கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வல்லவனுக்கு வல்லவன் - இன்றைய சிறுகதை...



வல்லவனுக்கு வல்லவன் - இன்றைய சிறுகதை...


 ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்:


"இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேரேஜ் லைட் அணைக்கவில்லைன்னு நினைக்கிறேன். நீங்க போய் கேரேஜ் லைட்டை ஆஃப் பண்ணிட்டு வாங்க".


முதியவர் மிகவும் சிரமப்பட்டு படுக்கையில் இருந்து எழுந்து, ஜன்னலைத் திறந்து பார்த்தார், ஐந்தாறு திருடர்கள் தனது கேரேஜ் கதவை உடைக்க முயற்சிப்பதைக் கண்டார்.


பெரியவர் அங்கிருந்து அருகில் உள்ள காவல் நிலையத்தை ஃபோனில் அழைத்தார்: "ஹலோ...... எனது முகவரியை எழுதிக் கொள்ளுங்கள். வீட்டில் நாங்கள் இரண்டு வயதான கணவன் மனைவி மட்டுமே இருக்கிறோம். இப்போது ஐந்து அல்லது ஆறு திருடர்கள் எங்கள் கேரேஜ் கதவை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு போலீஸ் குழுவை சீக்கிரம் அனுப்புங்கள்."


மறுபக்கத்திலிருந்து காவல் அதிகாரியின் குரல் வந்தது: "உங்கள் முகவரியை குறித்துக் கொண்டோம். எங்களிடம் தற்போது காவலர்கள் யாரும் இல்லை. நாங்கள் ஒரு போலீஸ் டீமுடன் தொடர்பு கொண்டவுடன், அவர்களை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறோம்."


இதைக் கேட்டு, பெரியவர் ஏமாற்றம் அடைந்தார், ஆனால் மறுபுறம், கேரேஜின் பூட்டை உடைக்கும் பணியில் திருடர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.


இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, பெரியவர் மீண்டும் காவல் நிலையத்தை அழைத்தார்: "அய்யா..... இப்போது யாரையும் அனுப்ப வேண்டியதில்லை. ஐந்து திருடர்களையும் சுட்டு விட்டேன்" என்று நிதானமாகக் கூறினார்.


போலீஸ் ஸ்டேஷனில் ஒரே பரபரப்பு. ஐந்து நிமிடங்களில், ஒரு போலீஸ் குழு, ஒரு ஹெலிகாப்டர், ஒரு சிறப்பு மருத்துவர், மூன்று மருத்துவர்கள் மற்றும் இரண்டு ஆம்புலன்ஸ்களுடன், முதியவரின் வீட்டை அடைந்தது.


ஐந்து திருடர்களும் கைது செய்யப்பட்டனர்.


பின்னர் போலீஸ் குழுவின் தலைவர் பெரியவரை அணுகி கேட்டார், "நீங்கள் அந்த ஐந்து திருடர்களையும் சுட்டுக் கொன்றதாகச் சொன்னீர்கள், ஆனால் நாங்கள் அவர்களை உயிருடன் பிடித்துள்ளோமே?"


முதியவர் பதிலளித்தார்: "நீங்கள் கூடத்தான் சொன்னீர்கள் போலீஸ் டீம் எதுவும் இல்லை என்று".


மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...