கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26-03-2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26-03-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:


இனியவைகூறல்

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.


குறள் 93:


முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்.


விளக்கம்:


முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.




பழமொழி : 


Coming events cast there shadow before 


ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே


பொன்மொழி:


போலியான நண்பனாக இருப்பதைவிட

வெளிப்படையான எதிரியாக இரு...



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


இந்தியாவில் எந்த மாநிலத்தில் நிலக்கரி காணப்படுகிறது?


விடை: ஜார்கண்ட் 


உலகின் மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட நாடு எது?


விடை: சீனா 


 உலகின் மிகப்பெரிய உப்பு ஏரி எந்த நாட்டில் உள்ளது?


விடை: ரஷ்யா 


உலகில் அதிக விலை கொண்ட விலங்கு எது? 


விடை: பந்தய குதிரை


 ஜப்பானின் தலைநகரம் எது? 


விடை:  டோக்கியோ 




ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Listen - கவனி 

Little - சிறிய 

Lion - சிங்கம்

Live - வாழ் 

Lizard - பல்லி 

Load - சுமை 


ஆரோக்கியம்


  ஆரோக்கியமான தூக்கம்


தூக்கமின்மை உடல் ஆரோக்கி யத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடிய அம்சமாக இருக்கிறது. போதுமான தூக்கம் இல்லாதவர்கள் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கு சாத்தியம் அதிகம். பெரியவர்களுக்கு அன்றாடம் 7 அல்லது 9 மணி நேரத் தூக்கம் அவசியம் தேவை.



இன்றைய சிறப்புகள்


மார்ச் 26


2000 – விளாடிமீர் பூட்டின் உருசியாவின் அரசுத்தலைவராகத் தெரிவானார்.


2006 – மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.


2006 – முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.



பிறந்த நாள் 

1973 – லாரி பேஜ், கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கர்



நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்

விடுதலை நாள் (பாக்கித்தானிடமிருந்து 1971)

மாவீரர் நாள் (மாலி)



நீதிக்கதை 


நரியும் போர் முரசும் 


 ஒரு காலத்தில் ஒரு காட்டில் ஒரு நரி இருந்தது. அதன் பெயர் கோமயா. அது மிகவும் சோம்பேறி. தன் உணவைக்கூடத் தானே தேடிக் கொள்ளாது. மற்ற இளம் நரிகள் ஓடியாடித் தங்கள் இரையைப் பிடித்தவுடன் இந்தக் கிழட்டு நரி அவர்களைத் துரத்திவிட்டு இரையைத் தானே உண்ணும். மற்ற எல்லா நரிகளுக்கும் இதன் மீது அதிகக் கோபமுண்டாயிற்று. 


கோமயாவை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டுமென்று மற்ற நரிகள் கூடித் தீர்மானித்தன. எந்த நரியுமே கோமயாவைப் போல் அவ்வளவு பெரிதாக இல்லை. அதனால் தனியாக யாராலும் அதை எதிர்க்க முடியவில்லை. 


கோமயா நமக்கு மிகவும் தொல்லை கொடுக்கிறது, என்றது ஒரு நரி. “ஆம். நாம் முயற்சி எடுத்து இரையைப் பிடித்தால் கோமயா அங்கு வந்து அதைத் தூக்கிக் கொண்டு போகிறது.” என்றது மற்றொரு நரி.


“எனக்கு யோசனை தோன்றுகிறது. நாம் நமக்குள் முறை வைத்து இரையைப் பிடிக்க வேண்டும். ஒரு நரி இரையை உண்ணும் போது மற்ற நரிகள் கோமயாவை இரைக்கு அருகில் வரவிடாமல் தடுக்க வேண்டும். நாம் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்தால் கோமயாவால் நம்மை எதிர்க்க முடியாது.” என்று மூன்றாவதாக ஒரு நரி கூறியது. 



அதற்குப் பிறகு கோமயாவிற்கு இரை கிடைப்பது பெரிய பிரச்சினையாயிற்று. மற்ற நரிகளிடமிருந்து இப்போதெல்லாம் கோமயாவால் இரையைப் பிடுங்கிக் கொள்ள முடியவில்லை. அவை எல்லாம் ஒன்று சேர்ந்து கோமயாவைத் தாக்கி அந்த இடத்தை விட்டுத் துரத்தின. 


மேலும், காட்டின் அந்தப் பகுதியில் அந்தக் கிழட்டு நரியை வேட்டையாடக் கூட அவை அனுமதிக்கவில்லை.


 வருத்தமடைந்த கோமயா அந்த இடத்தை விட்டுச் சென்றது. மிகத் தொலைவிலுள்ள காட்டின் மற்றப் பகுதிகளில் அந்தக் கிழட்டு நரி சுற்றித் திரிந்தது. 


இறுதியில் காட்டின் எல்லைப் பகுதியை அது அடைந்தது. விரைவாக நான் உணவைத் தேடிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன், என்று எண்ணியது.



அங்குமிங்கும் அலைந்த போது போர் முடிந்து ஆளரவமற்ற ஒரு போர்க்களத்தை நரி பார்த்தது. திடீரென்று காதைப் பிளக்கும்படியாக ‘ டம் , டம் ‘ என்று ஓசை கேட்டது. கோமயாவுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. மிக விரைவாகக் காட்டுக்குள் ஓடியது. சிறிது தூரம் சென்ற பிறகு நின்று சுற்று முற்றும் பார்த்தது. இப்போதும் அந்த ஓசை கேட்டது.


ஆனால், அது தொலைவில் இருந்து வந்தது. ” நான் தைரியமாக முன்னே சென்று எங்கிருந்து அந்தப் பயங்கரச் சத்தம் வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும், ” என்று தீர்மானித்தது.


 கோமயா மெதுவாகப் போர்க்களத்திற்குச் சென்றது. அதன் நெஞ்சு முழுவதும் அச்சம் இருந்தாலும் முன்னேறிச் சென்றது. அங்குச் சென்றவுடன் கோமயாவிற்கு நிம்மதி ஏற்பட்டது. ஆளரவமற்ற அந்த இடத்தில் மரத்தினடியில் ஒரு போர் முரசு இருந்தது. காற்று அடிக்கும் போது, மரத்தின் கீழ்க்கிளை அந்த முரசில் மோதும் போது பெரிய ஓசை எழும்பியது என்பதைக் கோமயா புரிந்து கொண்டது. 


போர் முரசுக்கருகில் நிறைய உணவுப் பொருள்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டு அந்த நரி மிகவும் மகிழ்ச்சியடைந்தது ; வயிறு புடைக்க உணவை உண்டது.


“அந்தச் சத்தத்திற்குப் பயந்து நான் இங்கிருந்து ஓடியிருந்தால் இந்தச் சுவைமிக்க உணவு எனக்குக் கிடைத்திருக்காது, நான் பெரிய முட்டாளாக இருந்திருப்பேன்” என்று தனக்குள் எண்ணிக் கொண்டது நரி. 


நீதி : அச்சத்தை நீக்கு; துணிவைத் துணையாக்கு.





இன்றைய முக்கிய செய்திகள் 


26-03-2024 


 10ம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம்: 9.10லட்சம் பேர் எழுதுகின்றனர்...


பெங்களூருவில் காவிரி நீரை அவசியமற்ற நோக்கங்களுக்கான பயன்படுத்தியதற்காக 22 குடும்பங்களுக்கு அபராதம் விதிப்பு...


டெல்லியின் அலிபூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம்...


தங்கம் சவரன் ரூ.50,000ஐ நெருங்கியது: இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு ...


பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் - இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை...



Today's Headlines:

26-03-2024


Class 10 Exams Begin Today: 9.10 Lakh Candidates Write... 


22 families fined for non-essential use of Cauvery water in Bengaluru...


Terrible fire at a factory in Delhi's Alipur area: Firefighters struggle to put out the fire... 


Gold Price closes to Rs 50,000: Sovereign up by Rs 160...


Bharat Biotech Information - Tuberculosis vaccine trial in India...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...