கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 17.08.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 17.08.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: புகழ்


குறள் :240


வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தவர்.


விளக்கம்:


தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.


பழமொழி :

Be just before you are generous


ஆற்றில் போட்டாலும் அளந்து போடு



இரண்டொழுக்க பண்புகள் :


1. என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.


2. பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :


எங்கே மனம் பயமில்லாமல், தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அங்கு அறிவு சுதந்திரமாக இருக்கும் - ரவீந்திரநாத் தாகூர்


பொது அறிவு :


1. ஞான பீட விருது பெற்ற முதல் தமிழர் யார்?


விடை: அகிலன்


2. தமிழ் தாய் வாழ்த்து எழுதியவர் யார்?


விடை: மனோன்மணியம் சுந்தரனார்


English words & meanings :


 geniune - sincere action or thought, உண்மையான, போலி இல்லாத.

haggard -looking exhausted and unwell,தளர்வுற்றுக் காணப்படுகிற


ஆரோக்ய வாழ்வு : 


கொத்தமல்லி விதை : பார்கின்சன் மற்றும் அல்சைமர் குறைபாடுகளுக்பு,  கொத்தமல்லி சாறு நரம்பு செல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் நினைவகத்தை மேம்படுத்துகிறது.


நீதிக்கதை


வியாபாரி ஒருவர். எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் சரியாக திட்டமிட்டு செயல்படாததால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிட்டது. கவலையில் ஆழ்ந்திருந்த அவர், வீட்டுக்குப் போக விரும்பாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த, தொலைதூர ஆற்றங்கரைக்குச் சென்றார். அங்கே ஆற்றின் மணலில் மெல்லிய நிலவொளியில் அமர்ந்து தன் நினைவுகளை ஓட விட்டான்.  


மறுபுறம், எப்படி வியாபாரம் செய்யப் போகிறோம்… குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் என எதிர்காலக் கவலைகள் எழுந்தன. இந்தச் சிந்தனையினாலேயே அவனுடைய வலது கை அவனை அறியாமல் ஆற்றின் மணலை துழாவி அவன் கையில் தட்டுப்பட்ட சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான்.


விடியல் தொடங்கியது! வெளிச்சம் பரவியது. ஆற்றில் எறிய கற்கள் தீர்ந்தன. கடைசியாக கையிலிருந்த கல்லைப் பார்த்து வியந்தான். காரணம் – அது சாதாரண கூழாங்கல் அல்ல. வைரம்கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்துச் சென்ற விலைமதிப்பற்ற வைரங்களைத் தவறவிட்டு ஓடியுள்ளனர். அவன் இருட்டில் இன்னதென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான். ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரிதான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலம் நம்மை சிறப்பாக வரவேற்கும்.


இன்றைய செய்திகள்


17.08.2023


*அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை தனிநபர்கள் பெயருக்கு மாற்ற முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.


* தமிழகத்தில் இரண்டு நாட்கள் வெயில் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்.


* தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்: நிலவை நெருங்கும் சந்திராயன் 3.


*தஜிகிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.


 *பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து... இறுதி போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து.


*பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து சென்றது.


Today's Headlines


*Properties donated to a trust cannot be transferred to the  individuals- A striking verdict by Madras High Court.


 * There will be a raise in temperature for two days in Tamil Nadu - Meteorological Department informs.


 * ISRO scientists eager to land the Chandrayan 3: Chandrayaan 3 is approaching the moon.


 * 4.2 Richter earthquake in Tajikistan.


  *Women's World Cup Football...England advanced to the final.


 *Indian cricket team led by Bumrah went to Ireland.

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...