கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.06.2023 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.06.2023 - School Morning Prayer Activities...


  திருக்குறள் :



பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்


குறள் :204


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.


விளக்கம்:


மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் அறக்கடவுளே எண்ணியவர்க்கு தீமையைத் தர எண்ணும்.



பழமொழி :

  A little stream will run a light mill


சிறு துரும்பும் பல் குத்த உதவும்.



இரண்டொழுக்க பண்புகள் :


1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.



2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்


பொன்மொழி :


மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.. தந்தை பெரியார்


பொது அறிவு :


1. மிகப் பெரிய மலர் எது? 


விடை: ரஃப்லேசியா அர்னால்டி 


2. மின் விளக்கின் உலோக இழை எதனால் ஆனது? 


விடை: டங்ஸ்டன்


English words & meanings :


 highway - a public road நெடுஞ்சாலை; impress - fix deeply in the mind மனத்தில் பதிய வை


ஆரோக்ய வாழ்வு :


பேரிச்சை பழத்தில் இருக்கும் மெக்னீசியம் கை, கால் பகுதிகளில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கும் தன்மை உடையது


ஜூன் 30


மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ்  அவர்களின் பிறந்த நாள்


மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II (மைக்கல் பிரெட் பெல்ப்சு II) (Michael Fred Phelps II, பி ஜூன் 30, 1985, பால்ட்டிமோர், மேரிலன்ட்) பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார். 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.


நீதிக்கதை


நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய்காற்று வீசிக்கொண்டு இருந்தது..!!"


காற்றை கண்டதும்...


'அமைதி' என்ற முதல் மெழுகுவர்த்தி ஐயோ காற்று வீசுகின்றது. நான் அணைந்து விடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது.


 "அன்பு '' என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது' என்று அணைந்துவிட்டது. 


''அறிவு '' என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது.


நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய சிலநொடிகள் போராடி ஜெயித்துவிட்டது. அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான். "அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே' என்று கவலையுடன் சொன்னான்.


அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது, 'வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துகொள்' என்றது.


சிறுவன் உடனே  நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்.. 'நம்பிக்கை' என்றது அந்த மெழுகுவர்த்தி.



நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது...!


இன்றைய செய்திகள்


30.06. 2023


*தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ் தாஸ் மீனா நியமனம். தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு ஓய்வு பெறுவதை அடுத்து அறிவிப்பு.


*தமிழக டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் நியமனம்.


*சென்னையில் ட்ரோன்கள் மூலம் முக்கிய இடங்களை கண்காணிக்கும் காவல்துறையின் டிரோன் யூனிட் பிரிவை துவங்கி வைத்தார் டி.ஜி.பி சைலேந்திரபாபு.  


*கோவை ஆர்.எஸ்.புரம் அடுத்த தடாகம் சாலையில் அரை நூற்றாண்டை கடந்த நூலகம் மூடப்படுவதையொட்டி சலுகை விலையில் விற்கப்படும் புத்தகங்கள்.


*குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்துத் தர தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு கடிதம் எழுதிய ஆறாம் வகுப்பு மாணவன். இறையன்பு, மாணவனை நேரில் அழைத்து திருக்குறள் புத்தகம் மற்றும் பேனா பரிசளித்து வாழ்த்தினார்.


*ஸ்டீவ் ஸ்மித் சதம்: 

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவிப்பு.


Today's Headlines


* Shiv Das Meena was appointed as the new Chief Secretary of Tamil Nadu.  The announcement follows the retirement of Iraiyanbu, Chief Secretary.


 * Shankar Jiwal was appointed as Tamilnadu DGP.


 *DGP Shailendrababu started the drone unit of the police to monitor important places through drones in Chennai.


 *Books sold at concessional prices due to the closure of the half-century-old library on Thadakam Road next to RS Puram, Coimbatore.


 *Sixth standard student who wrote a letter to the Chief Secretary Iraiyanbu to repair the damaged road.  He called the student in person and congratulated him by gifting him a Thirukural book and a pen.


 *Steve Smith's century:

 Australia scored 416 runs in the first innings.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...