கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.01.2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.01.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கேள்வி.


குறள் 413:


செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

ஆன்றாரோ டொப்பர் நிலத்து.


விளக்கம்:


குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.



பழமொழி : 


East or West, Home is Best


எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.


பொன்மொழி:


 “A person who never made a mistake never tried anything new.” ~ Albert Einstein 


ஒரு மனிதன் தவறுகளே செய்யவில்லை என்றால் எந்த புதிதாக எதையும் முயற்சிக்கவில்லை என்று பொருள் - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது - தனி ஆல்கஹால் + பெட்ரோல்

அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் – புரோமின்

இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)

ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Cardamon - ஏலக்காய் 

Care - கவனம் 

Cart - வண்டி

Cashew - முந்திரி

Cave - குகை 


ஆரோக்கியம்


மிகச்சிறந்த ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருள் (Antioxidant) கொண்ட மாதுளையில் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. தினமும் மாதுளம்பழம் சாப்பிட்டால் ரத்த சிவப்பணுக்களில் ஒருபோதும் குறைபாடு வராது.



இன்றைய சிறப்புகள்


ஜனவரி 29


1946 – ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறைக் குழு அமைக்கப்பட்டது.


1980 – ரூபிக்கின் கனசதுரம் முதல் தடவையாக பன்னாட்டு அளவில் இலண்டனில் விற்பனைக்கு வந்தது.



பிறந்த நாள் 

1954 – ஓப்ரா வின்ஃப்ரே, அமெரிக்க தொலைக்காட்சி அரட்டைக் காட்சி தொகுப்பாளர்


1970 – ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்திய துப்பாக்கி சுடு வீரர், அரசியல்வாதி



நினைவு நாள் 


2019 – ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்திய அரசியல்வாதி (பி. 1930)




சிறப்பு நாட்கள்

-



நீதிக்கதை


நல்லவர்களைப் போல் நடிப்பவர்களும் நாளடைவில் நல்லவராகவே மாறிவிடுவர்...


ஒருமுறை திருடன் ஒருவன் சிம்மபுரி நாட்டு  மன்னரின் அரண்மனைக்குள் திருடுவதற்காக சென்றான். அந்த சமயம் அரசர் தமது குலகுருவுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்ததை கண்டான். 


மறைவாக ஒளிந்திருந்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவன் கேட்டான். அரசன் குல குருவை பார்த்து “குருவே, நீண்ட நாட்களாக எனது மகளுக்கு திருமணம் ஆகாமல் இருப்பது எனக்கு மிகுந்த மன வேதனை தருகிறது” என்றான்.


உடனே குலகுரு அரசனை பார்த்து, “அரசே, கவலைப்படாதே பொழுது விடிந்ததும் நம் ஊரின் எல்லையில் உள்ள நதி கரைக்கு உன் காவலர்களை அனுப்பு அங்கு பல துறவிகள் தவம் செய்து வருகிறார்கள். 


அவர்கள் பாவம் ஏதும் செய்யாத மிகவும் நல்லவர்கள். அவர்களில் ஒருவர்தான் உன் மகளுக்கு ஏற்ற கணவர்” என்றார். மறைவில் இருந்து இதை கேட்டுக் கொண்டிருந்த திருடனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. 



“நாம் போய் நதிக்கரையில் துறவி போல் அமர்ந்து கொண்டால் காவலர்கள் நம்மை அரசனிடம் அழைத்து செல்வார்கள். அரசனும் தன் குலகுரு சொன்னபடியே அவருடைய மகளை எனக்கு திருமணம் செய்து கொடுத்து விடுவார்.


நான் அரசனின் மாப்பிள்ளை ஆகி விடுவேன். பிறகு இந்த திருட்டு தொழிலை விட்டு விடுவேன்” என்று நினைத்து துறவி போல் வேடம் அணிந்து கொண்டு உண்மையான துறவிகளுடன் சேர்ந்து தியானம் செய்வது போல் அமர்ந்திருந்தான். 


பொழுது விடிந்ததும் தன் குலகுரு சொன்னபடியே அரசன் சில காவலர்களை நதிகரைக்கு அனுப்பி அங்குள்ள துறவிளுள் ஒருவரை தம் மகளை திருமணம் செய்து கொள்ள வருமாறு கூறி அழைத்து வர சொன்னார். 


காவலர்களும் அரசனின் ஆணைப்படி நதிகரைக்கு சென்று அங்கிருந்த துறவிகளிடம் அரசர் தம் மகளை மணந்து கொள்ள அழைத்து வருமாறு கூறியதாக ஒவ்வொருவரிடம் கூறினார்கள். 


அனைத்து ஆசிகளையும் துறந்து, இறைவனடி சேர்வதற்காக தவம் புரியும் அந்த துறவிகள் காவலர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. காவலர்கள் இறுதியில் துறவி வேடம் அணிந்திருந்த  திருடனிடம் வந்து, “சுவாமி, நீங்கள் தான் அருள் புரிய வேண்டும். 


எங்கள் அரசர் தமது மகளை இங்கிருக்கும் துறவிகளுள் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்துள்ளார். நாங்கள் இங்கிருக்கும் துறவிகள் அனைவரிடம் கேட்டுவிட்டோம். ஒருவரும் வருவதாக தெரியவில்லை, தாங்கள் ஆவது அருள் கூர்ந்து எங்களுடன் வந்து எங்கள் இளவரசியை திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றனர். 


இதை கேட்ட துறவி வேடத்தில் இருந்து திருடன் சற்றும் நேரம் சிந்தித்தான். இங்குள்ள அனைத்து துறவிகளும் உண்மையான துறவிகள், நல்லவர்கள் அதனால்தான் இவர்களுடைய வேண்டுகோளை அவர்கள் ஏற்கவில்லை. 


நாம் உடனே ஒப்புக்கொண்டால் நம் மீது மன்னர் சந்தேகப்படுவார், என்று மனதில்  நினைத்தான். இச்சமயத்தில் நாமும் உண்மை துறவிகளைப் போல இருக்க வேண்டும் என்று எண்ணியவனாய் அமைதியாக இருந்தான். 


காவலர் வெகு நேரம் கெஞ்சியும் கேட்டும் துறவி வேடத்திலிருந்து திருடன் ஒன்றும் கூறாமலேயே மௌனமாக இருந்தான். பின்னர் காவலர்கள் அரண்மனைக்கு திரும்பி சென்று அரசனை பார்த்து, “அரசே, நதிக்கரையில் தவம் செய்யும் துறவிகள் எல்லோரிடமும் தாங்கள் கூறியதை சொன்னோம். 


ஒருவர் கூட எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. தனியாக உட்கார்ந்து இருக்கும் ஒரு துறவி மட்டும் ஒன்றும் கூறாமல் மௌனமாக இருக்கிறார். ஒருவேளை தாங்கள் நேரடியாக சென்று அழைத்தால் அவர் வருவார்” என்றனர். 


அரசனும் உடனே புறப்பட்டான். அரசன் துறவி வேடத்திலிருந்து திருடனைப் பார்த்து, “ஐயா, தாங்கள் அருள் கூர்ந்து என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றான். அரசன் கூறியதை கேட்டதும் துறவி வேடத்தில் இருந்த திருடன் ஒரு கணம் சிந்தித்தான். 


இந்த நிலையில் உண்மையான துறவி, என்ன பதில் கூறுவார்? என்று நினைத்துப் பார்த்தான். உண்மையான துறவி ஒன்றும் கூறாமல் மௌனமாக இருப்பார் என்பதை அறிந்தான். 


அவனும் அவ்வாறே மௌனமாக இருந்தான். அரசன் தன்னாட்டில் பாதியை அவனுக்கு அளிப்பதாகவும் தன் மகளை மணந்து கொள்ளுமாறும் வேண்டினான். அப்பொழுதும் திருடன் உண்மையான துறவி போல் மௌனமாகவே இருந்தான். 


முடிவில் அரசன், “சுவாமி, என் மகளை தங்களுக்கு தருவதுடன் என் நாடு முழுவதையும் உங்களுக்கு தருவதாக கூறியும் தாங்கள் என்னுடன் வர சம்மதிக்காமல் இருப்பதிலிருந்து தாங்களே உண்மையான, நல்ல துறவி என்று கண்டு கொண்டேன். 


தங்களைப் போன்ற ஒருவரை நான் இல்லற வாழ்க்கைக்கு அழைத்ததே பெரும் பாவம்” எனக் கூறியபடி துறவி வேடத்திலிருந்த திருடனிடம் காலில் விழுந்து வணங்கினான். 


இதை கண்ட துறவி வேடத்தில் இருந்து திருடன் ஆழமாக சிந்திக்க தொடங்கினான். “நாம் உண்மையான, நல்ல துறவி இல்லை நல்லவர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த வேஷத்திற்கு இவ்வளவு மதிப்பு கிடைக்கிறது என்றால் உண்மையான நல்ல துறவியாக நாம் ஆகிவிட்டால் இதைவிட மிகப்பெரிய அளவில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் அல்லவா, 


நாம் ஏன் உண்மையான துறவி ஆகிவிடக் கூடாது” இவ்வாறு சிந்தித்து திருடன் அன்று முதல் உண்மையான நல்ல துறவியாகவே மாறிவிட்டான்


 நீதி : நல்லவர்களைப் போல் வேடம் அணிந்து நடிப்பவர்களும் கூட நாளடைவில் நல்லவர்களாகவே மாறிவிடுவர். உண்மையிலேயே நாம் நல்லவர்களாக இருந்துவிட்டால் நமக்கு கூடுதல் மதிப்பு தானே. எனவே நாம் நல்லவர்களாக இருப்போம்.


 

இன்றைய முக்கிய செய்திகள் 


29-01-2024 


உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீக்குவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள யுஜிசி: அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்...


ரூ.17,930 கோடி செலவில் அமைக்கப்படும்; சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை பணிகள் மார்ச் இறுதியில் முடிக்கப்படும்: அதிகாரிகள் தகவல்...


உடல் உறுப்பு தானம் பாராட்டுக்குரியது: வானொலியில் பிரதமர் மோடி உரை...


7,600 பேர் பயணிக்கும் 1,200 அடி நீள உலகின் நீண்ட பயணிகள் கப்பல் பயணம் தொடங்கியது: ‘ஐகான் ஆப் தி சீஸ்’ என பெயர் சூட்டிய மெஸ்ஸி...


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 வயதே ஆன இத்தாலிய வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன்...


கேலோ இந்தியா விளையாட்டு ஆடவர் வாலிபால் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு தங்கம்...




Today's Headlines:

29-01-2024


UGC issues draft guidelines to remove reservation for SC, ST and OBC categories in higher education institutions: Minister Mano Thangaraj condemns... 


It will be set up at a cost of Rs.17,930 crore; Chennai-Bengaluru expressway to be completed by end of March: Officials inform... 


Organ donation is commendable: PM Modi's speech on radio...


7,600-passenger 1,200-foot-long world's longest passenger cruise begins: Messi named 'Icon of the Seas'... 


22-year-old Italian player Janic Sinner has won the Australian Open tennis men's singles... 


Tamil Nadu team wins gold in men's volleyball at Gallo India Games...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிக்கை...

 பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை   ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது: அது அவர்களுக்கு இ...