கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சிறுமயங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் - அரசு மருத்துவமனையில் அனுமதி...

 லால்குடி அருகே சிறுமயங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் அரசின் காலை உணவு சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் - பள்ளி குழந்தைகள் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி...


திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமயங்குடி அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகள் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தில் இன்று காலை சிற்றுண்டி வழக்கம்போல் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலை சிற்றுண்டியை 49 மாணவ மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியை உணவு அருந்தி உள்ளனர். இதில் ஒரு மாணவருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இதனை பள்ளி ஆசிரியரிடம் மாணவர் கூறியுள்ளார் இதனை அடுத்து அடுத்தடுத்து 19 மாணவர்கள் தமக்கும் வயிறு வலிப்பதாக கூறியதால் அதிர்ச்சி அடைந்த பள்ளி தலைமை ஆசிரியை, வயிற்று வலி என கூறிய 19 மாணவ, மாணவிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனைவரும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவ மாணவிகள் அனைவரும் தற்பொழுது நலமுடன் உள்ளனர்.


இந்த சம்பவம் அறிந்து வந்த மருத்துவ மற்றும் ஊரக இணை இயக்குநர் இணை இயக்குனர் லட்சுமி திருச்சி அரசு மருத்துவமனையில் மாணவ மாணவிகளின் உடல்நலம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். தற்பொழுது லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 மாணவர்கள் மற்றும் 9 மாணவிகள், அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், மேலும் காலை உணவு அருந்திய 20 மாணவ மாணவிகளுக்கு பள்ளியில் உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது என இணை இயக்குனர் லட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் லால்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ் மோகன் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...