கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நியமனம்...

ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நியமனம்...



விழுப்புரம்: தமிழகத்தில் கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தாலும் விழுப்புரம் மாவட்டம் அரசியலிலும், அரசு உயர் பதவியிலும் பலர் தடம் பதிக்க வைத்த பெருமையை கொண்டுள்ள மாவட்டமாகத்தான் இருக்கிறது. அரசு உயர் பதவியிலும், ஒன்றிய, மாநில அரசின் பல சாதனை திட்டங்களிலும் அங்கம் வகித்தவர்கள் பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். சமீபத்தில் உலக நாடுகளே வியந்து பார்க்கக் கூடிய திட்டமான சந்திராயன்-2 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ரெயில்வே ஊழியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இன்னும் பாராட்டு விழாக்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் விழுப்புரம் அருகே ஒரு சாதாரண கிராமத்தை சேர்ந்த இளைஞர், ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் அருகே ராதாபுரம் என்ற சாதாரண கிராமத்தை சேர்ந்த அப்பர்-புனிதா தம்பதியின் மகன் சந்துரு (வயது 42) என்பவரைத்தான் ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 1982-ம் ஆண்டு பிறந்த சந்துரு விழுப்புரம் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்து விட்டு பின்னர் காரைக்குடியில் பி.எஸ்.சி. விவசாய பட்டப்படிப்பை முடித்த அவர் தொடர்ந்து டெல்லியில் எம்.எஸ்.சி. அக்ரி, பி.ஹெச்.டி. படிப்பை முடித்துள்ளார். 2009 யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதிய சந்துருவுக்கு 2-வது முயற்சியிலேயே  ஐ.எப்.எஸ். பிரிவில் அயல்நாட்டு பணி வாய்ப்பு கிடைத்தது. பணியில் சேர்ந்தது முதல் 2016 வரை ஸ்ரீலங்காவில் இந்தியாவிற்கான தூதராக அலுவலக முக்கிய பொறுப்பில் இருந்தார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தூதரக அலுவலகத்திலும், பின்னர் 2020-ம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வகிக்கும் துறையில் அலுவலக தனிச்செயலர் பதவி என முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். ஜப்பான் நாட்டில் இந்தியாவிற்கான 3 துணைத் தூதரகங்கள் உள்ளன. அதில் ஒன்றான ஓசாகா பகுதி தூதுவராக நியுமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் அருகே சாதாரண கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் இந்திய நாட்டின் சார்பில் மிகப் பெரிய பொருளாதார நாடான ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns