கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் திட்டம் - 1-5 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன்‌ மூலம்‌ மதிப்பீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்‌, தனித்தனி வகுப்புகளாக பாடநூல்கள்‌ மூலம்‌ கற்பிக்காமல்‌ வகுப்புகளை ஒன்றிணைத்து பயிற்சி புத்தகங்கள்‌ மூலம்‌ கற்பிக்க கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்‌ பணியிலிருந்து விலக நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலருக்கு கடிதம் கொடுத்த ஆசிரியர் - உரிய விசாரணை செய்து, ஆசிரியர் பதவி விலகும் பட்சத்தில் உரிய கருத்துருக்களுடன் அனுப்பி வைக்குமாறு வட்டாரக் கல்வி அலுவலருக்கு, நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) கடிதம் (Ennum Ezhuthum Scheme - A teacher has written to the Namakkal District Education Officer to resign, protesting against the online assessment of class 1-5 students and forcing them to combine classes and teach them through exercise books instead of teaching them as separate classes through textbooks - A letter from Namakkal District Education Officer (Elementary Education) to Block Education Officer asking him to conduct due inquiry and send it with appropriate proposals in case of resignation of the teacher)...

 எண்ணும் எழுத்தும் திட்டம் - 1-5 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன்‌ மூலம்‌ மதிப்பீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்‌, தனித்தனி வகுப்புகளாக பாடநூல்கள்‌ மூலம்‌ கற்பிக்காமல்‌ வகுப்புகளை ஒன்றிணைத்து பயிற்சி புத்தகங்கள்‌ மூலம்‌ கற்பிக்க கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்‌ பணியிலிருந்து விலக நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலருக்கு கடிதம் கொடுத்த  ஆசிரியர்..


 உரிய விசாரணை செய்து, ஆசிரியர் பதவி விலகும் பட்சத்தில் உரிய கருத்துருக்களுடன் அனுப்பி வைக்குமாறு வட்டாரக் கல்வி அலுவலருக்கு, நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) கடிதம்...



கொல்லிமலை வட்டாரக்‌ கல்வி அலுவலரின்‌ செயல்முறைகள்‌:

முன்னிலை. திரு.பெ.பழனிச்சாமி.எம்‌.எஸ்‌.சி.எம்‌.எட்‌.,

ந.க.எண்‌ 511/அ1/2023 நாள்‌ 28.08.2023

பொருள்‌: தொடக்கக்‌ கல்வி - கொல்லிமலை ஒன்றியம்‌, ஆலத்தூர்நாடு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்‌ பள்ளியில்‌ இடைநிலை ஆசிரியராக பணியாற்றும்‌ திரு.கே.கே.குப்பண்ணன்‌ என்பாரின்‌ 07.06.2023 முதல்‌ பணிவிலகல்‌ கடிதம்‌ பெறப்பட்டது - தொடர்பாக.

பார்வை: நாமக்கல்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலரின்‌ (தொடக்கக்‌ கல்வி) செயல்முறைகள்‌ ஓ.மு.எண்‌ 2688/அ6/2023, நாள்‌: 10.07.2023.


நாமக்கல்‌ மாவட்டம்‌, கொல்லிமலை ஒன்றியம்‌, ஆலத்தூர்நாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்‌ பள்ளியில்‌ இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய திரு.கு.க.குப்பண்ணன்‌ என்பார்‌ 1-5 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன்‌ மூலம்‌ மதிப்பீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்‌, தனித்தனி வகுப்புகளாக பாடநூல்கள்‌ மூலம்‌ கற்பிக்காமல்‌ வகுப்புகளை ஒன்றிணைத்து பயிற்சி புத்தகங்கள்‌ மூலம்‌ கற்பிக்க கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்‌ தனது ஆசிரியர்‌ பணியிலிருந்து 07.06.2023 முற்பகல்‌ முதல்‌ விலகிக்‌ கொள்கிறேன்‌ என்று நாமக்கல்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களுக்கு (தொடக்கக்‌ கல்வி) தெரிவித்த கடிதத்திற்கு, சம்மந்தப்‌பட்ட ஆசிரியரை விசாரணை செய்து, பணியிலிருந்து விலகும்‌ பட்சத்தில்‌ உரிய கருத்துருக்களுடன்‌ அனுப்பிவைக்குமாறு பார்வையில்‌ காணும்‌ செயல்முறைகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே இடைநிலை ஆசிரியர்‌ திரு.கு.க.குப்பண்ணன்‌ என்பார்‌ ஆசிரியர்‌ பணியிலிருந்து 07.06.2023 முற்பகல்‌ முதல்‌ விலகிக்‌ கொள்கிறேன்‌ என்று தெரிவித்தமைக்கு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால்‌ கொல்லிமலை வட்‌டாரக் கல்வி அலுவலகத்திற்கு 08.09.2023 அன்று காலை 10.00 மணிக்கு நேரில்‌ ஆஜராகுமாறு சம்மந்தப்பட்ட ஆசிரியர்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்‌.

வட்டார கல்வி அலுவலர்,

கொல்லிமலை

பெறுதல்‌,

திரு.கே.கே.குப்பண்ணன்‌, இடைநிலை ஆசிரியர்‌,

த/பெ. பொ.கருப்பண்ணன்‌, 7/60-, குட்டிமேய்க்கம்பட்டி, ஒ.ராஜாபாளையம்‌ அஞ்சல்‌,

திருச்செங்கோடு . 637 209, நாமக்கல்‌ மாவட்டம்‌.


நகல்‌:  நாமக்கல்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களுக்கு தகலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...