கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) போட்டித்தேர்வில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள் (Guidelines for Candidates of Dream Teacher Competition)...

 


>>> கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) போட்டித்தேர்வில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள் (Guidelines for Candidates of Dream Teacher Competition)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கனவு ஆசிரியர் தேர்வின் முதல்  நிலைத்தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்!


திரையில் தோன்றுவதைப் படிப்பதற்கு எளிதாக மடிக்கணினி/மேசைக்  கணினியில் தேர்வை எழுத  நாங்கள் பரிந்துரைக்கிறோம். உங்களிடம் இவை இல்லையென்றால், திறன்பேசியின்  கூகுள் குரோம் உலாவியின் வாயிலாக மட்டும் தேர்வை எழுதலாம். ஐபோனைப் (iphone) பயன்படுத்தக்கூடாது.


குறிப்பு:

1. கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும். தேர்வின்போது விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால் தேர்வர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். இதில்  தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (SCERT) முடிவே இறுதியானது. இம்முடிவானது, கணினியில் பதிவான  மற்றும் தேர்வர்களுக்கென்று வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும்.


2. தேர்வர்களுக்கு மறுதேர்வு, நேர நீட்டிப்பு மற்றும் பிற சலுகைகள் போன்றவை எந்நிலையிலும் அளிக்கப்படமாட்டாது; மின்வெட்டு, கணினியில்  ஏற்படும் கோளாறுகள், மெதுவான இணைய வேகம் உள்ளிட்ட  பிற காரணங்கள் இருப்பினும் சலுகைகள் அளிக்கப்படாது. 


இதில் 3 பிரிவுகள் உள்ளன:


1. கணினி மற்றும் கணினி சார்ந்த தேவைகள்


கணினி: மேசைக்கணினி / மடிக்கணினியே முதன்மையாகப் பரிந்துரைக்கப்படுகிறது; அவை இல்லாதநிலையில் திறன்பேசி/கைபேசியைப் (Android phone)  பயன்படுத்தலாம். 

இணைய வேகம்: குறைந்தபட்சம்  தொடர்ச்சியாக  2 Mbps இருக்க வேண்டும். (இணைய வேகம் மெதுவாக இருந்தால், தேர்வு பதிவேற்றம் ஆக அதிக நேரம் எடுக்கும்.)

உலாவிகள்: கூகுள் குரோம்/ மைக்ரோ சாப்ட் எட்ஜ்/ மொஸில்லா பயர்பாக்ஸ் உலாவி (கூடுதல் விவரங்களுக்குப் பிற்சேர்க்கையைப் பார்க்கவும்.)

தேர்வு நேரம் முழுவதும் இணைய ஒளிப்படக்கருவி மற்றும் ஒலிவாங்கிகள் இயக்கத்திலேயே  இருக்க வேண்டும் (கணினி சாதனங்களைச் சரியாக அமைத்தல் தொடர்பான விவரங்களுக்குப் பிற்சேர்க்கையைப்  பார்க்கவும்.)

தேர்வுக்கு 48 மணிநேரம் முன்னதாகத் தேர்வர்கள், தாங்கள் தேர்வை மேற்கொள்ளவிருக்கும் கணினியிலிருந்து பின்வரும் இணைப்பைச் சொடுக்கித் தொடர்புகொள்ள முடிகிறதா என்பதைச் சரிபார்க்கப் அறிவுறுத்தப்படுகிறார்கள். இணைய இணைப்புக்கான உரலி - https://assess.cocubes.com/check-system


2. தேர்வு அறையைத் தயார்செய்தல் (தேர்வுக்கு முன்)

தேர்வு நடைபெறும் அறை வெளிச்சமாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு முன்னால் வெளிச்சம் இருக்கும்வகையில் உங்கள் மடிக்கணினி /மேசைக் கணினி /தொலைப்பேசியை வைக்கவும்.

இடையூறுகளைத் தவிர்க்க ஒரு தனி அறையைப் பயன்படுத்தவும் . தேர்வின்போது யாரும் உங்களுடன் தேர்வுஅறையில் இருக்கக்கூடாது.

 

  3. தேர்வுக்கான அறிவுரைகள் 


சரியாகக் காலை 11:30 மணிக்குத் தேர்வு மேற்கொள்ளுவதற்கான (இந்திய நேரப்படி (IST) )  பொத்தானை(button) அழுத்த வேண்டும். ஆனால், நீங்கள் ஒரு நிமிடத்திற்கு முன்பாக கூடத் தேர்வைத் தொடங்க முயற்சி செய்தால் தேர்வு, நேரலையில் இருக்காது. தொழில்நுட்ப அல்லது இணையச் சிக்கல்கள் காரணமாக நீங்கள் ஏதேனும் தாமதத்தை எதிர்கொண்டால், தேர்வு தொடங்கிய 15 நிமிடங்கள் வரை  தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும், மேலும் தேர்வுக்காக வழங்கப்படும் முழு நேரத்தையும் பெறுவீர்கள். 15 நிமிடங்கள் கடந்த பிறகு, எந்தக் காரணத்திற்காகவும் தேர்வை எழுத அனுமதிக்கப்படமாட்டீர்கள்.

தேர்வைத் தொடங்கும்போது முதல் பக்கத்தில், ஒப்புதல் பெறும் பட்டி ஒன்று தோன்றுவதைக் (pop-up)  காண்பீர்கள். உங்கள் ஒலி மற்றும் ஒளி காட்சியைப் பதிவு செய்வதற்கான ஒப்புதலை வழங்க, பட்டியில்  உள்ள  சரி பொத்தானை (Agree button) அழுத்தவும். நீங்கள் தேர்வைத் தொடங்குவதற்கு முன்பு இதை அவசியம் பின்பற்ற வேண்டும்.


தேர்வின் போது நீங்கள் ஏதேனும் தொழில்நுட்பக்  கோளாறு அல்லது பிற சிக்கல்களை எதிர்கொண்டால், தயவுசெய்து உங்கள் பதிவு அடையாள எண்ணைக் (registration ID) குறிப்பிட்டு, நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலையும்  முடிந்தால்  கணினித்திரையின் ஒளிப்படத்தையும்  (screenshot ) இணைத்து aasindiatechsupport-centa@aon.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். அனுப்பிவிட்டு தயவுசெய்து காத்திருக்கவும்  ஏனெனில், தொழில்நுட்ப உதவிக் குழுவானது  மற்ற தேர்வர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருக்கலாம்.



தேர்வுத்தாளின்  முதல் பக்கத்தில் வலதுபுற மேல் பக்கத்தில் தேர்வர் எண்ணிற்கு மேலே காட்டப்படும் உங்கள் 10 இலக்கப் பதிவு எண்ணைச்  (registration ID) சரிபார்க்கவும். நீங்கள் இணையத்தின் உள்நுழைகையில் (portal) குறிப்பிடப்பட்டுள்ள எண், நீங்கள் பதிவு செய்தபோது பெறப்பட்ட அடையாள எண்ணிலிருந்து வேறுபட்டு இருந்தால், நீங்கள்  aasindiatechsupport-centa@aon.com  என்ற  மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். தேர்வர் அடையாள எண்ணை (இது பதிவு எண்ணிற்குக்கீழே காட்டப்படும்) நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டாம். ஏனெனில், இது தோராயமாக உருவாக்கப்பட்ட எண்ணாகும்.



தேர்வைத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் ஒளிப்படம் எடுக்கப்படுவீர்கள். நீங்கள் மூக்குக்கண்ணாடியை உபயோகிப்பவராக இருந்தால் உங்கள் கண்ணாடியை அகற்றுவதை உறுதிசெய்து கொள்ளவும். இது கண்ணாடியிலிருந்து வரும் வெளிச்சத்தைத்  தவிர்க்க உதவும் .


தேர்வின்போது பயன்படுத்துவதற்கு 2-3 வெற்றுத்தாள்களை வைத்துக் கொள்ளவும்.

ஒவ்வொரு தாளின் மேல்புற வலதுமூலையிலும் உங்கள் பதிவு எண்ணை (registration ID) (உங்கள் EMIS இணையத்தில் குறிப்பிடப்பட்டது/ உங்கள் பதிவு உறுதி செய்யப்பட்டபோது  நீங்கள் பெற்றது) எழுதவும். நீங்கள் தேர்வைத் தொடங்கும்போதும் அல்லது உங்கள் இணையக் கண்காணிப்பாளரால் கேட்கப்படும்போதும் வெற்றுத்தாள்களை ஒளிப்படக்கருவி முன்னால்  காட்டவும்.


தேர்வு எழுதும் இடத்தைச் சுற்றி ஏதேனும் இரைச்சல் இருந்தாலும் இணைய கேமரா(Web Camera),  கணினியின் ஒலிவாங்கி  மற்றும் ஒலி அமைப்புகளை இயக்கத்திலேயே  வைத்திருக்க வேண்டும். தேர்வின்போது எந்த நேரத்திலாவது உங்கள் கேமரா அல்லது ஒலிவாங்கிகள் இயக்கத்தில் இல்லாமல் இருந்தால், நீங்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.



உங்கள் முழு முகமும் தேர்வு முடியும்வரை ஒளிப்படக்கருவியில் தெரியும்படி இருக்க வேண்டும்.


தேர்வு நேரத்தின்போது தேர்வர்கள்,   காது மற்றும் தலையில் அணியக்கூடிய ஒலிவாங்கிகள் (Headphones/Earphones)  போன்ற சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது.



தேர்வில் 22கேள்விகள் (மொத்தம் 35 மதிப்பெண்கள்) கொடுக்கப்பட்டிருக்கும் மற்றும் கேள்விகளுக்குப் பதிலளிக்க உங்களுக்கு 45 நிமிடங்கள் வழங்கப்படும்.


நீங்கள் தேர்வை முடித்து 45 நிமிடங்களில் சமர்ப்பிக்கவில்லை என்றால், உங்கள் விடைகள் தானாகவே சேமிக்கப்படும் மற்றும் உங்கள் தேர்வு தானாகவே சமர்ப்பிக்கப்படும். பிற அனைத்து   சூழ்நிலைகளிலும், தேர்வை உங்களால் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்; கணினியால்  தானாகச்  சமர்ப்பிக்க  முடியாது . 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...