கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு தொடக்கப்பள்ளி காலை உணவில் பல்லி - 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி...



அரசு தொடக்கப்பள்ளி காலை உணவில் பல்லி - 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி...


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சமத்துவபுரம் கிராம அரசு தொடக்கப் பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு நேற்று காலை வழக்கம்போல, சேமியா உப்புமா சமைத்து வழங்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் உணவை உண்ட நிலையில், அதில் பல்லி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்கள், சமையலரிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Hi-Tech Lab : Revised Timetable

  உயர் தொழில்நுட்ப ஆய்வகம் : திருத்தப்பட்ட கால அட்டவணை - DSE செயல்முறைகள் , நாள் : 23-07-2025 Hi-Tech Lab : Revised Timetable - DSE Proceedi...