கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நரிக்குடி பேருந்து நிலையத்தில் தங்கச்சங்கிலியைத் தொலைத்த தமிழாசிரியர் - பத்திரமாக மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி சிறுமிகள் - குழந்தைகளின் நேர்மையை வெகுவாகப் பாராட்டிய காவல் துறையினர் (The Tamil teacher who lost her chain at Narikudi bus stand - The school girls who recovered it safely and handed it over to the police station - The police department appreciated the children's honesty)...

நரிக்குடி பேருந்து நிலையத்தில்  இன்று காலை உலக்குடி செல்ல வேண்டி பேருந்திற்காக காத்திருந்த உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சசிகலா அவசரமாக பஸ் ஏறி பள்ளிக்கு சென்றதன் காரணமாக தனது இரண்டரை பவுன் தங்கசெயினை நரிக்குடி பேருந்து நிலையத்தில் பறிகொடுத்தார். இதனையடுத்து செயின் காணாமல் போனது குறித்து பள்ளி ஆசிரியர் சசிகலா நரிக்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதற்கிடையில் இன்று காலை பேருந்து மூலம் பள்ளிக்கு வந்த நரிக்குடி தொடக்கப்பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவிகளான நரிக்குடியை சேர்ந்த சரவண சாஸ்தா மகள் மோகனாஸ்ரீ, பள்ளப்பட்டியை சேர்ந்த விஜயன் மகள் சபர்ணா, மானூர் இந்திரா காலனியை  சேர்ந்த சரவணக்குமார் மகள் தேவிகா ஆகியோர் அதனை பத்திரமாக மீட்டு தலைமையாசிரியர் மூலமாக நரிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதனையடுத்து போலீசார் கொடுத்த தகவலின் பேரில் காவல் நிலையம் வந்த பள்ளி தமிழாசிரியர் சசிகலா காணாமல் போன செயின் குறித்த அடையாளங்களை தெரிவித்த நிலையில் நரிக்குடி காவல்துறையினர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சோணைமுத்து ஆகியோரின் முன்னிலையில் செயின் கிடைக்க காரணமாக இருந்த மூன்று மாணவிகளின் கைகளினாலயே தமிழாசிரியர் ஆசிரியர் சசிகலா தனது செயினை பெற்றுக்கொண்டார்.

மேலும் மாணவிகளின் நேர்மையான செயலை கண்ட நரிக்குடி காவல்துறையினர், தமிழாசிரியர் சசிகலா மற்றும் தலைமையாசிரியர் சோணைமுத்து ஆகியோர் மாணவிகளை வெகுவாக பாராட்டினர். மேலும் செயினை மீட்டு கொடுத்த நரிக்குடி போலீசாருக்கு தமிழாசிரியர் சசிகலா தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...