கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.08.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.08.2023 - School Morning Prayer Activities...

   

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம்:அருளுடைமை


குறள் :246


பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

அல்லவை செய்தொழுகு வார்.


விளக்கம்:


அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.


பழமொழி :

Better to bend the neck than bruise the forehead.


தாழ்ந்தது நின்றால் வாழ்ந்து நிற்பாய்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.


2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்



பொன்மொழி :


ஒரு போதும் மனம் தளர வேண்டாம் ஏனெனில், சரியான இடம் மற்றும் காலத்தில் எல்லாம் மாறிவிடும்”- ஹரியட் பீச்சர் ஸ்டோ


பொது அறிவு :


1. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் எது?



விடை: சுதேச மித்திரன்


2. தென்னிந்தியாவின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படுவது எது?


விடை: சென்னை


English words & meanings :


 yar·mul·ke - A skullcap worn by Jewish men and boys. Also called kippah. பெயர்ச் சொல். யூத ஆண்களும் சிறுவர்களும் தலையில் அணியும் தொப்பி 


ஆரோக்ய வாழ்வு : 


கடுகு - 

கடுகு செடியை சிறுதுண்டுகளாக வெட்டவும். இதில் போதுமான அளவு நீர்விட்டு கொதிக்க வைத்து நீராவி பிடித்தால் ஒற்றை தலைவலி,  தலைபாரம், இருமல், நெஞ்சக சளி, மூக்கடைப்பு சரியாகும்


ஆகஸ்ட்25


நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் நினைவுநாள்


நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong, நீல் ஆம்ஸ்ட்ரோங், ஆகத்து 5, 1930 – ஆகத்து 25, 2012) ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ரோங், விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். 


1969, சூலை 20 இல் அமெரிக்காவின் அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் சந்திரனில் தரையிறங்கினார். இவர் சந்திரனில் காலடி எடுத்துவைக்கும் போது முதலில் இடது காலையே வைத்தார்.


ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார், அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்.


நீதிக்கதை


புத்தியை தீட்டு


=============


ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள். மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார்,


மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்!


நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடை விடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,..


சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி என்று கேட்டான்!..


நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்! மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை,


மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான், மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான், ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்!... நாமும் ஓய்வு நேரங்களில் வெற்றி பெறுவதற்கு ஏற்ற செயல்களை சிந்திக்க வேண்டும்.


இன்றைய செய்திகள்


25.08.2023


*நிலவில் வலம் வரும் ரோவரின் அடுத்த கட்டப் பணி துவங்கியது...


*கடைசி விவசாயி படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிப்பு.


*காலை உணவுத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம்: முதலமைச்சர் நாளை திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைக்கிறார்.


*இரண்டு நாட்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை. பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்.


*நெல்லூர் அருகே 450-க்கும் மேற்பட்ட விஜயநகர தங்க காசுகள் கண்டெடுப்பு.


*உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டி கார்ல்சன் சாம்பியன்!


Today's Headlines


* The next phase of the rover's work on the moon has started...


 *Two National Awards are announced for the film "Last Farmer".


 *The Morning Breakfast Scheme is expanded all throughout the state: The Chief Minister will launch it in Thirukkuvalai school tomorrow.


 *High-temperature warning for two days.  The public is advised to be cautious.


 *Over 450 Vijayanagara period gold coins were found near Nellore.


 * World Cup Chess Finals Carlson clinches Championship.

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...