கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.02.2024...

  

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.02.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கேள்வி.


குறள் 416:


எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.


விளக்கம்:

நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.



பழமொழி : 


Fair words butter no parsnips.


சர்க்கரை என்றால் தித்திக்குமா?


பொன்மொழி:


Great spirits have always faced severe opposition from mediocre minds.


மன ஆற்றலுடையவா்கள் சாதாரணமான மனங்களிலிருந்து வரும் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் இருப்பார்கள்.


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை - தூற்றுதல்

நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை - தெளியவைத்து இறுத்தல்

ஹைட்ரோகுளோரிக் அமிலம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது - சோடியம் ஹைட்ராக்சைடு

நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி - உயர் வெப்பநிலை

கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்கொள்ளப்படும் செயல்முறை - காய்ச்சிவடித்தல்


ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Climb - ஏறு 

Close - அடை

Clock - கடிகாரம்

Cloth - துணி

Cloud - மேகம்


ஆரோக்கியம்


கேரட் ஆரோக்கியத்தின் வரப்பிரசாதம். குளிர்காலத்தில் அதிக விளைச்சல் இருப்பதால் மலிவு விலையில் கிடைக்கிறது. எல்லா இடங்களிலும் சுலபமாக கிடைக்கும் கேரட்டை அப்படியே சாப்பிட்டலாம், சமைத்தும் சாப்பிடலாம்.


1100 ஆண்டுகளுக்கு முன்பு ஆஃப்கானிஸ்தானில் கேரட் தோன்றியது என்று நம்பப்படுகிறது. பிறகுதான் உலகின் வேறு பகுதிகளுக்கு கேரட் சாகுபடி பரவியது. கி.பி 1500 இல் ஐரோப்பாவில் ஆரஞ்சு நிற கேரட் விளைவிக்கப்பட்டன. இப்போது பல நாடுகளில் ஊதா நிற கேரட்டும் பயிரிடப்படுகின்றன.


நார்ச்சத்து, விட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள கேரட், ரத்த சுத்திகரிப்புக்கும் உதவுகிறது.



இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 01


1972 – கோலாலம்பூர் மலேசியாவின் மன்னரால் மாநகரமாக அறிவிக்கப்பட்டது.


1992 – போபால் பேரழிவு: யூனியன் கார்பைட்டின் முன்னாள் முதன்மைச் செயலர் வாரன் அண்டர்சன் ஒரு தலைமறைவான குற்றவாளி என போபால் நீதிமன்றம் அறிவித்தது.


2013 – ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக உயரமான கட்டடம் ஷார்டு பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.


2021 – மியான்மர் இராணுவப் புரட்சியில் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டார். இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.



பிறந்த நாள் 

-


நினைவு நாள் 

2003 – கல்பனா சாவ்லா, இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை, கொலம்பியா விண் ஓட வீராங்கனை (பி. 1961)



சிறப்பு நாட்கள்


குடியரசு நினைவு நாள் (அங்கேரி)

அடிமை ஒழிப்பு நாள் (மொரிசியசு)

தேசிய விடுதலை நாள் (அமெரிக்கா)



நீதிக்கதை


பொறாமை கூடாது


ஒரு கிராமத்தில் பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டில் ஒரு நாயையும், பொதி சுமக்க ஒரு கழுதையை வளர்த்து வந்தார். கழுதையை வேலைக்காரன் ஒருவன் கவனித்து வந்தான். அவன் பண்ணையாரிடம் வேலைக்காரனாக பணியாற்றி வந்தான். 


பண்ணையாருக்கு அவர் வளர்க்கும் நாய் மேல் அதிக அன்பு இருந்தது. ஏனென்றால், அது இரண்டு முறை திருடர்களைப் பிடித்து அவரிடம் ஒப்படைத்துள்ளது. அவர் வெளியே சென்று வீட்டிற்கு வந்தால் தன் வாலை ஆட்டிக்கொண்டே நன்றியை காட்டும். 


அவர் அமர்ந்திருக்கும் போது உரிமையாக சென்று அவர் மடியில் படுத்துக்கொள்ளும். அவர் முகத்தை ஆசையாக நக்கும். பண்ணையார் அதற்கு இறைச்சி துண்டுகளையும் உயர்ந்த ரக உணவுகளையும் கொடுத்து மிகவும் அன்பாக வைத்திருந்தார்.


பண்ணையார் வீட்டில் வளரும் கழுதை பண்ணையார் நாய்க்கு மட்டும் இவ்வளவு சலுகைகளை வழங்குகிறாரே என்று பொறாமைப்பட்டது. பண்ணையார் நாய்க்கு கொடுக்கும் அத்தனை சலுகைகளையும் தான் பெற வேண்டும் என்று நினைத்தது. 



நாய் போல் தானும் ஒரு நாள் பண்ணையார் மடியில் படுத்து அவர் முகத்தை நக்க வேண்டும் என திட்டம் தீட்டியது. கழுதையின் எண்ணத்தை நாய் புரிந்து கொண்டது. அது கழுதையை பார்த்து, “நண்பா, எனக்கு கிடைக்கும் சலுகைகளை கண்டு நீ பொறாமை படாதே, நான் செய்வதைப் போன்றே நீ செய்தால் பண்ணையார் பொறுத்துக் கொள்ள மாட்டார். உன்னை நன்றாக அடித்து வீட்டை விட்டு துரத்தி விடுவார்” என்று அறிவுரை கூறியது.


கழுதை நாய் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அது நாயை பார்த்து, “நண்பா நடப்பதை நீயே பார். பண்ணையார் என் செயலால் எப்படி மகிழ்ச்சி அடையப்போகிறார் என்பதை பார்” என்று கூறியது.


அதற்கு பிறகு நாய் எதுவும் பேசவில்லை. அன்றைக்கு பண்ணையார் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்து கொண்டு வீட்டில் அமர்ந்து புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார். உடனே கழுதை விரைவாக ஓடி சென்று அவருடைய மடியில் அமர்ந்து கொண்டது. 


தன்னுடைய நாக்கால் அவருடைய முகத்தை நக்கியது. பின்னர் பெரும் குரல் எடுத்து கத்தியது. பண்ணையாருக்கு கடும் கோபம் வந்தது. அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து அந்த கழுதையை நன்கு அடித்து விட்டார். வலி தாங்க முடியாத கழுதை கத்திக்கொண்டே காட்டுக்குள் ஓடியது.



 நீதி : பிறருக்கு கிடைக்கும் சலுகைகளை பார்த்து நாம் பொறாமை படக்கூடாது. அவ்வாறு பொறாமை பட்டால் அது நமக்கு அழிவு தான் உண்டாக்கும்.




இன்றைய முக்கிய செய்திகள் 


01-02-2024 


ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் ஹேமந்த் சோரன் : புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு...


பிப்.29ம் தேதிக்கு பிறகு PAYTM BANKன் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என அந்நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவு...


மதிய உணவு திட்டத்திற்க்கு உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...


இல்லம் தேடி கல்வித்திட்டத்துக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு...


ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் : தமிழ்நாடு அரசு தகவல்...


‘உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்’ கீழ் ஆய்வு மாணவர்களுக்கு சத்துணவில் குறைபாடு, அமைப்பாளர் சஸ்பெண்ட் - பணியில் இல்லாத டாக்டருக்கு மெமோ - ராணிப்பேட்டை கலெக்டர் நடவடிக்கை...



Today's Headlines:

01-02-2024 


Jharkhand Chief Minister Hemant Soren resigns: Sambhai Soren chosen as new Chief Minister... 


RBI orders PAYTM BANK to completely stop operations after February 29... 


Chief Minister M. K. Stalin's order to increase the amount of food expenditure for the mid-day meal program...


100 crore funds allocated for Illam Thedi Kalvi scheme and issuance of order... 


Spain's leading companies are interested in investing in Tamil Nadu: Tamil Nadu Government Information... 


Noon meal organizer suspended - memo to doctor who is not on duty - Ranipet collector action...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student Threatens to Kill Headmaster - Full Details

  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...