கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடர்வண்டி ஓட்டுநராகிய "லோகோ பைலட்" ஆக வேண்டுமா?



தொடர்வண்டி ஓட்டுநராகிய "லோகோ பைலட்" ஆக வேண்டுமா?


அதற்கு நீங்கள் என்ன செய்யனும்?


அதற்கு நீங்கள் தற்போது இந்தியன் இரயில்வே வெளியிட்டுள்ள உதவி ஓட்டுநர் (Assistant Loco Pilot) ஆள்சேர்ப்புக்காக விண்ணப்பிக்க வேண்டும்.


எப்படி விண்ணப்பபது?


அதற்கான இணையதள முகவரியினுள் சென்று இணையவழியில் (online mode) விண்ணப்பிக்க வேண்டும்.


தெற்கு ரயில்வேக்கான இணையதள முகவரிகள் என்ன?


www.rrbchennai.gov.in

www.rrbthiruvananthapuram.gov.in


இதுக்கு விண்ணப்பிக்க என்ன படிச்சிருக்கனும்?


இதுக்கு இரண்டு வருட ஐ.டி.ஐ படிப்பு படிச்சிருந்தா போதும்.


அல்லது


எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறையில் மூன்று வருட டிப்ளமோ படிப்பு

அல்லது

அதே துறைகளில் பொறியியல் (BE) படிப்பு.


இதுக்கு விண்ணப்பிக்க எத்தனை வயசு இருக்கனும்?


பொது (UR) : 18 - 30

இ.பி.வ (OBC) : 18 - 33

ப.வ/ப.ப.(SC/ST) : 18 - 35


இதுக்கு ஏதாவது உடற்தகுதி இருக்கனுமா?


ஆமாம். கண்ணாடி இல்லாமல் கண்பார்வை 6/6 விகிதத்தில் இருக்கணும். விண்ணப்பிக்கும் போதே கண் மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று சேர்த்து அனுப்பனும்.


மேலும், இரத்த அழுத்தம், சர்க்கரை, இ.சி.ஜி எல்லாம் சரியாக இருக்கனும். மொத்தத்தில் A-1 fit ஆக இருக்கனும்.


விண்ணப்பக் கட்டணம் ஏதாவது உண்டா?


ஆமாம்.

எஸ்.சி/எஸ்.டி, பெண்கள், மூன்றாம் பாலினத்தோர் ஆகியோருக்கு ரூ. 250ம், மற்றோருக்கு ரூ 500ம் விண்ணப்பிக்கும் போதே ஆன்லலைனில் செலுத்த வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம் திருப்பித் தந்துடுவாங்கனு சொல்றாங்களே.. அப்படியா?


ஆமாம். நீங்கள் தேர்வு எழுதியதும் ஆன்லைன் மூலமாகவே திருப்பி வழங்கப்படும். தேர்வு எழுதலைனா திரும்பக் கிடைக்காது.


விண்ணப்பிக்கும் போது என்னென்ன சேர்த்து வச்சு விண்ணப்பிக்கனும்?


1. கல்வித்தகுதிச் சான்றிதழ்கள்,

2. பிறந்தநாள் சான்றிதழ்

3. சாதிச் சான்றிதழ்

4. கண்பார்வைக்கான மருத்துவச் சான்றிதழ்

5. மார்பளவு புகைப்படம்

6. மாதிரிக் கையெழுத்து (ஆங்கிலத்தில்)


தேர்வு எத்தனை விதமா இருக்கும்? 

எப்படி இருக்கும்?


தேர்வு ஐந்து விதமாக இருக்கும்.


1. கணினி வழித் தேர்வு 1 (CBT 1)


2. கணினி வழித் தேர்வு 2 (CBT 2)


3. கணினி வழி உளவியல் தேர்வு  (CBAT )


4. சான்றிதழ் சரிபார்ப்பு


5. மருத்துவ பரிசோதனை 


இந்த ஐந்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று வருகிறவர்களுக்கே பணிநியமனம் வழங்கப்படும்.


தேர்வுக்கான பாடத்திட்டங்கள் எப்படி?


CBT -1 (75 marks)

கணிதம், மன உளவியல், பொது அறிவு


CBT - 2


CBT - 1ல் தகுதியானவர்களை 1:15 என்கிற விகிதத்தில் CBT -2 தேர்வுக்கு எடுக்குறாங்க.


CBT -2 தேர்வு PART - A; PART - B என இருவிதமா நடத்துறாங்க.


Part - A ,யில் கணிதம், உளவியல், காரணமறிதல், அடிப்படை அறிவியல், பொறியியல் பகுதுகளில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும்.


Part -B யில் விண்ணப்பதாரரின்  துறை தொடர்பான பாடங்களில் இருந்து 75 கேள்விகள் கேட்கப்படும்.


தவறாக விடையளித்தால் ஏதேனும் எதிர்மறை மதிப்பெண்கள் (negative marks) உண்டா?


ஆமாம்.

CBT - 1 & CBT - 2 ல் தவறான விடைகளுக்கு 1/3 என்ற விகிதத்தில் எதிர்மறை மதிப்பெண் (negative mark) களும் உண்டு.


எனவே விடை தெரிந்த கேள்விகளை மட்டும் எழுதுதல் நலம்.


CBT - 2 முடிஞ்சதுக்கு அப்புறம்??


அதுல தேர்ச்சி பெற்றவர்களை மூன்றாவது கட்ட தேர்வாகிய APTITUDE TEST எனும் உளவியல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.


மற்ற தேர்வுகளை விட இது வித்தியாசமானது. படங்களாகவும் எண்களாகவும் கொடுத்து கேள்வி கேட்பாங்க. அதுல brick test, memory test, yes or no, numerical test அப்படி இப்படினு உண்டு.  ஒவ்வொரு testலயும் குறைஞ்சது 42 மார்க்காவது எடுக்கனும். அதற்கான மாதிரி வினாக்களை rdso.indianrailways.gov.com எனும் இணைய முகவரியில் சென்று பார்க்கலாம்.


தேர்வுப்பட்டியல் எப்படிப் போடுவாங்க??


CBT-2 மற்றும் APTITUDE TEST ல தேர்ச்சி அடைஞ்சவங்களை (70% & 30%) சராசரி மதிப்பெண்கள் போட்டு மதிப்பெண் வாரியாக தேர்வுப்பட்டியல் வெளியாகும்.


அப்புறம்??


அப்புறமா இவுங்க எல்லாம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் தேர்வு செய்யப்பட்டு பெயர் பட்டியல்  இரயில்வேயின் அந்தந்த மண்டல தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இப்போ நம்ம தெற்கு ரயில்வேனா சென்னையில் உள்ள தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.


அப்போ மெடிக்கல் டெஸ்ட் எப்போ??


இரயில்வே மண்டல அலுவலகத்தில் இருந்து அந்த மண்டலங்களில் உள்ள கோட்டங்களுக்கு கோட்ட வாரியான காலி இடங்களைப் பொறுத்து கோப்புகள் அனுப்பி வைக்கப்படும். தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் என ஆறு கோட்டங்கள் உள்ளன.

கோப்புகள் கோட்டங்களுக்குச் சென்றவுடன் அந்தந்த கோட்டங்களில் இருந்து மருத்துவத் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவீர்கள். அந்தந்த கோட்டங்களில் உள்ள இரயில்வே தலைமை மருத்துவமனைகளில் மருத்துவப் பரிசோதனை நடைபெறும்.


மருத்துவப் பரிசோதனையில் வெற்றி பெற்றவர்களுக்கு Pro. Assistant Loco Pilot பணி நியமனத்திற்கான பயிற்சிக்கு அனுப்பப்படுவீர்.


இரயில் எஞ்சின் ( Loco ) சம்மந்தமாக ஆவடியிலும், சிக்னல், தண்டவாளம், விதிமுறைகள் சம்மந்தமாக திருச்சியிலும் மொத்தமாக ரெண்டு மூணு மாசம் பயிற்சி பெற வேண்டி இருக்கும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்து வருபவருக்கு Assistant Loco Pilot பணி நியமன ஆணை வழங்கப்படும்.


அன்றிலிருந்து ஹா...யாக இரயில் இஞ்சினில் வலம் வரலாம்.


இதுக்கு எப்போ வரை விண்ணப்பிக்கலாம்?


இப்போ இருந்து 19.02.2024 வரைக்கும் விண்ணப்பிக்கலாம்.



>>> Click Here to Download Notification...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The matter of locking the student in the classroom - order for investigation

வகுப்பறையினுள் வைத்து மாணவனை பூட்டி சென்ற விவகாரம் - விசாரணைக்கு உத்தரவு The matter of locking the student in the classroom - order for inve...