கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.08.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.08.2023 - School Morning Prayer Activities...

   

திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம்:அருளுடைமை


குறள் :242


நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்

தேரினும் அஃதே துணை.


விளக்கம்:


நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.


பழமொழி :

Bend the twig, bend the tree


ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?



இரண்டொழுக்க பண்புகள் :


1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.


2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்



பொன்மொழி :


உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக

சேவைதான் செய்ய முடியும்.

                                      - விவேகானந்தர்


பொது அறிவு :


1. தமிழ்நாட்டு மிக நீளமான ஆறு எது?


விடை: காவிரி


2. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள மாவட்டம் எது?


விடை: திருநெல்வேலி


English words & meanings :


 Kindle - arouse or inspire an emotion or feeling. தூண்டுதல். 

loafer-a person who avoids work or a lazy person. சோம்பேறி


ஆரோக்ய வாழ்வு : 


புதினாக் கீரையை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால் தசை வலி ,நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும் .புதினாக் கீரை ஆஸ்துமாவையும் கட்டுப்படுத்துகிறது .


ஆகஸ்ட்21


உசைன் போல்ட் என்கிற உசேன் செயிண்ட் லியோ போல்ட் (Usain St. Leo Bolt, பிறப்பு: ஆகத்து 21, 1986) யமேக்காவில் பிறந்த தடகள ஆட்டக்காரர். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 9.69 நொடி நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை பெற்றார். அத்துடன் 200 மீ ஓட்டம் (19.30 வினாடி) போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர்; தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 x 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இவை அனைத்தையும் போல்ட்டு 2008 பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார்.2003இல் 200 மீட்டர் விரைவோட்டத்திலும் உலக இளையோர் சாதனை படைத்தார். ஒலிம்பிக்கின் மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் (100 மீ, 200 மீ மற்றும் 4 x 100 மீ) நடப்பு முதன்மை வீரன் (சாம்பியன்), ஒன்பது முறை உலக முதன்மை வீரன், ஒலிம்பிக் விரைவோட்டப் பந்தையங்களில் ஆறு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரர், இம்மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் நடப்பு உலக சாதனைகளின் சொந்தக்காரர் எனப் பல சிறப்புகள் போல்ட்டைச் சாரும்.




நீதிக்கதை


பெரும் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவரிடம் குதிரைப் பண்ணை இருந்தது. அதில் உள்ள குதிரைகளுக்குத் தினமும் பயிற்சி கொடுத்து, பல்வேறு ஊர்களில் நடக்கும் போட்டிகளுக்கு அனுப்பி வைப்பார். பயிற்சி கொடுப்பதற்கு ஆள்கள் இருந்தனர். அவர்களும் குதிரைகளுக்குச் சத்தான உணவு கொடுத்து, காலை மாலை என இருவேளையும் குதிரைகளை ஓட விடுவார்கள்.அந்தக் குதிரைகளில் ஒரு குதிரை மிகவும் கம்பீரமாக இருக்கும். எல்லாப் போட்டிகளிலும் முதல் பரிசைப் பெற்றுவிடும். அதனால் அந்தக் குதிரைக்கு எல்லோர் மத்தியிலும் மதிப்பு அதிகம்


அன்று காலை பயிற்சியாளர்கள் வந்து அந்தக் குதிரையைப் பயிற்சிக்கு அழைத்தார்கள். ஆனால், அது வராமல் படுத்துக்கொண்டே இருந்தது. சரி, இன்று ஒரு நாள் போகட்டும் என்று விட்டுவிட்டு மற்ற குதிரைகளுடன் பயிற்சிக்குச் சென்றார்கள். மறுநாளும் இப்படியே அது முரண்டு பிடித்தது. குதிரைக்குத் தான் எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெறுகிறோம் என்ற தலைக்கனம் வந்துவிட்டது. பயிற்சியாளர்களும் சரி, இந்தக் குதிரை எப்படியும் ஜெயித்துவிடும் என்ற நம்பிக்கையில் சில நாட்கள் அதன் போக்கிலேயே விட்டுவிட்டார்கள்.மறுநாள் போட்டிக்கு மற்ற குதிரைகளுடன் இதுவும் சென்றது. ஆனால், முன்பு போல் வேகமாக ஓட முடியவில்லை. போட்டியில் தோல்வி அடைந்தது. எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து பல போட்டிகளில் தோல்வியே கிடைத்தது. எல்லோர் மத்தியிலும் அந்தக் குதிரைக்கு இருந்த மதிப்பு குறைந்தது. அந்தக் குதிரையைத் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்ததால் உரிமையாளர், அந்தக் குதிரையை விற்க முடிவு செய்துவிட்டார்.இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் குதிரைக்கு அழுகை வந்தது. பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு குதிரை, “நண்பா, கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறியது.


“என்னை விற்கப் போகிறார். நான் எதற்கும் பயனில்லாதவன் ஆகிவிட்டேன். உங்களை எல்லாம் விட்டு நான் பிரியப் போகிறேன். என்னால் என்ன செய்ய முடியும்? இவ்வளவு நாள் நான் வெற்றி பெற்றுக்கொண்டுதானே இருந்தேன்? இப்போது எனக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை...” என்று சொல்லிக்கொண்டே மீண்டும் அழுதது. அந்தக் குதிரைநண்பா, நீ தினமும் பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தாய். திடீரென்று பயிற்சிக்கு வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாய். பயிற்சிதான் நம் செயலைச் சிறந்ததாக மாற்றும். உன் தோல்விக்குக் காரணம் பயிற்சியைக் கைவிட்டதுதான். சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே இந்த உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கும். இதை நீ புரிந்துகொள். இப்போதும் ஒன்றும் பிரச்சினை இல்லை. இன்று முதல் நீ பயிற்சி செய்ய ஆரம்பித்தால் போதும். பழையபடி ஆகிவிடுவாய். உன் திறமையைக் காணும் உரிமையாளர், உன்னை விற்க மாட்டார். சரி, என்னுடன் பயிற்சிக்கு வருகிறாயா?” என்று கேட்டது அந்தக் குதிரை.


“நீ சொல்வது சரிதான். பயிற்சி இல்லாமல் வெற்றி பெற முடியும் என்று எண்ணி, முயற்சியும் பயிற்சியும் இல்லாமல் இருந்தது தவறுதான். இனி தினமும் பயிற்சிக்கு வருகிறேன்” என்று கூறிக்கொண்டே நடக்க ஆரம்பித்தது குதிரை.


இன்றைய செய்திகள்


21.08.2023


*நிலவில் மோதி நொறுங்கியது ரஷ்யாவின் 

லூனா -25 விண்கலம்.


* சந்திராயன் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நேரத்தில் மாற்றம். வரும் 23ம் தேதி மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 


*மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 26 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.


*பெண்கள் உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்.


* உலகக்கோப்பை வில்வித்தை: 

தங்கம் வென்று அசத்திய இந்திய ஆடவர் மகளிர் அணிகள்.


Today's Headlines


* Russian spacecraft  Luna-25 crashed in the moon.


 * There is a Change in Chandrayaan-3 moon landing time.  ISRO has officially announced that it will land on the moon on the evening of 23rd.


 * Light to moderate rain may occur at one or two places in Tamil Nadu from today to 26th due to variation in speed of westerly wind.


 * You can apply for a temporary firecracker shop license on the occasion of Diwali.


 *Women's World Cup Football: Spain beat England and won the championship title.


 * Archery World Cup:

 Indian men's and women's teams made an awesome victory and won gold

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...