பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13-02-2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை.
குறள் 423:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
விளக்கம்:
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
பழமொழி :
Jack of all trade is master of none
பல மரங்கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.
பொன்மொழி:
Never confuse a single defeat with a final defeat.
முதல் தோல்வியே கடைசித் தோல்வி என குழப்பம் வேண்டாம்.
அறிவியல் பொது அறிவு வினா விடைகள் :
அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி
ஒரியான் என்பது - விண்மீன் குழு
புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு - ஸ்ட்ரேட்டோஸ்பியர்
எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் - நைட்ரஜன்
புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 1770° C
புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் - சிலிக்கன்
ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :
Cross - கடந்து செல்
Crow - காகம்
Crowd - கூட்டம்
Cyclone - புயல்
Cry - அழு
ஆரோக்கியம்
சமச்சீரான உணவில் இருக்க வேண்டிய கலோரியின் அளவு என்ன?
மாவுச்சத்திலிருந்து 50-லிருந்து 60 சதவீதம் கலோரியும், புரதத்திலிருந்து 10 முதல் 15 சதவீதக் கலோரியும், கொழுப்பு வகைகளிலிருந்து 20 முதல் 30 சதவீதம் கலோரியும் நமக்குக் கிடைக்க வேண்டும்.
இன்றைய சிறப்புகள்
பிப்ரவரி 13
2004 – அண்டவெளியின் மிகப்பெரிய வைர, வெண்குறு விண்மீன் பிபிஎம் 37093 கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிறந்த நாள்
1915 – ஆங் சான், பர்மாவின் 5வது பிரதமர் (இ. 1947)
நினைவு நாள்
1950 – செய்குத்தம்பி பாவலர், தமிழறிஞர் (பி. 1874)
சிறப்பு நாட்கள்
குழந்தைகள் நாள் (மியான்மர்)
உலக வானொலி நாள்
நீதிக்கதை
மணியோசையும் மக்கள் அச்சமும்
ஒரு கிராமத்தின் எல்லையில் ஒரு காடு இருந்தது. கிராமத்திலிருந்த ஒரு கோவிலில் உள்ள கதவில் ஒரு வெள்ளி மணி கட்டப்பட்டிருந்தது. ஒரு நாள் ஒரு திருடன் மணியைத் திருடிக் கொண்டு காட்டிற்குள் ஓடி விட்டான். ஆனால் துரதிஷ்டவசமாக அன்றே அவனை ஒரு புலி கொன்று தின்று விட்டது.
கோவிலுக்கு சொந்தமான வெள்ளி மணி காணாமல் போனதில் கிராம மக்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர். அன்று இரவு அந்த மணி அடிக்கும் சத்தம் கேட்டது. பல பக்கங்களிலிருந்தும் மணி ஓசை கேட்பது போல் அவர்களுக்கு தோன்றியது. இதைக் கேட்டு அம்மக்கள் பயந்துவிட்டனர். கோவில் மணியை திரும்பப் பெறுவதற்கு கிராம மக்கள் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை என்று கோவிலில் இருந்த தெய்வம் கோபித்துக் கொள்வதாக அந்த மக்கள் எண்ணி பயந்து போனார்கள்.
மறுநாள் கிராம மக்கள் சிலர் மணியைத் தேடி காற்றுக்குள் சென்றனர். ஆனால் மணி எங்கிருக்கிறது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை; ஊருக்கு திரும்பினர்.
அந்த இரவும் அவர்களுக்கு மணியோசை கேட்டது. ஒருமுறை ஒரு திசையில் இருந்தும் அடுத்த முறை வேறு திசையில் இருந்தும் மணியோசை கேட்பது போல் அவர்களுக்கு தோன்றியது. உண்மையிலேயே அந்த மக்கள் மிகவும் நடுங்கிப் போனார்கள்.
மறுநாள், அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன், உண்மையில் என்னதான் நடக்கிறது என்பதை கண்டறிய காட்டிற்குப் புறப்பட்டான். தனியாக காட்டுக்குள் சென்றான். சிறிது நேரத்திற்கு பிறகு முரசு அடிக்கும் சத்தமும் மணியோசையும் கேட்டது. அவன் தைரியமாக சத்தம் வந்த திசையை நோக்கி சென்றான். அங்கு ஒரு குரங்கு கூட்டம் ஒரு முரசு , ஒரு மணி, சில உடுப்புகள் இவற்றை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருப்பதை கண்டான்.
குரங்குதான் மணியை அடித்து ஓசையை எழுப்பி இருக்கிறது; மரத்திற்கு மரம் தாவுவதால் மணியோசை வெவ்வேறு திசைகளில் இருந்து கேட்கிறது என்பதையும் சிறுவன் உணர்ந்து கொண்டான். அவன் அங்கேயே பொறுமையாக காத்துக் கொண்டிருந்தான். ஒரு குரங்கு மணியை வைத்து விளையாடியவாரே அந்தக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்தது ஒரு மரத்தில் உட்கார்ந்தது.
இதற்காக காத்திருந்த சிறுவன், குரங்கின் எதிரே சில பழங்களையும் கொட்டைகளையும் வீசி எறிந்தான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு குரங்கு பழங்களையும் கொட்டைகளையும் பார்த்தது. அவற்றை எடுப்பதற்காக மரத்திலிருந்து இறங்கியது. ஆனால், நிறைய பழங்களும் கொட்டைகளும் இருக்கவே, மரத்திலேயே மணியை வைத்தது; இறங்கி வந்து அவற்றை பொறுக்க ஆரம்பித்தது.
இந்த சமயத்திற்காக காத்திருந்த சிறுவன் விரைந்து சென்று மணியை எடுத்துக் கொண்டான். கிராமத்திற்கு ஓடி வந்தான். காட்டில் உண்மையில் என்ன நடந்தது என்பதை கிராம மக்களிடம் விவரமாக எடுத்துக் கூறினான். சூழலை உணர்ந்து சிந்தித்து செயல்பட்ட சிறுவனை அனைவரும் பாராட்டினார்கள்.
நீதி: பகுத்தறிவு விளக்கை ஏற்று, மூட நம்பிக்கை இருளை ஓட்டு.
இன்றைய முக்கிய செய்திகள்
13-02-2024
விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு...
பிப்ரவரி 19ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் 2024.. 20ம் தேதி வேளாண் பட்ஜெட் 2024… 22ம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நிறைவு...
மகளிருக்கு மாதம் ரூ.1,000, காலை சிற்றுண்டி உள்ளிட்ட திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடி. தமிழ்நாடு அரசின் சாதனைகளை பட்டியலிட்டார் சபாநாயகர் அப்பாவு...
கத்தாரில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கடற்படை 8 மாஜி அதிகாரிகளும் விடுவிப்பு: ஒன்றிய வெளியுறவு துறை அறிவிப்பு...
Today's Headlines:
13-02-2024
Prohibitory order 144 in Delhi till March 12 to prevent farmers protest...
Tamil Nadu Budget 2024 on 19th February.. Agriculture Budget 2024 on 20th... Legislative Assembly session on 22nd...
Rs 1,000 per month for a girls - breakfast, is a pioneer for India. Speaker Appavu listed the achievements of the Tamil Nadu government...
8 ex-Navy officers sentenced to prison in Qatar released: Union Ministry of External Affairs announced...