கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.06.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.06.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பயனில சொல்லாமை

குறள் : 200


சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்.


விளக்கம்:


சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாத சொற்களை சொல்ல கூடாது.


பழமொழி :

A good reputation is a fair estate


நற்குணமே சிறந்த சொத்து.


இரண்டொழுக்க பண்புகள் :


1. அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.


 2. அனைவரையும் மதித்து நடப்பேன்.


பொன்மொழி :


இழந்த செல்வத்தை உழைப்பால் திரும்பப் பெறலாம், இழந்த அறிவை படிப்பால் திரும்பப் பெறலாம், இழந்த ஆரோக்கியத்தை பத்தியம் அல்லது மருத்துவத்தால் திரும்பப் பெறலாம், ஆனால் இழந்த நேரம் என்றென்றும் இழந்ததுதான். --சாமுவேல் ஸ்மைல்ஸ்


பொது அறிவு :


1. நிலவில் முதன் முதலில் இறங்கியவர் யார்?


விடை: நீல் ஆம்ஸ்ட்ராங்


2. எவரெஸ்ட் சிகரத்தில் முதலில் ஏறியவர்கள் யார்?


விடை: எட்மண்ட் ஹிலாரி மற்றும் ஷெர்பா டென்சிங் நோர்கே


English words & meanings :


 Disease –sickness. நோய். 


Entrance –a passage or gate to go inside a place. வாசல்


ஆரோக்ய வாழ்வு :


யோகா வாரம் : ஆரோக்கியம், ஆனந்தம், அன்பு, மன அமைதி என உங்கள் தேடல் இதில் ஏதுவாக இருந்தாலும் அதனைத் தரும் மருந்தாக இருந்து வருகிறது யோகாசனங்கள். முறையான பயிற்சி அவசியம்


ஜூன் 23


கிஜூபாய் பதேக்கா அவர்களின் நினைவுநாள்


கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை[1] அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை [2] நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.


நீதிக்கதை


சவுதி அரேபியாவில் உள்ள ஒரு  அரசு மருத்துவமனையில் 23 நாட்களாக அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு முதியவரைக்காண அவருடைய குடும்பத்தினர் யாருமே வராத நிலையில் ஒரு புறா மட்டும் தினமும் வந்து அந்த முதியவர் சிகிச்சையிலிருந்த ஜன்னலின் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்ததாம். 


தொடர்ந்து ஓரிறு நாட்கள் இதைக்கவனித்த  நர்ஸ் பெண்மணி புறா வந்த நேரம் ஜன்னலைக் கொஞ்சம் திறந்து விட்டாராம். அதற்கெனவே காத்திருந்ததைப்போல உடனே அந்தப்புறா உள்ளே வந்து இந்த முதியவரின் மேல் சிறிதுநேரம் அமர்ந்திருந்துவிட்டு பறந்து போய்விட்டதாம். அதன் பிறகும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை மாலை வேளைகளில்  அந்தப் புறா வந்து ஜன்னலோரம் அமர்வதும் நர்ஸ்கள் ஜன்னலைத் திறந்து விடுவதும் சில நிமிடங்கள் அந்த முதியவரின் மேல் இருந்துவிட்டுப் புறா பறந்து செல்வதும் வழக்கமாகியிருந்ததாம். 


இந்த விசித்திரமான நடைமுறையைக் கேள்விப்பட்ட  தலைமை மருத்துவர் அந்த முதியவரின் பின்புலத்தை அறிந்துவருமாறு மருத்துவமனை ஊழியர் ஒருவரிடம் சொல்லியிருக்கிறார். அந்த ஊழியரும் இந்த முதியவர் தங்கியிருந்த முகவரிக்குச் சென்று விசாரித்தபோதுதான் ஒரு உண்மை தெரியவந்தது. குடும்ப உறுப்பினர்கள் யாருமில்லாமல் தனிமையில் வாழ்ந்துவந்த அந்த முதியவர் தினந்தோறும் காலை மாலை வேளைகளில் அங்கு சுற்றித்திரியும் புறாக்கூட்டத்திற்கு உணவும் தண்ணீரும் வைத்து வந்தவராம். அந்தக் கூட்டத்துப் புறாக்களில் ஒன்றுதான் தன் எஜமானனைத் தேடி தினமும் மருத்துவமனைக்கே வந்து சென்றுள்ளது.


நீதி: அவரவர் செய்த செயல்களின் பலனை ( நன்மையோ & தீமையோ) அனுபவிக்காமல் யாருமே இந்தப் பூமியை விட்டுப் போய்விட முடியாது.


தீதும் நன்றும் பிறர்தர வாரா…


இன்றைய செய்திகள்


23.06. 2023


*அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றிய பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட வெள்ளை எள், கர்நாடக சந்தனக் கட்டை, பஞ்சாப் நெய், உத்தரகாண்ட் பாஸ்மதி அரிசி, மகாராஷ்டிரா வெல்லம் ஆகியவை வழங்கினார்.


*இந்திய விமானப்படைக்கு உள்நாட்டிலேயே போர் விமான என்ஜின்கள் தயாரிக்க அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.


*சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்த மழை.


*பேனா நினைவு சின்னம் அமைக்க இறுதி அனுமதி வழங்கியது மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம்.


*பூரன்-ஹோப் சதம் நேபாளம் அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 339 ரன்கள் குவிப்பு.


*புதிய சாதனை படைத்த ரொனால்டோவுக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ்.


Today's Headlines


*Prime Minister Modi gave a historic speech in the US Parliament yesterday.  He provided white sesame brought from Tamil Nadu.Karnataka sandalwood, Punjab ghee, Uttarakhand basmati rice and Maharashtra jaggery 


 *A deal was signed with an American firm to indigenously manufacture fighter engines for the Indian Air Force.


 *Thunderstorm in Chennai and surrounding districts.


 * Coastal Regulatory Authority of the Central Government has given final approval for setting up Pena Memorial.


 * Pooran-Hope strike century. West Indies piled up 339 runs against Nepal.


 *Guinness Record certificate for Ronaldo who set a new record.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புது ஊஞ்சல் - 01-15 நவம்பர் 2024 இதழ் - Puthu Oonjal - 01-15 November 2024 Magazine

புது ஊஞ்சல் - 01-15 நவம்பர் 2024 இதழ் - Puthu Oonjal - 01-15 November 2024 Magazine   புது ஊஞ்சல் - புது ஊஞ்சல் - 01-15 நவம்பர் 2024 மாதமிரு...