கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2024 - School Morning Prayer Activities...

 

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கல்வி.



குறள் 399:


தாமின் புறுவது உலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.


விளக்கம்:

தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.




பழமொழி : 


Distance lends enchantment to the view.


இக்கரைக்கு அக்கரைப் பச்சை...


பொன்மொழி:


The only true wisdom is in knowing you know nothing. – Socrates


உண்மையான அறிவு என்பது நமக்கு எதுவும் தெரியாது என்பதை தெரிந்துகொள்வதில் தான் உள்ளது - சாக்ரடிஸ்



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


தூய்மையான நீரின் PH மதிப்பு - 7

அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு

இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்

எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான்  (ஃபோம்மைட்)

ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Blend - கலத்தல்

Blow - ஊதுதல்

Blink - சிமிட்டு 

Borrow - கடன் வாங்கு

Brain - மூளை 

Brass - பித்தளை


ஆரோக்கியம்


புரதச்சத்து அதிகம் உள்ளது பாதாம்பருப்பு. இதய நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கக்கூடியது இது. தினசரி ஐந்து பாதாம் பருப்பு சாப்பிடுவது ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 100 கிராம் பாதாம் பருப்பில் 597 கலோரிகள் உள்ளது. விஞ்ஞானிகள் பாதாமுக்கு கொடுத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 97.



இன்றைய சிறப்புகள்


ஜனவரி 19


1966 – இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


1986 – முதற் கணினி நச்சுநிரலான(வைரஸ்) பிரெயின் பரவத் தொடங்கியது.


பிறந்த நாள் 

1933 – சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசைப் பாடகர் (இ. 1988)


நினைவு நாள் 

1990 – ஓஷோ, இந்திய தத்துவவியலாளர் (பி. 1931)


2021 – வி. சாந்தா, இந்தியப் புற்றுநோய் மருத்துவ நிபுணர் (பி. 1927)



சிறப்பு நாட்கள்

கொக்பொரோக் மொழி நாள் (திரிபுரா, இந்தியா)




நீதிக்கதை


 

விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை


ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.


ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.


அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.



குரங்கிடம் அப்பத்தை கொடுத்து  அதைச் சமமாக பிரித்துத் தரசம்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பித்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து நெறுத்தது.


அப்போது ஒரு அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால் அந்தத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது  கடித்து விட்டு மீண்டூம் போட்டது.



இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.


அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.


ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.


பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.


நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்.


 

இன்றைய முக்கிய செய்திகள் 


19-01-2024 


சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்டத்தில் கலங்கரை விளக்கம் – போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கியது...


நடப்பாண்டும் பணிநீக்க நடவடிக்கை இருக்கும்: கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை...


ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி ஜனவரி 22-ம் தேதி ஒன்றிய அரசின் அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை...


பிரதமர் மோடி இன்று சென்னை வருகையையொட்டி சென்னையில் 22,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு: காவல்துறை அறிக்கை...


ஆதார் அட்டை இனி பிறப்பு சான்று ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது: EPFO-க்கு UIDAI உத்தரவு...


ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 81 அடி மேடை, 125 அடி உயர அம்பேத்கர் சிலை  திறப்பு: அனைவரும் பங்கேற்க முதல்வர் ஜெகன்மோகன் அழைப்பு...



Today's Headlines:

19-01-2024


Chennai Metro Rail 2nd phase project begins construction of tunnel up to Lighthouse - Boat Club... 


There will be layoffs this year too: Google CEO Sundarpichai... 


A half-day holiday for the offices of the Union Government on January 22 in connection with the inauguration of the Ram Temple...


5-layer security with 22,000 police in Chennai ahead of PM Modi's visit today: Police report... 


Aadhaar card no longer accepted as proof of birth: UIDAI directs EPFO...


 Inauguration of 81 feet platform, 125 feet tall statue of Ambedkar in Vijayawada, Andhra Pradesh: Chief Minister Jaganmohan invited everyone to participate...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...