கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Breakfast லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Breakfast லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Chief Minister's 'Breakfast' program improves memory in over 90% children


 முதலமைச்சரின் காலை உணவு' திட்டத்தால் 90% மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரிப்பு


Chief Minister's 'Breakfast' program improves memory in over 90% children


முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரிப்பு: மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை வெளியீடு


முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் 90% மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில திட்டக்குழு, முதல்வர் செயல்படுத்தியுள்ள “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் முதலான சீரிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக்கையின் மூலம், முதல்வரின சீரிய திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

காலை உணவுத் திட்டம் முதன்முதலில் – மதுரை மாநகரில் ஆதிமூலம் நகராட்சிப் பள்ளியில் 2022ம் ஆண்டில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டது. அன்றைய நாளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 1,545 அரசுத் தொடக்கப் பள்ளிகளைச் பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர். இத்திட்டத்திற்கு மக்களிடையே ஏற்பட்ட வரவேற்பினையும், மாணவ மாணவியர் இடையே ஏற்பட்ட எழுச்சியினையும் கருத்தில் கொண்டு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி கலைஞர் பிறந்த ஊராகிய திருக்குவளை மண்ணில் இத்திட்டம் அனைத்து 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.


அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், காமராஜர் பிறந்த நாளான 2024ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட்டது. அதன் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழுந்தைகள் கூடுதலாகப் பயன்பெற்றனர்.


அந்நாள் முதல் 34 ஆயிரத்து 987 அரசுத் தொடக்கப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 20 லட்சத்து 73 ஆயிரத்து 536 குழந்தைகள் நாள்தோறும் காலை உணவைச் சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வந்தனர். மாநிலத் திட்டக் குழுவின் மூலம் காலை உணவுத் திட்டம் குறித்து தமிழ்நாடு முழுவதும் நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலுமாக 5,410 குழந்தைகள் கொண்ட 100 பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால், பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது. குழந்தைகளிடம் கற்றல் ஆர்வம், வகுப்பறைக் கவனிப்பு, விளையாட்டில் ஈடுபாடு முதலியவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் முந்தைய பாடங்களை நினைவுகூரும் திறன் அதிகரித்துள்ளது. குழந்தைகளிடம் கையெழுத்து, வாசித்தல், பேசும் திறன் ஆகியவை மேம்பட்டுள்ளன என்ற விவரங்கள் தெரியவந்துள்ளன.


தாய்மார்கள் தங்கள் வீட்டில் காலை உணவைத் தவிர்த்து வந்த தங்கள் குழந்தைகள் பள்ளிகளில் காலை உணவை விரும்பி உண்பதால் தங்களுடைய கவலை அகன்றதாகத் தெரிவித்துள்ளனர். 



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Instructions for updating details of students benefiting from Chief Minister's Breakfast Scheme in TNSED SCHOOLS app



முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை TNSED SCHOOLS செயலியில் UPDATE செய்வதற்கான வழிமுறைகள்


Instructions for updating details of students benefiting from Chief Minister's Breakfast Scheme in TNSED SCHOOLS app



Breakfast scheme updation process



>>> PDF தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...




       LOGIN WITH INDIVIDUAL ID

                 

                 ⬇️

         SCHEMES


                 ⬇️


         SELECT CLASS


                  ⬇️


        SELECT YES OR NO

 

                  ⬇️


                 SAVE

 



நடுநிலைப்பள்ளிகளில் 6, 7, 8ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் - ஊராட்சித் தலைவர் கோரிக்கை...


 நடுநிலைப்பள்ளிகளில் 6, 7, 8ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் - ஊராட்சித் தலைவர் கோரிக்கை - நாளிதழ் செய்தி...




3,995 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் - மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்...


 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இந்த ஆண்டின் கல்வி வளர்ச்சி நாளில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்படுகிறது...


3,995 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் -  மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்...



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு தொடக்கப்பள்ளி காலை உணவில் பல்லி - 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி...



அரசு தொடக்கப்பள்ளி காலை உணவில் பல்லி - 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி...


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சமத்துவபுரம் கிராம அரசு தொடக்கப் பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு நேற்று காலை வழக்கம்போல, சேமியா உப்புமா சமைத்து வழங்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் உணவை உண்ட நிலையில், அதில் பல்லி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்கள், சமையலரிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



சிறுமயங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் - அரசு மருத்துவமனையில் அனுமதி...

 லால்குடி அருகே சிறுமயங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் அரசின் காலை உணவு சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் - பள்ளி குழந்தைகள் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி...


திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமயங்குடி அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகள் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தில் இன்று காலை சிற்றுண்டி வழக்கம்போல் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலை சிற்றுண்டியை 49 மாணவ மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியை உணவு அருந்தி உள்ளனர். இதில் ஒரு மாணவருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இதனை பள்ளி ஆசிரியரிடம் மாணவர் கூறியுள்ளார் இதனை அடுத்து அடுத்தடுத்து 19 மாணவர்கள் தமக்கும் வயிறு வலிப்பதாக கூறியதால் அதிர்ச்சி அடைந்த பள்ளி தலைமை ஆசிரியை, வயிற்று வலி என கூறிய 19 மாணவ, மாணவிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனைவரும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவ மாணவிகள் அனைவரும் தற்பொழுது நலமுடன் உள்ளனர்.


இந்த சம்பவம் அறிந்து வந்த மருத்துவ மற்றும் ஊரக இணை இயக்குநர் இணை இயக்குனர் லட்சுமி திருச்சி அரசு மருத்துவமனையில் மாணவ மாணவிகளின் உடல்நலம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். தற்பொழுது லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 மாணவர்கள் மற்றும் 9 மாணவிகள், அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், மேலும் காலை உணவு அருந்திய 20 மாணவ மாணவிகளுக்கு பள்ளியில் உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது என இணை இயக்குனர் லட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் லால்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ் மோகன் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.




அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் (CMBFS - Menu) - கிழமை வாரியாக வழங்கப்படும் உணவுகள் - வகுப்பு : 1 முதல் 5 வரை - நேரம்: காலை 8.15 மணி முதல் 8.50மணி வரை (Breakfast Scheme for Government School Students - Meals served day wise - Class : 1 to 5 - Time : 8.15 am to 8.50 am)...


>>> அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் (CMBFS - Menu) - கிழமை வாரியாக வழங்கப்படும் உணவுகள் - வகுப்பு : 1 முதல் 5 வரை - நேரம்: காலை 8.15 மணி முதல் 8.50மணி வரை (Breakfast Scheme for Government School Students - Meals served week wise - Class : 1 to 5 - Time : 8.15 am to 8.50 am)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

25.08.2023 முதல் மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் (CMBFS) - அனைத்து மாவட்ட பள்ளிகளிலும் செயல்படுத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 020255/ கே5/ 2023, நாள்: 14-08-2023 (Hon'ble Chief Minister's BreakFast Scheme from 25.08.2023 - Proceedings of the Director of Elementary Education for implementation in all district schools Rc.No: 020255/ K5/ 2023, Dated: 14-08-2023)...

 

>>> 25.08.2023 முதல் மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் - அனைத்து மாவட்ட பள்ளிகளிலும் செயல்படுத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 020255/ கே5/ 2023, நாள்: 14-08-2023 (Hon'ble Chief Minister's BreakFast Scheme from 25.08.2023 - Proceedings of the Director of Elementary Education for implementation in all district schools Rc.No: 020255/ K5/ 2023, Dated: 14-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - 2023-2024ஆம் கல்வி ஆண்டு முதல் அனைத்து வகை அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் ந.க. எண்: 1519/ முகாஉதி/ ஒபக/ 2023, நாள்: 21-04-2023 (Chief Minister's Breakfast Scheme - Implementation of Scheme for students studying Class 1 to 5 in all categories of Government Primary / Middle Schools from the academic year 2023-2024 onwards State Project Director's Proceedings Letter Rc. No: 1519/ CBFS/ SS/ 2023, Dated: 21-04-2023)...


>>> முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - 2023-2024ஆம் கல்வி ஆண்டு முதல் அனைத்து வகை அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம்  ந.க. எண்: 1519/ முகாஉதி/ ஒபக/ 2023, நாள்: 21-04-2023 (Chief Minister's Breakfast Scheme - Implementation of Scheme for students studying Class 1 to 5 in all categories of Government Primary / Middle Schools from the academic year 2023-2024 onwards State Project Director's Proceedings Letter Rc. No: 1519/ CBFS/ SS/ 2023, Dated: 21-04-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாணவர்களுக்கு காலை உணவு தாமதமாக வழங்கியதால் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் (HeadMaster Suspended for serving breakfast to students late)...




மாணவர்களுக்கு காலை உணவு தாமதமாக வழங்கியதால் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் (HeadMaster Suspended for serving breakfast to students late)...


 மயிலாடுதுறை: திருஇந்தளூரில் நகராட்சி துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழக அரசின் சார்பில் ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. கூறைநாடு கவிஞர் வேதநாயகம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் எம்பி. ராமலிங்கம், எம்எல்ஏக்கள் மயிலாடுதுறை ராஜகுமார், பூம்புகார் நிவேதா எம் முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்து மாணவ மாணவிகளுடன் உணவு அருந்தினர். 


தொடர்ந்து மயிலாடுதுறை திருஇந்தளூர் நகராட்சி பள்ளியில் எம்எல்ஏ ராஜகுமார் மற்றும் அதிகாரிகள் திட்டத்தை துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. முதல் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுடன் உணவு அருந்திவிட்டு, அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்த எம்எல்ஏ. ராஜகுமார் உள்ளிட்டோர் தாமதமாக திருஇந்தளூர் பள்ளிக்கு வந்தனர். 


அதுவரை ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சிறு குழந்தைகள் பசியில் காக்க வைக்கப்பட்டனர். அவர்களது பசி தெரியாமல் இருக்க சிறு சிறு விளையாட்டுகள் ஆசிரியர்கள் விளையாடச் சொல்லி நேரத்தை போக்கினர். தொடர்ந்து 9:45 நிமிடங்களுக்கு மிகவும் காலதாமதமாக உணவு பரிமாறப்பட்டது. இதனால் குழந்தைகள் பசியில் வாடினர். தொடர்ந்து பள்ளியும் தாமதமாக துவங்கப்பட்டது. இது குறித்த செய்தி தினமலர் வெப்சைட்டில் வெளியானது. 


இந்நிலையில் திருஇந்தளூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்ட தொடக்க விழாவில் அரசு நிர்ணயித்த கால அளவினை தாண்டி மாணவர்களுக்கு தாமதமாக உணவு வழங்கி சிரமப்படுத்தியதாலும், காலை 9.45 மணியளவில் மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கி அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அவப்பெயர் ஏற்பட காரணமாக இருந்த திருஇந்தளூர் நகராட்சி துவக்கப்பள்ளி தலைமையாசிரியை குருபிரபாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.





காலை உணவு வழங்குவது சார்ந்து பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை 09.09.2022 முதல் 12.09.2022-க்குள் ஒருநாள் நடத்த வேண்டும் - மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (School Management Committee meeting to be held one day between 09.09.2022 to 12.09.2022 depending on provision of breakfast - State Project Director Proceedings)...



>>> காலை உணவு வழங்குவது சார்ந்து பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை 09.09.2022 முதல் 12.09.2022-க்குள் ஒருநாள் நடத்த வேண்டும் - மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (School Management Committee meeting to be held one day between 09.09.2022 to 12.09.2022 depending on provision of breakfast - State Project Director Proceedings)...







தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்குதலில் பள்ளி மேலாண்மைக் குழுவின் பொறுப்புகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2223/ C7/ பமேகு/ ஒபக/ 2022, நாள்: 23-08-2022 - இணைப்பு: அரசாணை (நிலை) எண்: 43, நாள்: 27-07-2022 (Responsibilities of School Management Committee on Breakfast in Primary Schools - Proceedings of State Project Director - Attachment: G.O. (Ms) No: 43, Dated: 27-07-2022)...



>>> தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்குதலில் பள்ளி மேலாண்மைக் குழுவின் பொறுப்புகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2223/ C7/ பமேகு/ ஒபக/ 2022, நாள்: 23-08-2022 - இணைப்பு: அரசாணை (நிலை) எண்: 43, நாள்: 27-07-2022 (Responsibilities of School Management Committee on Breakfast in Primary Schools - Proceedings of State Project Director - Attachment: G.O. (Ms) No: 43, Dated: 27-07-2022)...






அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் - அரசாணை (நிலை) எண்: 43, நாள்: 27-07-2022 வெளியீடு (Scheme for provision of breakfast to students of classes 1 to 5 in Government Primary Schools on all working days - G.O. (Ms) No: 43, Dated: 27-07-2022)...



 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்க திட்டம்.


முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை - அரசாணை வெளியீடு...


>>> அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் - அரசாணை (நிலை) எண்: 43, நாள்: 27-07-2022 வெளியீடு (Scheme for provision of breakfast to students of classes 1 to 5 in Government Primary Schools on all working days - G.O. (Ms) No: 43, Dated: 27-07-2022)...




முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி ரூ.33.56 கோடி செலவில் வழங்கப்படும்


அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் காலை சிற்றுண்டி


திங்கள் - உப்புமா + காய்கறி சாம்பார்


செவ்வாய் - கிச்சடி


புதன் - பொங்கல் +காய்கறி சாம்பார்


வியாழன் - உப்புமா + காய்கறி சாம்பார்


வெள்ளி - கிச்சடி + கேசரி

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

47,013 temporary posts converted into permanent posts by School Education Department G.O. Ms. No: 19, Dated: 27-01-2025

  47,013 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண் : 19, நாள்: 27-01-2025 வெளியீடு 47,013 te...