் கட்டுப்பாடு அறையில் இருந்து விமானத்தை அழைத்து கேட்பார்கள்.


தற்போது ஊடொளியுடன் (LASER) கணினி மயமாக்கப்பட்ட உபகரணங்கள் விமானத்தில் உள்ளதால் குறிப்பிட்ட பாதையில் மிகவும் சரியாக செல்ல முடியும்.


மேலும் வானிலை நிலவரமும் அதில் இணைத்து விமானி அறிந்து கொள்ள முடியும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns