கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12-02-2024 - School Morning Prayer Activities...

 

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12-02-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை.


குறள் 422:


சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு.


விளக்கம்:


மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.




பழமொழி : 


Lamb at home and a lion at the chase.


பார்த்தால் பூனை; பாய்ந்தால் புலி.


பொன்மொழி:


Continuous learning is the minimum requirement for success in any field! - Denis Waitley 


தொடர்ச்சியான கற்றல் என்பது வெற்றிக்கான குறைந்தபட்ச தேவையாகும்.



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்

இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு - இடப்பெயர்ச்சி

நியூட்டன்/ மீட்டர்2 என்பது - பாஸ்கல்

அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு - விசை/பரப்பு

துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது - நிலை ஆற்றல்

இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்


ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Courage - ஊக்கம் 

Cow - பசு 

Crab - நண்டு 

Crane - கொக்கு 

Craze - மதிமாற்றம் 

Cracker - வெடி 

Crore - கோடி 


ஆரோக்கியம்


சமச்சீரான உணவு எது?


நாம் தினமும் சாப்பிடும் உணவில் புரதம், மாவுச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள், தாதுகள் ஆகியவை தேவையான அளவில் இருப்பதைச் சமச்சீரான உணவு என்கிறோம். தானியங்கள், பயறு வகைகள், இறைச்சி சார்ந்த பொருட்கள், காய்கறிகள், பழங்கள், ஆகியவற்றைக் கலந்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக்கொண்டால், நமக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் கிடைத்துவிடும். ஏதாவது ஒன்றை மட்டும் அதிகம் உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான சத்துகள் அனைத்தும் கிடைக்காது, இதனால் ஊட்டச்சத்துக்குறைவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படலாம். அல்லது ஏதேனும் சில சத்துகள் தேவைக்கு அதிகமாகச் சேர்ந்து உடல் பருமன் போன்ற பிரச்சினைகளை உண்டுபண்ணும்.


இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 12


1935 – ஈலியம் நிரப்பப்பட்ட வான்கப்பல் மேக்கோன் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கரையில் மூழ்கியது.


1947 – மிகப்பெரும் இரும்பு விண்வீழ்கல் சோவியத் ஒன்றியம் சிக்கோட்-ஆலின் என்ற இடத்தில் விண்கல் வீழ் பள்ளம் ஒன்றை உருவாக்கியது.


1961 – வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.


2001 – நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.



பிறந்த நாள் 

1809 – சார்லஸ் டார்வின், ஆங்கிலேய இயற்கையியலாளர், நிலவியலாளர் ரி. 1882)


1809 – ஆபிரகாம் லிங்கன், அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவர் (இ. 1865)



நினைவு நாள் 

1908 – ஜி. யு. போப், தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் (பி. 1820)



சிறப்பு நாட்கள்

டார்வின் நாள்

செங்கை நாள் (இந்நாள் சிறுவர்களை இராணுவத்தில் அல்லது போர்களில் பயன்படுத்துவதற்கு எதிரான நாள்)

ஒன்றிய நாள் (மியான்மர்)

இளைஞர் நாள் (வெனிசுவேலா)



நீதிக்கதை



கர்வம் உதவாது


அந்த காகம் மிகவும் அகங்காரம் பிடித்தது. அது எப்பவுமே எல்லோரிடமும் கர்வமாக பேசிக்கொண்டு இருக்கும். ஒரு நாள் அந்த கடற்கரையில் சில அன்னப்பறவைகள் நிற்பதை பார்த்த காகம், அந்த அன்ன பறவைகளிடம் சென்று சொன்னது, “நீங்கள் பார்ப்பதற்கு தான் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், ஆனால் என்னைப்போல் உங்களால் பறக்க முடியாது” என்று கர்வமாக சொன்னது.


அப்போது ஒரு அன்னப்பறவை  சொன்னது, “நண்பா! நாங்கள் இங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க தான் வந்துள்ளோம், உன்னுடன் எந்த வாக்குவாதமும் செய்வதற்கு எங்களுக்கு நேரமில்லை” என்றது. உடனே அந்த காகம், “இல்லை, உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னுடன் போட்டி போடுங்கள்” என்றது. 


அதற்கு ஒரு அன்னப்பறவை சரி என்ன போட்டி என்று கேட்டது. அதற்கு காகம் சொன்னது, “நாம் இருவரும் இந்த கடற்கரையில் இருந்து சில மைல்கள் பறந்து செல்வோம், யார் முதலில் செல்கிறார்களோ அவர்கள் தான் சிறந்தவர்கள்” என்று சொன்னது. உடனே அந்த அன்னப்பறவையும் சரி என்றது. இந்த காகம் தான் பருத்து இருப்பதை மறந்து விட்டு மிகவும் வேகமாக பறந்து சென்றது. அன்னப்பறவையும் அதனால் முடிந்த அளவிற்கு வேகமாக பறந்து சென்று கொண்டு இருந்தது.



சிறிது தூரம் சென்ற பிறகு காகம் மிகவும் சோர்வடைந்தது. அதனால் இப்போது எதுவும் செய்ய முடியவில்லை. கீழே சென்றால் கடலில் மூழ்கி இறந்து விடுவோம் என்று அதற்கு நன்றாகவே தெரியும். காகம் என்ன செய்வதென்று தெரியாமல் மிகவும் களைப்பாக பறந்து கொண்டே இருந்தது.



அதை பார்த்த அன்ன பறவை, “நண்பா, நான் உன்னை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் உனக்கு என்ன ஆயிற்று மிகவும் களைப்படைந்து விட்டாயே” என்றது. அதற்கு காகம் சொன்னது, “என்னால் முடியவில்லை இன்னும் சிறிது தூரம் சென்றால் நான் நிச்சயமாக இந்த கடலில் விழுந்து இறந்து விடுவேன்” என்றது.


உடனே அன்னப்பறவை, “சரி நீ கவலை படாதே என் முதுகில் ஏறிக்கொள் நான் உன்னை கரையில் கொண்டு சேர்க்கிறேன்” என்றது. உடனே காகமும் அன்னப்பறவை முதுகில் ஏறி கரைக்கு பத்திரமாக சென்றது. கரைக்கு சென்ற காகம் அன்னப்பறவையிடம் “நண்பா என்னை மன்னித்துவிடு நான் மிகவும் அகங்காரம் பிடித்து உன்னிடம் பேசி விட்டேன், நான் அவ்வாறு உன்னிடம் பேசி இருக்கக் கூடாது. நீ மட்டும் எனக்கு உதவி செய்யவில்லை என்றால் நான் நிச்சயமாக இன்று இறந்து இருப்பேன்” என்று அன்னப்பறவையிடம் மன்னிப்பு கேட்டது.


நீதி: கர்வம் என்றைக்கும் உதவி செய்யாது.






இன்றைய முக்கிய செய்திகள் 


12-02-2024 


10 ஆண்டில் 1,562 தேவையற்ற சட்டங்கள் ரத்து; 5 ஆண்டில் 221 மசோதாக்கள் நிறைவேற்றம்: ஒன்றிய அமைச்சர் தகவல்...


கோவை கார் வெடிப்பு தொடர்பான வழக்கில் மேலும் 4 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ...


திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி தமிழ்நாடு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்...


ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 31 பேர் உயிரிழப்பு: போரால் இதுவரை பாலஸ்தீனர்கள் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...


தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் 3 நாட்கள் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு...


செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில்நுட்பத்துக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக மாநாடு நடத்துவது தமிழ்நாடு அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்...


3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2023-24 ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.25%-ஆக அதிகரிப்பு...





Today's Headlines:

12-02-2024


1,562 unnecessary laws repealed in 10 years; 221 bills to be passed in 5 years: Union Minister informs... 


NIA arrests 4 more people in Coimbatore car blast case...


Tamil Nadu is a pioneer for other states in implementing projects: Minister Udayanidhi Stalin's pride... 


31 Palestinians killed in Israeli airstrike in Raba city: More than 27,000 Palestinians killed in war so far...


3 Days Bakery Products Preparation Training by Entrepreneurship Development and Innovation Institute: Tamilnadu Govt Announcement... 


Tamil Nadu govt to hold India's first conference on language technology in the age of artificial intelligence: Chief Minister M.K.Stalin...


Employee Provident Fund interest rate hike to 8.25% for 2023-24...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Railway management should give up its dual approach of "betraying Tamil Nadu's plans and blaming Tamil Nadu's journalists" - Madurai MP

"தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு துரோகமும், தமிழ்நாட்டின் செய்தியாளர்கள் மீது பழியும்” இரட்டை அணுகுமுறையை இரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும...