கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நீட் 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழ்நாடு மாணவர் முதலிடம் (NEET 2023 Result Released - Tamilnadu Student Top)...

 நீட் 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழ்நாடு மாணவர் முதலிடம் (NEET 2023 Result Released - Tamilnadu Student Top)...


நாடு முழுவதும் கடந்த மே 7ஆம் தேதி 499 நகரங்களில் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.


நீட் தேர்வு முடிவுகளை www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.



>>> Press Release for Final NTA Score for NEET (UG) - 2023...


இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in, ntaresults.nic.in ஆகிய இணையதளங்களில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 78,693 மாணவர்கள் நீட் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன், ஆந்திராவை சேர்ந்த போரா வருண் சக்ரவர்த்தி இருவரும் 99.9% மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். முதல் பத்து இடங்களில் நால்வர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் கடந்த மே மாதம் 7-ந்தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன் முதலிடம் பிடித்துள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி என்பவர் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் 4 பேர் தமிழ்நாட்டினர்  ஆவர்.


இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது 


தேசிய அளவில் 11.45 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி


தமிழ்நாடு மாணவர்கள் 78 ஆயிரத்து 693 பேர் தேர்வு


 விழுப்புரம் மாவட்டம் மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் திரு.ஜெகதீஷ் அவர்களின் புதல்வன்  பிரபஞ்சன் அவர்கள் இன்று வெளிவந்த NEET தேர்வு  முடிவில் 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.


 இவர் சொந்த ஊர் மேல்மலையனூர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தற்போது வசித்து வருகிறார்...



நாடு முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் நீட் தேர்வு எழுதினர். இதில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் உத்தர பிரதேசம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து மராட்டிய மாநிலம் 2-வது இடத்திலும், ராஜஸ்தான் 3-வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.44 லட்சம் பேரில் 78,693 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 – 1st to 8th Standard - Term 2 (Half Yearly) Examination Time Table & Question Papers Download Instructions – Proceedings of Director of Elementary Education

    2024-2025 - ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை & இரண்டாம் பருவம் (அரையாண்டு) தேர்வு கால அட்டவணை & வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும...