கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.01.2024 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.01.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கல்வி.



குறள் 400:


கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை.


விளக்கம் :


கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.





பழமொழி : 


Do not look a gift horse in the mouth.


தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்து பார்க்காதே.


பொன்மொழி:


Experience is a good school. But the fees are high. - Heinrich Heine


அனுபவம் நல்ல பள்ளிக்கூடம். ஆனால் அதன் கட்டணம் அதிகம். - ஹென்ரிக் ஹெயின்



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3

ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்தக அமிலத்தைப் பொருத்ததாகும்.

சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 12

காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு

அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு

காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.

குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Breathe - மூச்சு

Bride - மணமகள்

Bridge - பாலம் 

Breeze - தென்றல்

Bridegroom - மணமகன் 

Brightness - வெளிச்சம்


ஆரோக்கியம்


உலர் திராட்சை


பாதாமைப் போலவே ஆரோக்கியத்திற்கு கட்டியம் கூறுவது உலர் திராட்சை. சிவப்பு, லேசான மஞ்சள், கருப்பு என மூன்று நிறங்களில் கிடைக்கும் இதற்கு கிடைத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 51.



இன்றைய சிறப்புகள்


ஜனவரி 22


1968 – அப்பல்லோ 5 விண்கலம் முதலாவது நிலாக்கலத்தைத் தாங்கி விண்வெளிக்கு சென்றது.



பிறந்த நாள் 

-


நினைவு நாள் 

1666 – ஷாஜகான், முகலாயப் பேரரசர் (பி. 1592)


1897 – ஐசக் பிட்மன், சுருக்கெழுத்து முறையைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (பி. 1813)


சிறப்பு நாட்கள்

-




நீதிக்கதை


 

 உருவுகண்டு எள்ளாமை வேண்டும்


உருவத்தில் சிறியவனாக இருப்பதால் அவனை ஏளனம் செய்யக்கூடாது. அவன் வேறு விடையங்களில் வல்லவனாக இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை


ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.

பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு கிட்டச் செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.


ஆனால் ‘ஈ” ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.  அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..’உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் பிராண்டுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன் என்றது.



அதற்கு ஈயோ நீ பலசாலியாய் இருக்கலாம்.. உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன். இன்னும் சொல்லப்போனால்.. நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொல்லவும், நகங்களால் பிராண்டிக் கொல்லவும் செய்வேன்” என்றது.


இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் இயலுமாயின் அதைச் செய் என் சவால் விட.. ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது.. அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.



ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல.. ஈ பறக்க… சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே பிராண்டிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.


சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. அதனால் சிங்கம் தன் இயலாமையை எண்ணி வெட்கப்பட்டது.


அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது.. தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை இம்சைப் படுத்தி விட்டதே என்று. .


உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது


இதைத்தான் வள்ளுவரும்..


உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து


என்றார்.

(பொருள்- உருவத்தால் சிறிதாக இருந்தாலும் அதை கேலி செய்து அலட்சியப் படுத்த்க் கூடாது. பெரிய தேர் ஓடக் காரணமாய் இருப்பது சிறிய அதன் அச்சாணியே)



 

இன்றைய முக்கிய செய்திகள் 


22-01-2024 


75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்...


 சிறப்பு பூஜைகள் அன்னதானம் நடத்திட எங்கும் தடைவிதிக்கவில்லை; அவதூறான பொய்ச்செய்திக்கு மறுப்பு: தமிழ்நாடு அரசு வன்மையான கண்டனம்...


ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது: ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை...


தனியார் பயிற்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது ஒன்றிய கல்வி அமைச்சகம்...


ஐ.நா தலைவர் இந்தியா வருகை: குடியரசு தின விழாவில் பங்கேற்பு...


செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பதை உறுதி செய்தது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்...




Today's Headlines:

22-01-2024


Ahead of 75th Republic Day celebrations, 5 layers of security will be implemented at Chennai Airport... 


Special pujas do not prohibit alms giving anywhere; Denial of defamatory fake news: Tamil Nadu government strongly condemns... 


The plane that crashed in Afghanistan was not an Indian plane: Union Civil Aviation...


The Union Education Ministry has issued new guidelines for regulating private coaching institutes... 


UN Chief Visits India: Participates in Republic Day... 


European Space Agency confirms water source on Mars...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...