கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.01.2024 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.01.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கல்வி.



குறள் 398:


ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.


விளக்கம் :


ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.




பழமொழி : 


Count not your chickens before they are hatched.


எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே; பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே...


பொன்மொழி:


Impossible is a word to be found only in the dictionary of fools. - Napoleon Bonaparte 


முடியாது என்ற வார்தையை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணமுடியும். - நெப்போலியன் போனபர்ட் 



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


எரிசோடா என்ப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு

எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

நீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்

பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா

இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Bitterness - கசப்பு

Black pepper - மிளகு

Black mustard seed - கடுகு

Blame - பழிசொல்

Blanket - போர்வை 


ஆரோக்கியம்


முட்டை


முட்டை, கலோரிகள் குறைவாக உள்ள உணவு. ஆனால், புரதச்சத்து, ஊட்டச்சத்து, நல்ல கொழுப்புகள் நிறைந்தது. காலையில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளுக்குப் பதிலாக, முட்டையைச் சாப்பிடுபவர்களுக்கு 65% எடை குறைகிறது என்பது சமீபத்தில் ஓர் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. முட்டையில் இருக்கும் அதீதமான புரதம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்கும்; தசைகளுக்கு வலு சேர்க்கும்.



இன்றைய சிறப்புகள்


ஜனவரி 18


1896 – எக்ஸ்ரே இயந்திரம் முதற் தடவையாக எச். எல். சிமித் என்பவரால் காட்சிப்படுத்தப்பட்டது.


1911 – யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானம் இதுவாகும்.



பிறந்த நாள் 

1972 – வினோத் காம்ப்ளி, இந்திய கிரிக்கெட் வீரர் 



நினைவு நாள் 

1963 – ப. ஜீவானந்தம், தமிழகப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் (பி. 1906)


1996 – என். டி. ராமராவ், தென்னிந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், ஆந்திராவின் 10வது முதலமைச்சர் (பி. 1923)


சிறப்பு நாட்கள்

-



நீதிக்கதை


 பேராசை பெரும் நஷ்டம்


கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.


இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.


அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.



வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.


ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள்.  இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.



உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர்.


தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.


தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.


ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.


பேராசை பெரும் நஷ்டம்



 

இன்றைய முக்கிய செய்திகள் 


18-01-2024 


அரசுப் பள்ளிக்கு தனது ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய ஆயி என்கிற பூரணம் அம்மாளை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...


மும்பை பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.4.5 லட்சம் கோடி இழப்பு...


கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை” வரும் 24-ஆம் நாள் திறந்து வைக்க மதுரைக்கு வருகை தருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...


இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரானார் பிரக்ஞானந்தா: விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி அசத்தல்...


அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...


ஊழலுக்கு எதிராக போராடுவதும் ஊழல் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதிலும்  அரசு முன்னுரிமை: பிரதமர் மோடி...


அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி விலகல்...


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதிக் கோட்பாட்டை வழிகாட்டியவர் வள்ளுவர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...



Today's Headlines:

18-01-2024


Minister Udayanidhi Stalin visited Aayi alias Poornam Ammal, who donated her land worth Rs 7 crore to a government school, at her residence...


Mumbai stock market falls sharply: Investors lose Rs 4.5 lakh crore in a single day... 


Chief Minister M.K.Stalin will visit Madurai to inaugurate the "Kalaignar Jallikattu Stadium" on the 24th... 


Pragnananda becomes India's No. 1 chess player:  beats Viswanathan Anand...


Consolation and financial assistance to families of those who drowned in Amaravati river: Chief Minister M.K.Stalin's announcement...


Government's priority in fighting corruption and taking action against corrupt people: PM Modi...


Indian-origin Vivek Ramasamy withdraws from US presidential election race...


Valluvar was the one who guided the social justice theory of procreation: Chief Minister M.K.Stalin...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...