கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

16-10-2023 முதல் Teacher, Student Attendance தவிர வேறு எந்த ஆன்லைன், EMIS, TNSED App, எண்ணும் எழுத்தும் மதிப்பீடு பதிவிடுதல் போன்ற பணிகளை செய்ய மாட்டோம் - டிட்டோஜாக் சார்பில் தீர்மானம் (From 16-10-2023, we will not do any other online works like EMIS, TNSED App, Ennum Ezhuthum assessment posting other than Teacher, Student Attendance - Decision on behalf of TETOJAC)...


 16-10-2023 முதல் Teacher, Student Attendance தவிர வேறு எந்த ஆன்லைன், EMIS, TNSED App, எண்ணும் எழுத்தும் மதிப்பீடு பதிவிடுதல் போன்ற பணிகளை செய்ய மாட்டோம் - டிட்டோஜாக் சார்பில் தீர்மானம் (From 16-10-2023, we will not do any other online works like EMIS, TNSED App, Ennum Ezhuthum assessment posting other than Teacher, Student Attendance - Decision on behalf of TETOJAC)...









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



எதிர்வரும் 16.10.2023 முதல் ஆசிரியர் & மாணவர்கள் வருகை பதிவு தவிர வேறு எந்த பதிவுகளையும் EMIS, TNSED Appகளில் பதிவிடமாட்டோம் - டிட்டோஜாக் அறிவிப்பு...


டிட்டோ ஜாக்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்)


பெறுதல்


மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள்

தொடக்கக்கல்வி இயக்ககம்,

பேராசிரியர் க.அன்பழகனார் வளாகம்,

கல்லூரி சாலை, சென்னை - 600 006.


மதிப்புடையீர், வணக்கம்,


பொருள் : தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜேக் பேரமைப்பின் 25.09.2023 நாளிட்ட கூட்டத் தீர்மானங்கள் சமர்ப்பித்தல் சார்பு


EMIS, TNSED APP பதிவேற்றங்களில் இருந்து ஆசிரியர்கள் தங்களை 16.10.2023 முதல் விடுவித்துக்கொள்ளுதல்


ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை முழுமையாக மேற்கொள்ள இயலாத வகையில் ONLINE பதிவேற்றங்கள் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி நேரத்தை அபகரித்து வருகிறது. மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நடத்திய சங்கப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இப்பொருள் தொடர்பாக அனைத்து சங்கங்களும் தெளிவுபடுத்தியுள்ளோம். மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செப்டம்பர் 05 அன்று சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்கள் ONLINE பதிவேற்றப் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என அறிவிப்பினை வெளியிட்டார்கள். ஆனால் இன்றுவரை ஆசிரியர்கள் பதிவேற்றப்பணிகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை.


எண்ணும், எழுத்தும் திட்டத்தை முழுமையாகக் கைவிடவேண்டும்


ஆசிரியர்களுக்குத் தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் கல்வித்தரத்தினைப் பாதிக்கும் எண்ணும், எழுத்தும் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும்.


எண்ணும், எழுத்தும் திட்டத்தில் செல்போன் செயலி மூலம் தேர்வு நடத்துவதைப் பெற்றோர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். செல்போன் மூலம் தேர்வு நடத்துவதிலும், செல்போன் மூலம் மாணவர் வளரறி மதிப்பீட்டுப் பணிகளை ஒவ்வொரு வாரமும் பதிவேற்றம் செய்வதிலும், கிராமப்புறங்களில் NETWORK இல்லாத நிலையில் ஆசிரியர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு இடையூறாக இருப்பதோடு, ஆசிரியர்களுக்குத் தேவையற்ற பணிச்சுமைகளை உருவாக்கி கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் ONLINE பதிவேற்றப்பணிகளில் இருந்தும், EMIS, TNSED APP மூலம் நடைபெறும் பதிவேற்றப் பணிகளில் இருந்தும் 16.10.2023 முதல் ஆசிரியர்கள் தங்களை முழுமையாக விடுவித்துக்கொள்வது என டிட்டோஜேக் பேரமைப்பு ஒருமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.


மாணவர் வருகை, ஆசிரியர் வருகைப் பதிவேற்றம் தவிர பிற எவ்வித விபரங்களையும் செல்போன் மூலம் பதிவேற்றும் பணிகளை 16.10.2023 முதல் ஆசிரியர் மேற்கொள்வதில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்கிறார்கள் என்ற விபரத்தினை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அவர்களுக்கும், மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு. கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கக இயக்குநர் ஆகியோருக்கும் டிட்டோஜேக் பேரமைப்பின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.


இப்படிக்கு,


செ.முத்துச்சாமி EX.MLC, 

பொதுச்செயலாளர் 

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


(அ.வின்சென்ட் பால்ராஜ்) 

பொதுச்செயலாளர் 

தமிழக ஆசிரியர் கூட்டணி


ச.மயில்

பொதுச்செயலாளர்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


(இரா.தாஸ்)

பொதுச்செயலாளர் 

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


(சி.சேகர்) 

பொதுச்செயலாளர் 

தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்


(வி.எஸ்.முத்துராமசாமி) 

பொதுச்செயலாளர் 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


(இல.தியோடர் ராபின்சன்) பொதுச்செயலாளர் 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்


(நா.சண்முகநாதன்) 

பொதுச்செயலாளர் 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்


(கோ.காமராஜ்) 

பொதுச்செயலாளர் 

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


சி.ஜெகநாதன்

பொதுச்செயலாளர் 

JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


(டி.ஆர்.ஜான் வெஸ்லி) 

பொதுச்செயலாளர் 

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...