கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19-03-2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19-03-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: விருந்தோம்பல்.


குறள் 88:


பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.


விளக்கம்:


செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.






பழமொழி : 


Art is long and life is short


 கல்வி கரையில் கற்பவர் நாள் சில



பொன்மொழி:


அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல.

உழைக்கும் நேரம்...



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு - ஆக்ஸிஜன்

உழவனின் நண்பன் - மண்புழு

சிதைப்பவை - காளான்

உயிர்க்காரணி - பாக்டீரியா

முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர்

பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - துருவப் பிரதேசம்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Last - கடைசி

Later - பிறகு 

Laugh - சிரி 

Lead - நடத்து 

Learn - கற்று கொள் 

Leaf - இலை 


ஆரோக்கியம்


  உங்கள் மதிய உணவில் 50 சதவீத காய்கறிகள் இருக்க வேண்டும். நீங்கள் அரிசியுடன் காய்கறிகளை சாப்பிடுகிறீர்கள் என்றால், உங்கள் தட்டில் பாதி காய்கறிகளால் மட்டுமே நிரம்ப வேண்டும்.

.


இன்றைய சிறப்புகள்


மார்ச் 19


1895 – லூமியேர் சகோதரர்கள் தாம் புதிதாக உருவாக்கிய திரைப்படக் கருவியின் மூலம் முதற்தடவையாக திரைப்படத் துண்டைப் பதிவு செய்தனர்.

1915 – புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.



பிறந்த நாள் 

-



நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


-


நீதிக்கதை


இயல்வது கரவேல் 


மயிலாடி என்ற ஊரில் தினசரி சந்தை ஒன்றிருந்தது. சந்தையில் எல்லாப் பொருட்களுமே மக்களுக்கு தரமான விலையில் கிடைத்ததால், மக்கள் கூட்டம் தினமும் சந்தையில் அலை மோதியது. 


அந்தச் சந்தையில் சோலையப்பன் என்பவன் காய்கறிக் கடை வைத்திருந்தான். சோலையப்பன் கடையில் தினமும் நல்ல விதமாக வியாபாரம் நடைபெறத் தொடங்கியது. 


ஒருசில நாட்களில் மயிலாடி ஊரைச் சுற்றிலும் கடும் மழை பெய்யத் தொடங்கியது. கடும் மழை தொடர் மழையானது. ஒருவாரம் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. 


இந்தத் தொடர் மழையால் சந்தையில் நடத்தி வந்த சோலையப்பனின் காய்கறி வியாபாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. சோலையப்பன் மிகவும் கஷ்டப்படலானான். 



அவனுக்கு தினமும் காய்கறி கொடுத்து வந்தவர்கள் சோலையப்பன் ஒரு வாரமாக பணம் கொடுக்காத காரணத்தால் காய்கறி கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். 


சோலையப்பன் “மழையினால்தானே தொழில் பாதிப்படைந்தது. மற்றபடி நான் உங்களுக்கு பணம் தவறாமல் கட்டி வந்திருக்கின்றேனே ! வழக்கம் போல் எனக்கு காய்கறிகள் கடனாக கொடுங்கள்” என்று எவ்வளவோ கெஞ்சிக் கேட்டான். 


சோலையப்பனின் அழுகுரலை மொத்த காய்கறி வியாபாரிகள் நிராகரித்துவிட்டனர். சோலையப்பன் கவலையில் ஆழ்ந்தான். இனிமேல் இவர்களை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. 


நாம் யாரிடமாவது பணம் கடனாக வாங்கிதான் வியாபாரம் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். உடனே தன் நண்பன் ஆறுமுகத்தின் உதவியை நாடி, அவனிடம் சிறிது பணம் கடனாகக் கேட்டான். 



ஆறுமுகம் சோலையப்பனை நன்கு உபசரித்து அனுப்பினான். பணம் மட்டும் கொடுக்காமல் கையை விரித்துவிட்டான். ஆறுமுகத்திற்கு சோலையப்பன் ஒரு காலத்தில் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கின்றான். 


ஆனால் இப்போது தனக்கு உதவி செய்யாத ஆறுமுகத்தை நினைத்து மனம் வெம்பினான் சோலையப்பன். இரவு நேரம் ஆறுமுகம் தன் வீட்டில் குறட்டை விட்டபடி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.


 அப்போது நான்கைந்து திருடர்கள் ஆறுமுகத்தின் வீட்டின் உள்ளே நுழைந்தார்கள். ஆறுமுகத்தை அடித்து உதைத்து அவன் வீட்டில் இருந்த பணத்தை எல்லாம் திருடிச் சென்று விட்டார்கள். 


சோலையப்பனுக்கு உதவி செய்யாத ஆறுமுகத்தின் பணம் அநியாயமாக திருடர்களின், வசம் சென்றுவிட்டது. 

இயன்றவரையிலும் பிறருக்கு, மறைக்காமல் பொருள் உதவி செய்ய வேண்டும்.




இன்றைய முக்கிய செய்திகள் 


19-03-2024 


மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம்; சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.40 லட்சம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு...


தேர்தல் பத்திர வழக்கில் எஸ்பிஐ செயல்பாடு நேர்மையாக இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி : ரகசிய எண்களை வெளியிடாதது ஏன் என கேள்வி...


தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5 லட்சம் பேர் விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் தகவல்...


ரஷ்ய அதிபர் தேர்தலில் 5-வது முறையாக வெற்றி பெற்றுள்ள புதினுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து...


ஹைதராபாத்தில் உள்ள நேரு பூங்காவில் 125 வயதான ராட்சத ஆமை உயிரிழப்பு...


Today's Headlines:

19-03-2024


Lok Sabha election candidates can spend up to Rs 95 lakh; Rs 40 lakh for Assembly Constituency: Chief Electoral Officer Sathyapratha Sahu...


 Supreme Court displeased that SBI's operation was not honest in the election bond case: Question why secret numbers were not disclosed... 


In Tamil Nadu, 5 lakh people have applied for inclusion in the voter list: Election Commission informs...


 Indian Prime Minister Modi congratulates Putin who has won the Russian presidential election for the 5th time...


125-year-old giant tortoise dies in Hyderabad's Nehru Park...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns