கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பேச்சுவார்த்தையில் அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்பு - 11 நாட்கள் நீடித்த வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு...


 பேச்சுவார்த்தையில் அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டதால் 11 நாட்கள் நீடித்த வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு...


*மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு, உடனடியாக அரசாணைகள் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதை ஏற்று, 11 நாட்கள் நீடித்த காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு:*


*தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவின்படி வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 11 நாட்களாக மிக எழுச்சியாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.*


*நேற்று (07.03.2024) சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான வருவாய்த்துறை அலுவலர்கள் மேற்கொண்ட இரவு பகலான காத்திருப்புப் போராட்டம் மிகப்பெரும் தாக்கத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.*


*இதன் காரணமாக நேற்று (07.03.2024) மாலை வருவாய்த்துறை செயலாளர் அவர்கள்,  மாநில நிர்வாகிகளோடு அனைத்து கோரிக்கைகள் குறித்தும் விரிவாக பேசினார்கள்.*


*இன்று (08.03.2024) காலை 11.00 மணிக்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியதில், வருவாய்த்துறை அலுவலர்களின் அனைத்து கோரிக்கைகளும் அரசால் ஏற்கப்பட்டதாகவும், இதற்கான அரசாணைகளை விரைந்து வழங்குவதாகவும் அமைச்சர் அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள்.*


*இதில் குறிப்பாக இளநிலை/ முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.* 


*அதைப்போன்றே அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்புவது தொடர்பான அரசாணை மிக விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.*


*வருவாய்த்துறை அலுவலருக்கான 114 ஈப்புகள் வழங்கும் அரசாணை இன்றோ அல்லது நாளையோ வெளியிடப்பட உள்ளது.*


*முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வுக்கான பணி முதுநிலையில் உள்ள பிரச்சனை குறித்து ஒரு மாத காலத்தில் ஆணைகள் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.*


*அனைத்து நிலை அலுவலருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் & தனி ஊதியம்   வழங்குவதற்கான ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்வதாகவும், இது குறித்து மாணபுமிகு முதலமைச்சரிடம் பேசி மிக விரைவில் சாதகமான பதிலை வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள்.*


*பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்குவதற்கான அரசாணைகளை விரைவில் வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள்.*


*நாடாளுமன்ற தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு வருகின்ற ஏப்ரல் மாதத்திலேயே  வழங்கப்படுவதாக வருவாய்த்துறை செயலாளர் அவர்களும், முதன்மை தேர்தல் அலுவலர் அவர்களும் உறுதி அளித்துள்ளார்கள்.*


*உங்களைத்தேடி, உங்கள் ஊரில் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, ஒரு முகாமிற்கு ரூபாய் 50,000 என்ற அளவில் நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*


*நமது அமைப்பின் சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளதால், போராட்ட களத்திலேயே நடைபெற்ற அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தின் முடிவின் அடிப்படையிலும், நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலும்  காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.*


*போராட்டத்தின் தன்மை குறித்தும், வெற்றிகள் குறித்தும், வென்ற கோரிக்கைகள் குறித்தும், அனைத்து ஊழியர்களையும் மாநில நிர்வாகிகள் நேரடியாக சந்தித்து விளக்க கூட்டங்களை ஒரு வார காலத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.*


*தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைரவிழா ஆண்டில் வீரம் செறிந்த 11 நாள் வேலை நிறுத்தத்தில் 12,000 அலுவலர்கள் கலந்து கொண்டு நமது ஒற்றுமையை பறைசாற்றி உள்ளோம்.* 


*இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மாவட்ட நிர்வாகிகள், வட்டக்கிளை நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்களுக்கும் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் மாநில மையத்தின் சார்பில் புரட்சி வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.*


*இப்பேச்சுவார்த்தையில் ஊதியப்பிடித்தமோ, எவ்வித பழிவாங்கல் நடவடிக்கையோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.*


*மாண்புமிகு அமைச்சர் உடனான பேச்சுவார்த்தை முடிவுகள் இன்று மாலை அரசால் வழங்கப்பட உள்ளது.*


*இறுதி வெற்றி நமதே!*


*மாநில மையம்,*

*தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (TNROA).*


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...