கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.01.2024 ...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.01.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கல்வி.


குறள் 391:


கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.


விளக்கம் :


கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.



பழமொழி : 


A bird in the hand is worth two in the bush


கிடைக்கப் போகும் பலாக்காயினும் கிடைத்துள்ள களாக்காய் மேல்.


பொன்மொழி:


Only I can change my life. No one can do it for me - Carol Burnett


என் வாழ்க்கையை என்னால் மாற்ற முடியும். என்னை தவிர யாரும் அதை செய்ய முடியாது - காரல் பெர்னாட்


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி

இரும்பின் தாது - மாக்னடைட்

பதங்கமாகும் பொருள் - கற்பூரம்


ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Century : நூற்றாண்டு / சதம் (கிரிக்கெட்)


Ceremony : விழா


ஆரோக்கியம்


நாவல்பழம் 


நாவல்பழம் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளில் ஒன்று. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றது. இதில் இருக்கும் அதிக அளவிலான பாலிபினால்கள் உடலுக்குப் பல நன்மைகளை அள்ளித் தருபவை. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆனாலும், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு நாவல்பழங்கள் மட்டுமே சாப்பிடுவது நல்லது.


இன்றைய சிறப்புகள்


ஜனவரி 4


1643 – ஐசக் நியூட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர் 


1809 – லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்தைக் கண்டுபிடித்த பிரான்சியர்


1892 – ஜே. சி. குமரப்பா, தமிழகப் பொருளியலாளர் 


ஆகியோர் பிறந்த நாள் இன்று...



1974 – ஜி. டி. நாயுடு, இந்திய அறிவியலாளர் அவர்களின் நினைவு நாள் இன்று.


ஜனவரி 4 - சிறப்பு நாட்கள் :


தியாகிகள் நாள் (காங்கோ சனநாயகக் குடியரசு)

விடுதலை நாள் (மியான்மர், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1948)

குடியேற்ற அடக்குமுறைக்கு எதிரான வீழ்ச்சி நாள் (அங்கோலா)

உலக பிரெயில் நாள்


நீதிக்கதை


சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன்


போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.


தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.


இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?


நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.


தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.



இன்றைய முக்கிய செய்திகள் 


04-01-2024 


ஈரான் காசிம் சுலைமானியின் கல்லறை அருகே குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் பலி


உஜ்வாலா பயனாளி மீரா மஞ்சி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி, பரிசுகளை அனுப்பினார்.


 விமானத்தில் உணவில் புழு இருப்பதாக பெண் பயணி கூறியதை அடுத்து இண்டிகோ நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


  ➡️இஸ்ரோ எக்ஸ்-ரே போலரிமீட்டர் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 


➡️WhatsApp இணைய பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை வெளியிடாமல் மற்றவர்களுடன் இணைக்க முடியும். 


➡️Google வரைபடம் WhatsApp போன்ற அம்சத்தைப் பெறுகிறது, நிகழ்நேர இருப்பிடத்தைப் பகிர உங்களை அனுமதிக்கிறது. 


 ➡️iPhone பயனர்கள் iOS 17.2.1 புதுப்பிப்பை நிறுவிய பின் அழைப்பு மற்றும் இணைய சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.


 ➡️கொள்கை மீறல் காரணமாக இந்தியாவில் ஒரு மாதத்திற்குள் 71 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை WhatsApp தடை செய்துள்ளது. 


➡️மொத்த UPI பரிவர்த்தனைகள் 2023 இல் 100-பில்லியனைத் தாண்டியது. 


➡️மஹாராஷ்டிரா தொழிலாளர் துறை, 'கட்டாய' இடமாற்றங்கள் தொடர்பாக டிசிஎஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்புகிறது.


Today's Headlines 


04-01-2024


Over 100 dead in Iran blasts near Qasem Soleimani's grave: ‘Cowardly act’


PM Modi pens letter, sends gifts to Ujjwala beneficiary Meera Manjhi, her family


IndiGo served notice after woman passenger claims ‘worm’ in food on flight


➡️ISRO successfully Launches X-Ray Polarimeter Satellite.


➡️WhatsApp web users will be able to connect with others without disclosing their phone number.


➡️Google Maps gets a WhatsApp-like feature, lets you share real-time location.


➡️Instagram to soon allow users to share profiles to Stories.


➡️iPhone users facing Call and Internet issues after installing iOS 17.2.1 update.


➡️WhatsApp banned over 71 lakh accounts in India within a month due to policy violation.


➡️Indian Railways working on 'Super App' with features offered by multiple Apps.


➡️Total UPI transactions cross 100-billion mark in 2023.


➡️Maharashtra Labour Department issues notice to TCS over ‘forced’ transfers.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report

  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்...