கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19-02-2024...

 

 

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19-02-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை.


குறள் 427:


அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.


விளக்கம்:


ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.


பழமொழி : 


No rains, no grains


மாரியல்லாது காரியமில்லை.



பொன்மொழி:


Success is neither a high jump nor a long jump; it is the steps of a marathon. 


 வெற்றி என்பது உயரம் தாண்டுதலோ, நீளம் தாண்டுதலோ அல்ல அது ஒரு மராத்தான்.



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை

கார்களில் உள்ள ஸ்டியர்ங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு

பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா

நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி

எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்

இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு


ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Different - வேறுபாடு

 Dignity - கௌரவம் 

Directly - நேராக

Disappear - மறைதல்

 Discontent - குறைத்தல்

 Discontinue - நிறுத்து

Dismantle - கலைத்தல் 


ஆரோக்கியம்


தேவைக்கு அதிகமான உப்பைச் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் உயருமா?


உப்பு சுவை சார்ந்த ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அதிக உப்பால் ரத்த அழுத்தம் நிச்சயம் அதிகரிக்கும். ஒவ்வாமை இல்லாதவர்கள் உப்பு அதிகம் சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் உயரும்.



இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 19


1986 – சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.


2002 – நாசாவின் மார்சு ஒடிசி விண்ணுளவி செவ்வாய்க் கோளின் மேற்பரப்பை வெப்ப உமிழ்வு முறை மூலம் வரைய ஆரம்பித்தது.



பிறந்த நாள் 

1473 - நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், போலந்து கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1543)

1630 – சிவாஜி, மராட்டியப் பேரரசர் (இ. 1680)


1855 – உ. வே. சாமிநாதர், தமிழறிஞர் (இ. 1942)



நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


பேரரசர் சிவாஜி ஜெயந்தி (மகாராஷ்டிரா)



நீதிக்கதை


பேராசை பேரிழப்பு 


முன்னொரு காலத்தில் காட்டில் ஓர் ஓநாய் வாழ்ந்து வந்தது. அதற்கு மிக வயதாகி விட்டது, முன்னை போல் ஓநாயால் வேகமாக ஓட முடியவில்லை. ‘என்னால் இறையை வேட்டையாடி பிடிக்க முடியவில்லை இறையைப் பிடிக்க எளிய வழி ஒன்றை நான் கண்டுபிடிக்க வேண்டும்,’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டது. ஆனாலும் அதற்கு எந்த யோசனையும் தோன்றவில்லை.


தன் இருப்பிடத்தை விட்டு ஓநாய் ஒருநாள் வெளியே வந்தது. காட்டின் எல்லை வரை நடந்தது. தொலைவில் ஒரு செம்மறி ஆட்டு மந்தை மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்தது. சத்தம் செய்யாமல் மிக மெதுவாக அவற்றை நெருங்கியது. அருகில் இருந்த ஒரு பெரிய கிணற்றுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டது.


‘இங்கிருந்து நிச்சயமாக ஓர் ஆட்டை பிடிக்க முடியும்,’ என்று எண்ணிக்கொண்டது. பொறுமையாக காத்திருந்தது; அவை அருகில் வந்த போது திடீரென்று பாய்ந்து ஒரு ஆட்டை பிடித்துக் கொன்று தின்றது.


ஆட்டின் தோல் மட்டும் கீழே கிடந்தது. ‘நல்ல யோசனை எனக்குத் தோன்றியுள்ளது; மறுபடியும் நான் பட்டினி கிடக்க வேண்டாம்,’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டது.



அந்த ஆட்டுத் தோலுக்குள் ஓநாய் புகுந்து கொண்டது. ஆட்டு மந்தையில் இப்போது அது சேர்ந்து கொண்டது. “ஓ!அந்த ஓநாயிடமிருந்து நீ தப்பித்து விட்டாயா? நீ இறந்து விட்டாய் என்று நாங்கள் நினைத்தோம்” என்று ஓர் ஆடு சொல்லிற்று. அவை ஆட்டு தோல் போர்த்திய ஓநாயை தம்மந்தையை சேர்ந்த ஓர் ஆடு என்றே நினைத்துக் கொண்டன. தலையை ஆட்டியவாறு ஆட்டு தோல் போர்த்திய ஓநாய் தனக்குள் சிரித்துக் கொண்டது. 


மாலையில் அவற்றோடு ஓநாயும் ஆடுகளை அடைக்கும் பட்டிக்குச் சென்றது. ஆட்டு தோலால் மூடப்பட்ட ஓநாய் ஆடு போலவே தோற்றமளித்தது. அதனால்  ஆட்டு இடையனுக்கும், ஆடுகளுக்கும் நடுவில் ஓநாய் இருப்பது தெரியவில்லை.


நாட்கள் சென்றன. ஒவ்வொரு நாளும் ஓர் ஆடு காணாமல் போவதை இடையன் கவனித்தான். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “ஆடுகள் எப்படி காணாமல் போகின்றன?” என்று தன்னையே கேட்டுக் கொண்டான். ‘நான் மிக எச்சரிக்கையாக தான் அவற்றை கவனித்துக் கொள்கிறேன்’ என்று எண்ணி வருந்தினான். ஆனால் அவனுக்கு காரணம் தெரியவில்லை. இப்படி இருக்கையில் தினமும் இரவில் அவை தூங்கும் போது ஒவ்வொரு செம்மறி ஆடாக இந்த ஓநாய் கொன்று தின்று நன்றாக கொழுத்து இருந்தது.


ஒரு நாள் இடையன் பட்டிக்கு வந்தான். அவனுடைய உறவினர்கள் வெகு தொலைவில் இருந்து அங்கு வர போவதாக அவனுக்கு செய்தி வந்திருந்தது. அவர்களுக்கு விருந்து படைக்க எண்ணினான். பட்டியை சுற்றிப் பார்த்தான் மூலையில் இருந்த நல்ல கொழுத்த ஆடு அவன் கண்களில் தென்பட்டது. அதை கொண்டு நல்ல விருந்து படைக்கலாம் என்று அவன் தீர்மானித்தான்.  வெட்டும் இடத்திற்கு அதை கொண்டு போன இடையன் அது ஆடு அன்று குண்டு ஓநாய் என்பதை தெரிந்து கொண்டான். 



அவன் மிகவும் வியப்படைந்தான். தினம் இரவில் எவ்வாறு ஒவ்வொரு ஆடாக காணாமல் போகிறது என்பது இப்போது அவனுக்கு புரிந்தது. அதற்கு தக்க தண்டனையை கொடுக்க விரும்பினான். அந்த கொடிய ஓநாயை ஆட்டிடையன் கொன்று விட்டான்.


 நீதி : வேடம் கலைந்தால் வேதனை உறுதி.



இன்றைய முக்கிய செய்திகள் 


19-02-2024 


தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் 60,567 நபர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்...


மதுரையில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...


இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...


குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 204 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1374 புதிய வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...


தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் மின்தடை இருக்காது என்று மின்சார வாரியம் உறுதி...


புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு...


ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்ட சிறுபான்மையின மக்கள் கல்வி உதவித்தொகை தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் வழங்கப்படும்: 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 1,26,256 முஸ்லிம் மாணவ மாணவியர் பயன்பெறுவர்...



Today's Headlines:

19-02-2024


60,567 people have been appointed to government jobs in Tamil Nadu within the last three years: Tamil Nadu Government Information...


 Minister Udayanidhi Stalin launched the scheme of providing Kalaignar sports equipment in Madurai... 


The central government should take steps to release Tamil Nadu fishermen in Sri Lankan jail: Chief Minister M.K.Stalin...


Chief Minister M. K. Stalin inaugurated 1374 new classroom buildings built at a cost of 204 crore 57 lakh rupees under the Children's School Infrastructure Development Project... 


Electricity Board assures that there will be no power cuts in Tamil Nadu during summer... 


Ban on sale of cotton candy confirmed to contain cancer-causing chemicals: Minister M. Subramanian orders...


Tamil Nadu Government Funded Scholarship for Minorities Discontinued by Union Govt.: 1,26,256 Muslim students from 1st to 8th standard will benefit...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...