கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய கல்லூரிக் கல்வி இயக்குநர் பதவியேற்பு...

கல்லூரி கல்வி இயக்குநராக, மேனாள் தொடக்கக் கல்வி இயக்குநர், சேலம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகித்த திரு.கார்மேகம் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


அவர் பணி சிறக்க வாழ்த்துகிறோம்..


கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் இயக்குனராக சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் கார்மேகம் பொறுப்பேற்றுக் கொண்டார்.


சென்னை: உயர் கல்வித்துறையின் கீழ் வரும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நிர்வாக செயல்பாடுகள் உள்பட அனைத்தையும் கல்லூரி கல்வி இயக்ககம் கண்காணித்து வருகிறது. மேலும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், கல்லூரி கல்வி இயக்குனராக திருவாரூரில் உள்ள திரு.வி.க.அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதாவை முழு கூடுதல் பொறுப்பாக நியமித்து உயர் கல்வித்துறை நியமனம் செய்தது. இதனைத்தொடர்ந்து அவர் செயல்பட்டு வந்தார். 


இந்த நிலையில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து ஜனவரி 27ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில், அவர் வெளியிட்ட அரசாணையில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கல்லூரிக்கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக்கல்வி இயக்குனரகத்தில் அதன் இயக்குனராக கார்மேகம் ஐஏஎஸ் இன்று (ஜனவரி 29) பொறுப்பேற்றுக் கொண்டார்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Off-road jeep safariயின் பொழுது நூலிழையில் யானைகளிடமிருந்து உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்

  ஆஃப் ரோடு ஜீப் சஃபாரியின் பொழுது நூலிழையில் யானைகளிடமிருந்து உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள் Tourists narrowly escape from elephants durin...