கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.07.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.07.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: ஒப்புரவறிதல்


குறள் :214


ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.


விளக்கம்:


ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.


பழமொழி :

A teacher is better than two books


ஒரு ஆசிரியர் இரு புத்தகங்களை விட மேலானவர்



இரண்டொழுக்க பண்புகள் :


1. உதவி செய்வது பிறரின் வருத்தம் போக்கவே தவிர பிறர் என்னைப் புகழ அல்ல. 


2. என்னால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்வேன்.


பொன்மொழி :


எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்.

காமராஜர்


பொது அறிவு :


1. உலகில் அதிகம் பேசப்படும் மொழி எது?


விடை: மாண்டரின் சீனம்


2. ஒரு லீப் ஆண்டில் எத்தனை நாட்கள் உள்ளன?


விடை: 366 நாட்கள்


English words & meanings :


 Amity - friendship நட்பு; banquet- rich meal விருந்து


ஆரோக்ய வாழ்வு :


சர்க்கரைவள்ளிக்கிழங்கை சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்தும். பசி உணர்வு இன்றி வயிறு நிறைந்த திருப்தியை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்ள முடியும்.


நீதிக்கதை


ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.


பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு கிட்டச் செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.


ஆனால் ‘ஈ” ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.  அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..’உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் விறாண்டுவேன், நசுக்கிப்  போடுவேன் என்றது.


அதற்கு ஈயோ...  நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன். இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக் கொள்ளவும் செய்வேன்” என்றது.


இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் முடிந்தால் அதைச் செய் என சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க…சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே விறாண்டிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.


சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. அதனால் சிங்கம் தன் இயலாமையை எண்ணி வெட்கப்பட்டது.



அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை இம்சைப்படுத்தி விட்டதே என்று. .உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது.


இன்றைய செய்திகள்


13.07. 2023


*பிரான்சில் வரும் 14ஆம் தேதி கொண்டாடவிருக்கும் பாஸ்டில் தினம் எனப்படும் தேசிய தினத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்.


*விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்.


*இமாச்சலப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று நிலச்சரிவில் சிக்கிய தமிழக மாணவர்கள் 12 பேர் பத்திரமாக மீட்பு.


*கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூலை இருபதாம் தேதி பணி நியமன கலந்தாய்வு தொடக்கம்.


*முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பயன்படுத்திய கார் புதுப்பிக்கப்பட்டு அவரது பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


*லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்.


Today's Headlines


* Preparations for Bastille Day, a national day to be celebrated on the 14th in France, are in full swing.


 * Chief Minister urges Central Minister to control inflation.


 * 12 students of Tamil Nadu who were caught in a landslide on a trip to Himachal Pradesh were rescued safely.


 *For those who passed the last year Group-4 examination, the recruitment councelling will start on 20th July.


 *The car used by former Chief Minister Kamaraj is planned to be refurbished and placed at the Kamaraj Arena in Chennai on his birthday, 15th July.


 * It was informed that Former Australia coach Justin Langer is going to be appointed as the head coach of the Lucknow team.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...