கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02-04-2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02-04-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:


இனியவைகூறல்

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.


குறள் 97:


நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்.


விளக்கம்:


நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.





பழமொழி : 


As the king is, so his subject are 


தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை


அரசன் வழி எவ்வழியோ மக்கள் அவ்வழி




பொன்மொழி:


நீ பின்பற்ற வேண்டிய நற்பண்புகள்,

நீ வெறுக்கும் மனிதர்களிடம் இருக்கக் கூடும்...




அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?


விடை: கங்கை


 இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?


விடை: 195p


இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?


விடை: லக்னோ



 ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?


விடை: பி.டி. உஷா



இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?


விடை: டேவிட் ஜசன் ஹோவர்




ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Memory - நினைவு 

Merchant - வியாபாரி 

Message - செய்தி 

Messenger - தூதுவன் 

Middle - நடுவில் 

Midnight - நடு இரவு



ஆரோக்கியம்


  பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. பல்வேறு நிறங்கள் உடைய பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுப்பதன்  மூலம் அதிகமான ஊட்டச்சத்துகளை பெற முடியும். 

 

பழச்சாறுகளை காட்டிலும் முழு பழங்கள் அல்லது காய்கறிகளை சாப்பிடுவது நல்லது, ஏனெனில் இது அதிக நார்சத்து கிடைக்கும். பழம் மற்றும் காய்கறிகள் உண்பதன் மூலம் இதய நோய், வகை 2 நீரிழிவு, மற்றும் புற்றுநோய் ஆகியவை வராமல் பாதுகாக்க முடியும் என்று ஆராய்ச்சி கூறுகின்றது.


இன்றைய சிறப்புகள்


ஏப்ரல் 2


1984 – ராகேஷ் சர்மா சோயூஸ் டி-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.


2011 – மும்பையில் துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை 6 இழப்புகளால் வென்று உலகக் கோப்பையைப் பெற்றது.



பிறந்த நாள் 

-



நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்

பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்

உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள்



நீதிக்கதை 


அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை 


அந்த அடர்ந்த காட்டுக்கு நடுவில் ஒரு குளம் இருந்தது. மீன்கள், நண்டுகள், தவளைகள் என்று எல்லா வகையான நீர் வாழ் இனங்களும் அங்கு மகிழ்ச்சியோடு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தன. 


அவற்றுள் சஹஸ்ரபுத்தி, சதபுத்தி என்ற இரு அழகிய மீன்களும் இருந்தன. அந்தக் குளத்திலுள்ள மற்ற மீன்களைவிட பெரியவை. தம்முடைய அழகிய தோற்றம், அறிவாற்றல் ஆகியவற்றைப் பற்றி அவை இரண்டிற்கும் அதிகப் பெருமை உண்டு.


அதே குளத்தில் ஏகபுத்தி என்ற தவளை தன் மனைவியோடு வசித்து வந்தது. அங்கு மீன்களுக்கும் தவளைகளுக்குமிடையே நல்ல நட்பு இருந்தது. எந்தத் தகராறும் இல்லாமல் அவை நல்லபடியாக வாழ்ந்தன.


ஒருநாள், காட்டுக்குள் இருந்த ஆற்றில் மீன் பிடித்து விட்டு இரு மீனவர்கள் வந்து கொண்டிருந்த போது அந்தக் குளத்தைக் கண்டனர். அப்போது மாலைப்பொழுது முடியும் நேரம். வழக்கம் போல் எல்லா மீன்களும் தவளைகளும் விளையாடிக் கொண்டிருந்தன.



சஹஸ்ரபுத்தி, சதபுத்தி, ஏகபுத்தி ஆகியவற்றோடு மற்றவையும் விளையாட்டில் கலந்து கொண்டன. குளத்தை விட்டு மேலே எழும்பிக் குதித்து ஒன்றையொன்று துரத்தி விளையாடிக் கொண்டிருந்தன. அந்த அழகிய காட்சியைக் கண்ட மீனவர் இருவரும் மிகவும் வியப்படைந்தனர். 


அங்கேயே நின்று அந்தக் காட்சியைப் பார்த்து ரசித்தனர். “அவை எவ்வளவு அழகாக இருக்கின்றன !” என்றான் ஒருவன். 


“ஆமாம். அவற்றில் எத்தனை வகைகள் இருக்கின்றன, பார்த்தாயா ?” என்றான் மற்றவன்.


“இந்தக் குளம் அதிக ஆழமில்லாதது போல் காணப்படுகிறதே” என்று கேட்ட முதலில் பேசிய மீனவன் “நாம் சில மீன்களைப் பிடிக்கலாமா ?” என்று கேட்டான்.



“இப்போது அதிக நேரமாகிவிட்டது. தவிர பெரும் சுமையைத் தூக்கிக் கொண்டு நாம் அதிகத் தொலைவு செல்ல வேண்டும். நாம் நாளை இங்கு வரலாம்” என்று யோசனை கூறினான் அடுத்தவன். 


இருவரும் அந்த இடத்தை விட்டுச் சென்றனர். ஏகபுத்தி, குளத்திலிருப்பவைகளைப் பார்த்து, “அந்த மீனவர்கள் பேசியது உங்கள் காதுகளில் விழுந்ததா ? நாம் இந்தக் குளத்தை விட்டு வேறு பாதுகாப்பான இடத்திற்குச் சென்று விடலாம்” என்று கூறியது.


“யாரோ இரண்டு மீனவர்கள் நாளை இங்கு வந்து நம்மைப் பிடிக்கப் போவதாகப் பேசிக் கொண்டதற்காக, நம்முடைய இந்த இடத்தை விட்டு நாம் ஓட வேண்டுமா ? அவர்கள் நாளை இங்கு வராமலே கூட இருக்கலாம் என்பது நமக்குத் தெரியாதா ?” என்ற சஹஸ்ரபுத்தி, தொடர்ந்து பேசியது, “அவர்கள் நம்மைப் பிடிப்பதற்காக வந்தாலும் தப்பித்துக் கொள்ள என்னிடம் ஆயிரம் வழிகள் இருக்கின்றனவே !”


உன்னுடைய ஆயிரம் வழிகளும் தோற்றாலும் தப்பித்துக் கொள்ள மேலும் நூறு வழிகள் எனக்குத் தெரியுமே !” என்றது சதபுத்தி. 


“இரண்டு மீனவர்கள் நம்முடைய இடத்தைவிட்டு நம்மைத் துரத்த நாம் அனுமதிக்கக் கூடாது.” என்று மேலும் கூறியது. அந்தக் குளத்திலுள்ள மற்றவை எல்லாம் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டன. 


“நல்லது. எனக்கு ஓர் உபாயம் மட்டுமே தெரியும். ஆபத்து வருவதற்கு முன்னால் அந்த இடத்தை விட்டு நீங்க வேண்டும் என்பதே அது.” என்று கூறிய ஏகபுத்தி தன் மனைவியோடு அந்தக் குளத்தை விட்டுப் பாதுகாப்பான இடத்தைத் தேடிச் சென்றது.


அவர்கள் போவதைக் கண்டு எல்லா மீன்களும் தவளைகளும் நண்டுகளும் ஏளனமாகச் சிரித்தன. மறுநாள் அங்கு வந்த மீனவர்கள் பெரிய வலையைக் குளத்தில் வீசினார்கள். 


“ஓ கடிப்பதற்கு முடியாமல் இந்த வலை மிகவும் தடியாக இருக்கிறதே” என்று சோகத்தோடு சஹஸ்ரபுத்தி கத்தியது.” என்னாலும் இதிலிருந்து தப்ப முடியவில்லையே ! வலையை விட்டு வெளியில் வந்தால் தானே என்னால் எதையாவது செய்ய முடியும் ? ” என்று சதபுத்தி வருந்தியது.


ஏகபுத்தியின் அறிவுரையை நாம் கேட்டிருக்க வேண்டும் என்று துயரத்தோடு கூறியது மற்றொரு மீன். மீன்கள், நண்டுகள், தவளைகள் ஆகியவற்றைப் பிடித்த மீனவர்கள் அவற்றைப் பெரிய கூடையில் இட்டு எடுத்துச் சென்றனர். ஒரு பெரிய கல்லுக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்த ஏகபுத்தி, அருகிலிருந்த தன் மனைவியிடம், ” சரியான சமயத்தில் நான் அந்த முடிவை எடுத்திருக்க விட்டால் மற்றவர்களோடு நாமும் இந்நேரம் அந்தக் கூடைக்குள் இருந்திருப்போம், ” என்று கூறியது. 


நீதி : வருமுன் காப்பதே அறிவுடைமை.



இன்றைய முக்கிய செய்திகள் 


02-04-2024 


 மக்களவை தேர்தல்: தமிழகத்தில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டி; 609 பேர் சுயேட்சை.. விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்...


தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..


 பள்ளிகளில் சாதி வேறுபாடு களைவதற்கான வழிமுறைகளை வகுக்கும் நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு...


கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...


 தேர்தல் நெருங்குவதால் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு...


விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் 100% எண்ண வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..


கேரள அரசு ரூ.10,000 கோடி கடன் வாங்க அனுமதி வழங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு...




Today's Headlines:

02-04-2024


 Lok Sabha Elections: Total 950 Candidates Contest in Tamil Nadu; 609 people are independent.. The Election Commission has published the details... 


Tamil Nadu's electronics exports rise to 7.4 billion US dollars: Chief Minister M.K.Stalin is proud.. 


Extension of the tenure of Justice Chandru committee to devise mechanisms to eliminate caste discrimination in schools... 


Tourists banned from going to Dhanushkodi due to rough seas: District administration announced...


 Due to the approaching election, suspension of fare hike at toll booths... 


100% counting of VVPAT acknowledgment slips: Supreme Court notice to Election Commission.. 


Kerala govt should give permission to borrow Rs 10,000 crore: Supreme Court directs Union govt...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...