கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11-03-2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11-03-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: விருந்தோம்பல்.


குறள் 82:


விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.


விளக்கம்:


விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.



பழமொழி : 


சில விஷயங்களில் எல்லா மனிதர்களும்

முட்டாள்களே


Every man is mad on some point



பொன்மொழி:


Why? Why not? Why not you? Why not now? – Way to Success 


ஏன்? ஏன் இல்லை? ஏன் கூடாது? ஏன் இப்போது கூடாது? – வெற்றிக்கு வழிகள்...


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


மனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது.

நம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடையில் பங்கு வகிக்கும் சதவீதம் - 30 சதவீதம்

நரம்புத் திசுவின் அடிப்படை அலகு - நியுரான்

சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செய்ல்படுவது - முகுளம்

நிணநீர் சுரப்பிகளில் உருவாவது - லியூக்கோசைட்டுகள்.



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Invade - படையெடு 

Invite - அழை 

Involve - ஈடுபாடு 

Irascibility - முன்கோபம் 

Island - தீவு 


ஆரோக்கியம்


குறைந்த கொழுப்பை சாப்பிடுங்கள்:

கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட ஆற்றல் மூலங்கள். அதிகமாக சாப்பிடுவது, குறிப்பாக தவறான கொழுப்பு வகைகள், நிறைவுற்ற மற்றும் தொழில்துறையில் உற்பத்தி செய்யப்படும் டிரான்ஸ் கொழுப்பு போன்றவை இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

விலங்கு கொழுப்புகள் அல்லது நிறைவுற்ற கொழுப்புகள் (வெண்ணெய், நெய், பன்றிக்கொழுப்பு, தேங்காய் மற்றும் பாமாயில்) அதிகம் உள்ள எண்ணெய்களை விட நிறைவுறா தாவர எண்ணெய்களை (ஆலிவ், சோயா, சூரியகாந்தி அல்லது சோள எண்ணெய்) பயன்படுத்துவது ஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்ள உதவும்.

ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பைத் தவிர்க்க, மொத்த கொழுப்பின் நுகர்வு ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆற்றல் உட்கொள்ளலில் 30% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.


இன்றைய சிறப்புகள்


மார்ச் 11


1999 – இன்ஃபோசிஸ், இந்தியாவின் முதலாவது வணிக நிறுவனமாக நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படட்து.


2007 – தென் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள கயானா விண்வெளி ஏவுதளத்தில் ஆரியான்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4பி என்ற இந்திய செய்மதியையும் ஸ்கைநெட்-5ஏ என்ற பிரித்தானியாவின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.


பிறந்த நாள் 

1927 – வி. சாந்தா, இந்திய புற்றுநோய் மருத்துவ நிபுணர் (இ. 2021)



நினைவு நாள் 

1955 – அலெக்சாண்டர் பிளெமிங், பெனிசிலின் மருந்து கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற உயிரியலாளர் (பி. 1881)



சிறப்பு நாட்கள்


விடுதலை நாள் (லித்துவேனியா, சோவியத் ஒன்றியத்தில் இருந்து, 1990)



நீதிக்கதை


மாடும் புலியும் 


முன்பொரு காலத்தில் ஒரு கிராமத்துல ஒரு மாடு ஒன்னு இருந்தது. அந்த மாடு எல்லோரோடும் ரொம்ப நட்பாகவும், ரொம்ப உதவி செய்யும் குணத்துடனும் பழகி வந்தது. அது தன் முதலாளி பேச்சைக் கேட்டு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஒரு நாள் அந்த மாடு காட்டுக்கு சென்று புற்களை சாப்பிட்டு கொண்டு இருந்தது. 


அப்போது ஒரு புலி அந்த மாடை பார்த்து அதை வேட்டையாட நினைத்தது. புலி தன்னை தாக்க வருவதைக் கவனித்த மாடு ரொம்ப அமைதியாக பயத்தை விட்டு புலியிடம் பேச துவங்கியது. 


“புலியாரே! எனக்கு ஒரு கண்ணு குட்டி இருக்கு. அது இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் பிறந்தது. அதுக்கு புல்லை எப்படி சாப்பிட வேண்டும் என்று கூட தெரியாது. நான் திரும்பி போகவில்லை என்றால் அவனால் பால் குடிக்க முடியாது. அதனால் நீங்க அனுமதி கொடுத்தால் அவனுக்கு நான் போய் பால் குடுத்துட்டு திருப்பி இங்கே வந்துடுவேன். அப்புறம் நீங்க என்னை சாப்பிடலாம்” என்றது. 


மான் சொன்னதைக் கேட்டு புலி சத்தமாக சிரித்துவிட்டு சொன்னது “என்னிடம் இருந்து தப்பித்து செல்ல நீ பொய் சொல்கிறாய். நான் முட்டாள் என்று நீ நினைக்கிறாயா!” என்றது மூர்க்கமான புலி. 



அதற்கு மாடு புலி கிட்ட ரொம்ப கெஞ்சி சொன்னது “இல்லை, இல்லை நான் பொய் சொல்லவில்லை பொய் சொல்வதைவிட செத்தே போயிவிடலாம். எல்லோரும் ஒரு நாள் செத்துத் தான் போக வேண்டும். இன்றைக்கு உங்க பசிக்கு கண்டிப்பாக நான் சாப்பாடாக இருப்பேன் தயவுசெய்து என்னை ஒரு முறை போக விடுங்கள் நான் என் குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு உடனே திரும்பி வந்துடுவேன். இது தான் என் கடைசி ஆசை” என்றது. 


அதற்கு புலி கொஞ்ச நேரம் விட்டு அந்த காட்டுல் இருக்கின்ற விலங்குகள் எல்லாம் எவ்வளவு உண்மையாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ள நினைத்தது. அதனால் மாடு தன் குட்டிக்கு பால் கொடுக்க அனுமதித்தது புலி. 


உடனே பசு மாடு தன்னுடைய கிராமத்திற்கு சென்று தன் குட்டிக்கு பால் கொடுத்துவிட்டு அதனிடம் சொன்னது “என்னோட செல்ல குட்டியே! நீ நல்லா இருந்து எல்லாருக்கும் உதவி செய்யணும், யாரிடமும் பொய் சொல்லகூடாது. நீ எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும்” என்றது. 


பின்னர் தன் வார்த்தையைக் காப்பாற்ற காட்டுக்கு திரும்ப சென்று புலியின் முன்னாடி நின்றது. மாடை பார்த்ததில் புலிக்கு ஒரே ஆச்சரியம். அந்நேரம் புலி யோசித்தது இந்த மாடு தன் வாழ்க்கையை விட அது சொன்ன வார்த்தைகளுக்கு ரொம்ப மதிப்பு கொடுக்கிறது. 


இந்த மாடுக்கு தீங்கு கொடுப்பது ரொம்ப தவறு என்று யோசித்தது. “நீ உன்னுடைய நேர்மையை நிரூபித்து விட்டாய். நீ சந்தோஷமாக சென்று உன் குழந்தை கூட வாழ் இனிமேல் என்னால் உனக்கு எந்த தீங்கும் வராது” என்று சொல்லி அங்கிருந்து சென்று விட்டது. உடனே அந்த மாடும் தன்னுடைய கிராமத்திற்கு சென்று தன் குட்டியுடன்  மகிழ்ச்சியாக வாழ்ந்து. 


இந்த கதையோட நீதி என்னவென்றால்  நீங்க உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும், நல்ல நிலைமைக்கும் செல்ல முடியும். 



இன்றைய முக்கிய செய்திகள் 


11-03-2024 


புதிய தேர்தல் ஆணையர்களை நியமிப்பது குறித்து மார்ச் 15-ம் தேதி ஒன்றிய அரசு ஆலோசனை...


தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி இறந்த 3 குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி...


சீர்காழி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை...


பாகிஸ்தான் அதிபராக பாகிஸ்தான் மக்கள் கட்சி இணை தலைவரான ஆசிப் அலி ஜர்தாரி தேர்வு...


2024 – 2025ம் கல்வியாண்டிற்கு இதுவரை அரசு பள்ளிகளில் 80 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை தகவல்...



Today's Headlines:

11-03-2024


The Union Government will consult on the appointment of new Election Commissioners on March 15. 


Chief Minister M.K.Stalin's consolation and financial assistance to the parents of 3 children who drowned in a pond near Thoothukudi...


 Chief Minister M.K.Stalin's order to provide Rs 25 lakh compensation to the family of the constable who died in a road accident near Sirkazhi...


Sri Lankan Navy arrested 22 fishermen from Tamil Nadu for fishing across the border... 


Pakistan People's Party Co-Chairman Asif Ali Zardari Chosen as President of Pakistan... 


For the academic year 2024-2025, 80 thousand students have been enrolled in government schools so far: Information from the Department of School Education...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns