கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் 12 ஜனவரி 2024 அன்று வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு...

 TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் 12 ஜனவரி 2024 அன்று வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு (TNPSC Group 2 Exam Results will be released on 12 January 2024 - TNPSC Notification)...





ஜனவரி 12-இல் குரூப் 2 தேர்வு முடிவுகள்...


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-II தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் உள்ளதாகக் குறிப்பிட்டு வெளியான செய்திகள் குறித்துப் பின்வரும் விவரங்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றன.கடந்த டிச.15, 2022ஆம் ஆண்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம், 2023ஆம் ஆண்டில் கடந்த மார்ச்.15, 2023 அன்று மேம்படுத்தப்பட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.


தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின்படி 2023ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் (14 தேர்வுகள்) நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளில் 20 லட்சம் தேர்வர்கள் (தோராயமாக) கலந்து கொண்டுள்ளனர்.தேர்வாணைய ஆண்டு திட்டத்தின் படி தேர்வுகள் நடத்தப்படுவதோடு 32 தேர்வுகளுக்கான (நடப்பாண்டில் அறிவிக்கப்பட்ட 9 தேர்வுகள் உட்பட) தேர்வு முடிவுகளைத் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, தோராயமாக 12,500 தேர்வர்கள் பல்வேறு அரசு பதவிகளுக்கான வேலை வாய்ப்பினை இந்த ஆண்டு பெற்றுள்ளனர்.தொகுதி-II முதன்மை எழுத்துத்தேர்வு தொடர்பாக அதிக அளவிலான தேர்வர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இருந்ததாலும், மேலும் ஒரே நேரத்தில் மதிப்பீடு செய்ய வேண்டிய தேர்வுகள் மற்றும் பிறதேர்வுகள் நடத்தவேண்டியிருந்ததாலும், தொகுதி-II முதன்மை எழுத்துத்தேர்வு தொடர்பான தேர்வு முடிவுகள் தேர்வாணைய அட்டவணையில் டிசம்பர் 2023இல் வெளியிடப்படுவதாக ஏற்கனவே தற்காலிக தெரிவு முடிவு அட்டவணை (Tentative Result Declaration Schedule) குறித்த அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.


தேர்வு முடிவுகளை விரைந்து வழங்க வேண்டுமென்ற நோக்கத்துடன், தொகுதி-II முதன்மை எழுத்துத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடுச் செய்யும் பணிகள் துரிதமாக (விடுமுறை நாட்கள் உட்பட) நடைபெற்று வருகிறது. ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல், வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.இத்தகைய சவால்கள் இருந்த போதிலும், தொகுதி-II தேர்வின் தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தொகுதி-II தேர்வு தொடர்பாகப் பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...