கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Today's Short Story லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Today's Short Story லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Honour is for the position - not for the man - Today's Short Story

 

 பதவிக்குதான் மரியாதை - மனிதனுக்கு இல்லை - இன்று ஒரு சிறுகதை 


Honour is for the position - not for the man - Today's Short Story 


நான் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன்...


உயர் பதவிகளில் இருந்தபோது தீபாவளிக்கு பரிசுப் பொருட்களுடன் எனக்கு வாழ்த்து சொல்பவர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பர்.


அவர்கள் பரிசுப் பொருளாக அளித்தபல வகையான  இனிப்புகள், பாதாம் பிஸ்தா பேரீச்சை போன்றவை நிறைந்த பெட்டிகள், இன்னும் பிற பரிசுகள் என, ஒருவர் பின் ஒருவர் என என் அறையில் உள்ளே நுழைந்தால்! ஏதோ இனிப்பு பரிசு பொருட்கள் விற்கும் கடையைப் போல எனது அறை இருக்கும்.


என்னால் முடிந்தவரை என்னைச் சுற்றி இருப்போருக்கு வந்த பரிசுகளை பங்கிட்டு அளித்த பின்னும்! என் வீடு பரிசுப் பொருட்களால்  நிறைந்திருக்கும்.


நான் ஓய்வு பெற்றபின் வந்த முதலாண்டு தீபாவளிக்கு! நான் பணியில் இருந்த நினைவில்! 


எனக்கு ஏராளமானோர் பல பரிசு பொருட்களுடன் வாழ்த்துச் சொல்ல வருவர் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்!


யாருமே வரவில்லை.


நான் ஏமாந்து, விரக்தி அடைந்து மனதை வேறு பக்கம் திருப்பி! ஆன்மீக செய்தித்தாள் ஒன்றை படிக்கத் தொடங்கினேன்.


அதில் ஒரு சிறுகதையை அதிர்ஷ்டவசமாகப் பார்த்தேன்.


அந்தக்கதை சுமை தூக்கிச் செல்லப் பயன்படுத்தும் கழுதை பற்றியது.


ஒரு முறை அக்கழுதையின் மீது வழிபடும் தெய்வ உருவங்களை ஏற்றிச் செல்லும் பணியை கழுதையின் உரிமையாளர் செய்தார்.


பயணம் தொடக்கத்திலிருந்து முடிவு வரை பல்வேறு இடங்களில் ஏராளமானோர்  கழுதையின் முன்னர் வந்து நின்று பயபக்தியுடன், மரியாதையுடன் வணங்கினர்.


இவ்வாறு தன்னை அனைவரும் வணங்குவதை கண்டு கழுதைக்கு மிகவும் மகிழ்ச்சி.. பெருமை !


தெய்வ வடிவங்களை உரிய இடத்தில் இறக்கிவிட்டு, திரும்பும் பயணத்தில் 


காய்கறி மூட்டையை அதன் முதுகில் ஏற்றி பயணத்தைத் தொடர்ந்தார் கழுதையின் உரிமையாளர்.


பயணத்தில் ஆங்காங்கே ஏராளமானோர் வந்து தன்னை மரியாதையுடன் கும்பிடப் போகிறார்கள் என்று எதிர்பார்த்த கழுதைக்கு! ஒரே ஆச்சரியம்.


யாரும் வந்து கழுதையை  வணங்கவில்லை.


வெறுத்துப்போன கழுதை பிறருடைய கவனத்தைக் கவர கத்தத் தொடங்கியது.


கடுப்பான உரிமையாளரும் பக்கத்தில் நின்றவர்களும் கழுதையை அடிக்கத் துவங்கினர். 


அவர்கள் அடிக்கும் போது எல்லோராலும் வணங்கப்பட்ட நான்! வரும் போது என்ன தவறு செய்தேன்? என்று கழுதை குழம்பியது !


கழுதையின் கதையைப் படித்த எனக்கு ஒரு ஞானோதயம் உதித்தது.


நான் உயர் பதவியில் இருந்தபோது  என்னை சந்தித்து வாழ்த்துச் சொல்லிப் பரிசளித்த அனைவரும், கடவுள் விக்கிரகங்களை வணங்கியவர்கள் தான்.


தன்னை வணங்கியதாக நினைத்த கழுதை போல, எனக்கு தீபாவளிக்கு வாழ்த்து சொல்லி பரிசு அளித்தவர்கள் அனைவரும்,அதுபோலத்தான் 


*நான் வகித்த பதவியின் அதிகாரத்திற்காக அதை செய்தார்களே தவிர எனக்கு இல்லை என்று*


அப்போது நான் புரிந்து கொள்ளவில்லை.


இந்தப் புரிதல் வந்தவுடன், பரிசுகளுடன் வாழ்த்து சொல்ல வருபவர்களை எதிர்பார்த்து ஏமாந்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு! 


என் மனைவியுடன் இணைந்து சமையல் அறையில் அவளுக்கு உதவத் தொடங்கினேன்.


அவளிடம் கழுதைக் கதையை படித்து நான் பெற்ற ஞானோதயத்தை பகிர்ந்த போது அவள் பதில் சொன்னாள்...


அவ்வப்போது உங்களை நான் கழுதை என்று சொன்ன போது! என் மீது கோபப்பட்டீர்கள்?


இப்போது புரிந்திருக்கும் என்றாள்.


எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் - இன்று ஒரு சிறுகதை

 

எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் - இன்றைய சிறுகதை


You become what you think - Today's short story


#பேசி_பேசியே...


குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார்.


இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை.அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை.


 நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள். 


பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார். எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது.


குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.


உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும். அவரை வீழ்த்துபவருக்கு 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள்.


பெரிய தொகைதான், இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. 10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.



புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான் . அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள்.


அதில் ஒருவன் , வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று , "என்னய்யா ஆச்சு உங்களுக்கு ?


பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே.. உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான்.


"எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " . அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.


மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான். " ஐயா , போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன் . நான் உங்க தீவிர ரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க.


அதுல சந்தேகமே இல்லை.


ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் , வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா ? " என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.


'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது. போட்டி துவங்கும் நேரம் வந்தது. பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர். 


அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான். "என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே என்னாச்சு உங்களுக்கு ? " என்று கேட்டுவிட்டு விடைபெற்றான்.


அவ்வளவுதான் வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார். போட்டி துவங்கியது . அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை ஆட்கொண்டது. இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார்.


எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் , வீரத்தையும் பாராட்டினார்கள் . அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.


பேசி ! பேசியே ஆளை வீழ்த்துவது இப்படித்தான்.


(இது போன்ற நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.)


பலருடைய வாழ்வில் , வந்துவிட்ட வியாதியைவிட , வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை கீழேதள்ளி வீழ்த்திவிடுகிறது.


பலப்படுவோம் எண்ணங்களால் , நம்பிக்கைகளால்.. உடல் அளவில் பலவீனப்பட்டாலும் மனதளவில்

மிருகபலத்தோடு இருப்போம்.


பிறரின் வார்த்தைகளால் பயப்படவும் வேண்டாம். பலவீனப்பட வேண்டாம்.


பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!


தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்


#வாழ்த்துகள்.


#வாழ்க_வளத்துடன்.


*சிந்தைக்கு இனியோர்க்குச் சிறக்கட்டும் இந்நாள்🙏*


பெற்றோரின் தியாகம் - இன்று ஒரு சிறு கதை - Sacrifice of Parents - Today's Short Story...

 


பெற்றோரின் தியாகம் - இன்றைய சிறுகதை - Sacrifice of Parents - Today's Short Story...


தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.

அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.

அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்

தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.

அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்?

இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான். தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள். ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம்,

சரி…..நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் –  என்றாள்.

மகனுக்கு ஒரே சந்தோஷம்.

அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் – என்றான் மகன்,

ஒன்றுமில்லை மக்னே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு – எனக் கூறினாள் தாய்.

அம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான்.

தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள். தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான். அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள். மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக,

என்ன அம்மா செய்கிறாய்… தூங்க கூட  விட மாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் – எனக் கேட்டான் மகன்.

அப்போது தாய் அமைதியாக சொன்னாள்:

மகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய். நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு  உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா? – என்றாள் தாய்

மகன் திகைத்து நின்றான்.

இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன்   – என்றாள் தாய்.

நண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம். தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது. தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்? நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை  என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை.

எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான். அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்கள். என்னைப் பொறுத்தவரை, அன்பே தாய் என்பது தான் நிதர்சமான உண்மை.

நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான் 

பாசம் உங்களை இழக்கலாம் ஆனால் நீங்கள் பாசத்தை இழக்காதீர்கள்..


Scales of Justice - Life as Thought - Today's short story...

 


நியாயத் தராசு - எண்ணம் போல வாழ்க்கை - இன்று ஒரு சிறு கதை....

⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️


ஒரு வீட்டு வாசலில்  

யாசகன் ஒருவன் தர்மம் கேட்டு நின்றிருந்தான்.


அம்மா... 

தாயே... 

ஏதாவது

தர்மம் பண்ணுங்கம்மா !


அந்த வீட்டு பெண்மணி வெளியே வந்து பார்த்தாள்..


அங்கே

வீதியில் விளையாடிக்

கொண்டு இருந்த, 

தனது ஐந்து வயது மகளை அழைத்து, 


அவளது கைகளால் அரிசியை,

அள்ளி கொடுத்து,


யாசகனின் பாத்திரத்தில் 

இட சொன்னாள்.


பெற்று 

கொண்ட யாசகனும், பக்கத்து 

வீட்டுக்கு சென்று பிச்சை கேட்க சென்றான்.


அந்த பெண்மணியும் விளையாடி கொண்டிருந்த தனது மகளை கூப்பிட்டு, 


அவளது கையால் அரிசியை அள்ளி யாசகனுக்கு பிச்சை அளிக்க சொன்னாள்.


காலங்கள் உருண்டோடின..


இரண்டு பெண்மணிகளுக்கும் வயது முதிர்ந்து போனது.


இரு சிறுமிகளும் வளர்ந்து பெரியவர்களாகினர்...


அவரவர்கள் தம் தாய் காட்டிய வழியில் தர்மங்களும் தொடர்ந்தன...


ஒரு நாள், அந்த முதிய பெண்மணிகள் இருவருமே இறந்து வானுலகம் சென்றனர்.


அங்கே, 

அந்த முதல் வீட்டு பெண்மணிக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்தது..


மற்றவளுக்கோ அதற்கு கீழான இடமே கிடைத்தது.


உடனே, அவள்... இறைவனிடம் பதறிக் கதறியே முறையிட்டாள். 


இருவருமே, ஒரே மாதிரி தானே, தானம் செய்தோம், 


எனக்கு மட்டும் இங்கே ஏனிந்த பாரபட்சம்,

ஏற்ற இறக்கம் என்று வாதிட்டாள்.


அதற்கு இறைவனோ...


முதலாமவளோ, தனக்கு பிறகும், தன் குழந்தையும், இந்த தானத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், 


குழந்தையின் கையில் அரிசியைக் கொடுத்து தானம் செய்ய சொன்னாள்.


ஆனால்,

நீயோ... 

உன் கைகளால் எடுத்தால், 

அரிசி நிறையவே  செலவாகும் என்ற எண்ணத்திலே, 


உன் குழந்தையின் கையால், 

எடுத்து தானமிடச் செய்தாய்...


இருவரது

செயலும் 

ஒன்றே..


எனினும்  எண்ணங்கள வெவ்வேறு என்றார்.


எனவே,

எந்த செயலை செய்தாலும், 


மேலான எண்ணங்களோடு

செய்யும் செயல்களே


நம் வாழ்க்கைக்கும் தொழிலுக்கும்,

ஆத்ம

திருப்திக்கும், 

மனநிறைவான உணர்வுக்கும் 

வழிகாட்டும்.


சுயலாபத்துக்காக செய்யும் செயல்களை விட, 


பொது நலத்துக்காக செய்யும் செயல்களே வலிமை வாய்ந்தவை, 

மேலானவை,


அதுவே இறைவனின் நியாயத் தராசில் எப்போதும் உயர்ந்தே நிற்கும்..


சிந்தைக்கு இனியோர்க்குச் சிறக்கட்டும் இந்நாள் 🙏

Punishment for Crime - A short story today...

 


குற்றம் கடிதல் (தவறுக்கு தண்டனை) - இன்று ஒரு சிறு கதை...


Punishment for Crime - Today's short story...


ஒரு 😆நகைச்சுவைத் தத்துவ கதை - இன்றைய சிறுகதை...


”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வருகிறாயே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் நீதிபதி.

.

“எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தருகிறீ்ர்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி.

.

நீதிபதிக்கு சுருக்கென்றது.

.

பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் நீதிபதி.

.

ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார்,

.

“இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு”

.

பக்கிரி சந்தோஷமாக ஒப்புக் கொண்டான்.

.

ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார்.

.

“பக்கிரி கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யணும், யார் எப்ப பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது” என்றார்.

.

அவர்கள் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள்.

.

முதல் நாளே பக்கிரி பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள்.

.

அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக் கொள்ளா விட்டால் ஒன்பது பேர் பட்டினி! அதை விட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே!

.

எல்லோரும் விடுதலை ஆகும் அன்று ஜட்ஜ் வந்தார்.

.

“சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு சோதனை முறையில் மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார்.

.

“ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு நொடியில் தட்டிக்கிட்டு போறது எவ்வளவு அக்கிரமம்ன்னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராது” என்றான் பக்கிரி.

.

“பிக் பாக்கெட்டில் பணத்தை பறிகொடுத்தவன் பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கலை. செத்தாலும் இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்” என்றார்கள் மற்ற ஒன்பது பேரும்.

.

நீதிபதி ஒரு திருக்குறள் அபிமானி. வள்ளுவர் சொன்னதைத்தான் அவர் செய்தார்.

.

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

.

குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்.


சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த Test..

 

சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த Test..


#முதலாளி: நீ flightல போய்கிட்டு இருக்க, அதில் 50 செங்கல் இருக்கு, அதில் ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா மீதி எவ்ளோ இருக்கும்?


#வேலையாள்: 49 இருக்கும்.


முதலாளி:   ஒரு யானையை எப்படி 3 Stepல fridgeக்குள் வைப்பது?


வேலையாள்:  Fridgeஐ திறக்கனும், யானையை உள்ளே வைக்கணும், fridgeஐ மூடணும்.


 ஒரு மானை எப்படி 4 Stepல் fridgrக்குள் வைப்பது?


fridgeஐ திறக்கணும், யானையை வெளியே எடுக்கணும், மானை உள்ள வைக்கணும், fridgeஐ மூடணும்.


அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள் எல்லா விலங்கும் வந்துருச்சு ஒன்னு மட்டும் வரல.. அது எது?


 மான், ஏன்னா அது fridgeக்குள்ள இருக்கு.


முதலைகள் வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கணும், என்ன பண்ணுவாங்க.?


 தாரளமாக கடக்கலாம், எல்லா முதலைகளும் சிங்கத்தோட பிறந்தநாள் பார்ட்டிக்கு போயிருச்சு.


 ஆனாலும் பாட்டி இறந்துட்டாங்க எப்படி?


🤔🤔🤔


குளத்தில் மூழ்கிட்டாங்க..


Boss: அதான் இல்ல, முதல்ல flightல இருந்து ஒரு செங்கலை தூங்கி போட்டே இல்ல, அது பாட்டி மண்டையில் விழுந்துருச்சு....

இப்படி கவனம் இல்லாம நீ வேலை பார்த்துட்டு இருக்க, இந்த லட்சணத்தில்  உனக்கு சம்பளம் வேற கூட்டி கேக்குற.. ஒழுங்கா கவனமா வேலைய பார், இல்லைனா சீட்டு கிழிஞ்சிரும்...


🥺🥺🥺🥺🥺


#நீதி:

நிர்வாகம்  கட்டம் கட்ட முடிவு பண்ணிட்டா, எந்த பருப்பும் வேகாது...


விற்பவருக்கு ஒரு கண் போதும்... வாங்குபவருக்கு பல கண்கள் வேண்டும் - இன்றைய சிறுகதை...


விற்பவருக்கு ஒரு கண் போதும்... வாங்குபவருக்கு பல கண்கள் வேண்டும் - இன்று ஒரு சிறு கதை - Today's Short Story...


 கந்தன் வெளிநாட்டிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கி இரண்டு பெரிய சூட்கேசுகளுடன் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தார்,. அப்போது அங்கே வந்த கடம்பன் கேட்டார்.. " மணி என்ன ஐயா?"


கந்தன் இரண்டு சூட்கேசுகளையும் கீழே வைத்து விட்டு தன் மணிக்கட்டைத் திருப்பி பார்த்து விட்டு..


"ஆறாக 10 நிமிடம் இருக்கு".


"வாவ். உங்க கடிகாரம் நல்லா இருக்கு . எங்க வாங்கினீங்க்?"


"நன்றி. இது நானே டிசைன் பண்ணின கடிகாரம்... இங்க பாருங்க" என்று தன் வாட்சைக் காட்டினார் கந்தன் . ஒரு பொத்தானை அமுக்க அமுக்க உலகின் உள்ள எல்லா நேரங்களையும் நொடி மாறாமல் காட்டுவதுடன், உலகில் உள்ள 86 மெட்ரோ நகரங்களில் நேரம் மற்றும் தட்ப வெப்பம் காண்பித்தது அந்த வாட்ச். அதே பொத்தானை மீண்டும் அமுக்க அமுக்க உலகின் பல்வேறு மொழிகளிலும் பலவிதமான அழகிய குரல்களில் அந்த கடிகாரம் நேரம் சொன்னது. இதை பார்த்த கடம்பனுக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். "அட இது மட்டுமில்ல. இதுல இந்த புள்ளி வந்து GPS சாட்டிலைட் மூலமா நான் எங்க இருக்கிறேன் என்று டிராக் பண்ணிக்கொண்டே இருக்கும்". அதோட பல நகரங்களின் தெளிவான வரைபடம்(map), இரவு விளக்கு, மேப்பை பக்கத்தில் இருக்கும் சுவற்றில் பெரிதாக்கி தெரிய வைக்கும் புரொஜெக்டர் திறன், அதில் இருந்த லேசர் பாயிண்டர் இன்னும் என்னென்னமோ காட்டினார். பார்த்த கடம்பன் அசந்து போய் விட்டார்.


"நீங்களே டிசைன் பண்னினது என்று சொன்னீங்களே? இத எனக்கு விலைக்குத் தருவீங்களா???"


"இல்ல . இன்னும் இது மார்க்கட்டுக்காக ரெடி ஆகவில்லை. இன்னும் கொஞ்சம் சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் சரி செய்ய வேண்டி இருக்கு"


"நீங்க வேற தயார் பண்ணிக்கோங்க.. . இந்த கடிகாரத்தை எனக்கு விலைக்கு தாங்க"


"இல்லை ஐயா"


"ரூ. 10 ஆயிரம் தர்றேன் சார்"


"அட இது இன்னும் விற்பனைக்கு ரெடி ஆகவில்லை"


"சரி. ஒரே விலை 15000'


"சொன்னா கேளுங்க.."


"ம்ஹீம். 25000 ரூபாய்.. இப்பவே தாங்க"


"இல்ல...."


"ம் . ஒண்ணும் பேசாதீங்க. 40000. இப்ப என்ன சொல்றீங்க?"


"அட உண்மையாவே இது இன்னும் முழுசா....."


"ரெடி ஆகலேன்னு தானே சொல்ல வர்றீங்க? ஒண்ணும் பேசாதீங்க. கடைசி விலை 50,000. எனக்கு நீங்க இத கொடுத்தே தான் ஆகணும். இவ்வளாவு விரும்பி கேட்கிறேன்"


கந்தன் யோசித்து பார்த்தார். இது வரை இவர் இந்த வாட்ச்சுக்கு செலவழித்தது ரூ.10000 மற்றும் 2 வருட உழைப்பு. இவர் தரும் பணமோ 50000. இதற்கு மேல் மறுக்க வழி இல்லாமல் கந்தன் அவரிடம் இருந்து 50000 வாங்கிக் கொண்டு கடிகாரத்தைக் கழட்டிக் கொடுத்தார். வாங்கிய கடம்பன் ஆனந்தமாய் கையில் கட்டிக் கொண்டு நன்றி செலுத்தி விட்டு வேகமாய் கிளம்பினார்.


"ஹலோ ஒரு நிமிசம்" என்று கந்தன் கூப்பிட்டார் .


கடிகாரத்தை வாங்கிய கடம்பன், "அடடா அதுக்குள்ள இவர் தன் மனச மாத்திகிட்டாரோ என பயந்த படி திரும்ப கந்தன் அவரிடம் அந்த இரண்டு பெரிய சூட்கேஸ்களை காட்டி சொன்னார்....


"அந்த வாட்ச்சோட பேட்டரிகளை மறந்துட்டுப் போறீங்களே?"



ரயிலை நிறுத்திய நெய் !! - இன்று ஒரு சிறு கதை...



 ரயிலை நிறுத்திய நெய் !! - இன்றைய சிறுகதை - Today's Short Story...


ஒரு கிராமத்தான். அவனுக்குப் பட்டணத்தில் வேலை கிடைத்திருந்தது. ரயிலில் பயணம் புறப்பட்டான்.அந்தக் கிராமத்தானுடைய பாட்டிக்கு அவன்மீது பாசம் அதிகம். ஒரு பெரிய டின் நிறைய நெய் கொடுத்தனுப்பினார்.


‘இது எதுக்கு பாட்டி?’ என்று கேட்டான் அவன்.


"தினமும் நல்லா நெய் ஊத்திச் சாப்பிட்டா தான் நீ பலமா வளரமுடியும்’ என்றார் பாட்டி. இதை எப்பவும் மறந்துடாதே!"


அவனுக்குப் பாட்டி சொல்வதைக் கேட்டு சிரிப்புதான் வந்தது. "நெய் சாப்பிட்டா பலமாயிட முடியுமா? இதெல்லாம் சும்மா ஏமாத்து வேலை" என்று நினைத்தான்.


ஆனாலும் பாட்டி மனம் கோணக் கூடாதே என்பதற்காக வாங்கிக் கொண்டான். ஒரு கையில் பெட்டி, இன்னொரு கையில் நெய் டின் சகிதம் ரயிலில் ஏறினான்.


அன்றைக்கு ரயிலில் பயங்கரக் கூட்டம். அவன் எப்படியோ அடித்துப் பிடித்து ஒரு மூலையில் இடம் பிடித்துக்கொண்டான். பெட்டியை ஓரமாக வைத்தான். நெய் டின்னை வைக்க தான் இடமே இல்லை. சுற்றும்முற்றும் பார்த்தான். 'சிவப்புக் கலரில்' ஏதோ தொங்கிக்கொண்டிருந்தது. அங்கே நெய் டின்னைத் தொங்கவிட்டான்.


அந்தப் பட்டிக்காட்டானுக்குத் தெரியாது, அவன் நெய் டின்னை மாட்டியது அபாயச் சங்கிலியில் என்று. டின்னின் கனம் சங்கிலியைப் பிடித்து இழுக்க, ரயில் நின்று போனது.


சிறிது நேரத்தில் அதிகாரிகள் வந்தார்கள். "யாருய்யா இங்கே இந்த டின்னை மாட்டினது?"


"நான் தான்ங்க. ஏன்?" அப்பாவியாக விசாரித்தான் இவன்.


"யோவ், முதல்ல டின்னை எடுய்யா. அது ரயிலையே நிறுத்திடுச்சு!"


அதிகாரிகள் இப்படிச் சொன்னதும் இவன் கண்களில் நீர் வழிந்தது. 


"எங்க பாட்டி சொன்னது சரிதான். இந்த டின்னுக்குள்ளே இருக்கிற நெய் எவ்ளோ பலசாலி. இத்தனை பெரிய ரயிலையே இழுத்துப் பிடிச்சு நிறுத்திடுச்சே!" என்று நெகிழ்ந்தான்.



எது நமக்கு சொந்தம்? - இன்று ஒரு சிறு கதை...


எது நமக்கு சொந்தம்? எப்படி எடுத்துக் கொள்கிறோம்? - இன்றைய சிறுகதை - Today's Short Story...



  ஒரு குரு தனது சீடருடன் உணவிற்காக வீடு வீடாகச் சென்று கொண்டு இருந்தார். ஒரு வீட்டில் பெண்மணி வெளியே வந்து குருவைப் பார்த்து திட்டி விட்டு சென்று விட்டார். 


சீடர் உடனே அந்தப் பெண்மணியைய் பார்த்து கோபப்பட்டார். உடனே குரு சீடரை அமைதியாக அழைத்துச் சென்று இப்பொழுது முதல் இந்த தட்டை நீயே வைத்துக் கொள் என்று கூறி விட்டார். அன்று இரவு சீடனை அழைத்து இப்பொழுது இந்த தட்டு யாருடையது என்று கேட்டார்.  சீடரின் பதில்… இது என்னுடையது என்றார். 


காலையில் எப்படி என்னுடையதாக இருந்த இந்த தட்டு மாலையில் நீங்கள் ஏற்றுக் கொண்டவுடன்உங்களுடையதாக மாறியதோ அதே போலத்தான் அந்த பெண்மணி திட்டிய பொழுது திட்டியது என்னையே என்று ஏற்றுக் கொள்ளாதவரை அந்த பெண்மணி கூறிய கடுஞ்சொற்கள் யாவும் அந்தப் பெண்மணியையே சாறும் என்று குரு சீடனுக்கு அறிவுரை கூறினார்.


“எல்லாம் ஒரு சொல்லை, ஒரு சம்பவத்தை, ஒரு பிரச்சனையைய் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது”.


🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋


முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!


நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...


இந்த நாள் இனிய நாளாகட்டும்

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - இன்றைய சிறுகதை...



தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - இன்று ஒரு சீன நாட்டு சிறு தத்துவக் கதை...


சீன அதிபருக்கு அப்பா சொன்ன 3 வாழ்க்கை பாடங்கள் - நம்பிக்கை கதை - Motivation Story...


``என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம் வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன." சீன அதிபர் ஜி ஜின்பிங் சொன்ன குட்டிக் கதை...


`மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் ஒரு நல்ல உதாரணமாக நான் இருக்கலாம்’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் பிரபல அமெரிக்க பேஸ்கெட் பால் பயிற்சியாளர் பேட் சம்மிட் (Pat Summitt). `நல்லது நினைத்தால், செய்தால் நமக்கும் நன்மையே விளையும்’ என்பது மூதுரை. இவை வெறும் சொற்களல்ல. அனுபவபூர்வமான உண்மை. நேர்மறை எண்ணம், நல்ல சிந்தனை, பிறரின் மேல் அக்கறைகொள்ளும் இயல்பு... இவையெல்லாம் நமக்கு நல்ல பலன்களையே பெற்றுத்தரும். இந்த உண்மையை உறக்கச் சொல்கிறது இந்தக் கதை... தவறு... உண்மைச் சம்பவம். சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping), ஒரு பத்திரிகையில் தனக்கு தன் அப்பாவிடமிருந்து கிடைத்த மூன்று பாடங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் வார்த்தைகளிலேயே அந்தப் பாடங்களைக் கேட்போமா?   


``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம்  வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன. 


ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக்கொள்!’ என்றார். அந்த நாள்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின்போதோ, பண்டிகைகளின்போதோதான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக்கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்... `மகனே நினைவில் வைத்துக்கொள்... உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத்தான்.’’ 


அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்... ``மகனே... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக்கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டைகூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்... `மகனே... எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக்கூடும், தந்திரத்தில் விழவைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.’ 


மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார். வழக்கம்போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்... `மகனே நீயே தேர்ந்தெடுத்துக்கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்துவிடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்... `அப்பா நீங்கள்தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள்தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்றேன். அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன். நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்றுதான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன. 


அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்... மகனே, நினைவில் வைத்துக்கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும்போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’ 


அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கை பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படிதான் நான் செயலாற்றுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறேன்...’’


நல்லதும் கெட்டதும் - இன்றைய சிறுகதை...


நல்லதும் கெட்டதும் - இன்று ஒரு சிறு கதை...


 _*நல்லதும் கெட்டதும்...*_


_வேதனைகளை ஜெயித்து விட்டால்._

_அதுவே ஒரு சாதனை தான்._


_*பிச்சைக்காரர்கள் ஒரு போதும் கோடீஸ்வரர்களைக் கண்டு பொறாமைப்படுவதில்லை.*_

_*தன்னை விட அதிகமாய் பிச்சையெடுப்போரை கண்டு தான் பொறாமைப்படுகிறார்கள்.*_


_உண்மையான உறவு எவ்வாறு இருக்க வேண்டும்?_

_அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்_

_உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்_

_கொட்டியும்_ _ஆம்பலும்_ _நெய்தலும் போலவே_

_ஒட்டி உறுவார் உறவு._

_*~ ஔவையார் (மூதுரை)*_


_*பொருள்:-*_ 

_ஒரு குளத்தில் நீர் நிறைந்திருக்கும் வரை கொக்குகளும் நாரைகளும் அக்குளத்தின் அருகிலே இருந்து அதனால் பயனடையும். ஆனால் குளத்தில் நீர் வற்றிவிட்டால் அவை வேறு குளத்தை நாடி பறந்து போகும். அக்குளத்தில் இருந்த தாமரை மலர்களோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குளத்தை விட்டு பிரியாது அதனுடனே இருக்கும்._


_*அதுபோலவே நம் வாழ்க்கையிலும், இன்பங்களிலும் துன்பங்களிலும் எப்போதும் நம் அருகில் இருப்பவர்களே உண்மையான அன்பு கொண்ட உறவினர்கள்.*_


_ஒரு நாட்டில் கண் பார்வை இல்லாத ஒரு மன்னன் ஆண்டு வந்தான்!_

_அவனுக்கு ஒரு பட்டத்து இளவரசன் இருந்தான்! ஒரு நாள் அவனை அழைத்து மகனே! இந்த தேசத்திற்கு நீ மன்னன் ஆகும் நேரம் வந்து விட்டது! நீ அரியணை ஏற்க வேண்டும் அதற்கு முன் உனக்கு திருமணம் செய்ய வேண்டும் உனக்கு எப்படி பட்ட துணை வேண்டும் என்று சொல்ல!_


_*அதற்கு இளவரசன் அப்பா நம் நான்கு சிற்றரசன் மகள்கள்*_ _*இருக்கிறார்கள் அவர்களில் ஒருவரை நான் தேர்ந்து எடுக்க ஆசைப் படுகிறேன்!*_ _*ஆனால் யாரைத் தேர்ந்து எடுப்பது என்று தெரியவில்லை!*_

_*நீங்கள் தான் அதற்கு உதவ வேண்டும் என்று சொன்னான்.*_ 


_அதற்கு மன்னன் கவலை படாதே அந்த நால்வருக்கும் நான் ஒரு சோதனை வைக்கிறேன்,_ _அதில் யார்_ _வெற்றி_ _கொள்கிறார்களோ அவர்களை_

_நீ திருமணம்_ _செய்து_ _கொள்ளலாம்._ _அதுவரை நீ அரண்மனையில் இரு! உனக்கு உடம்பு சரியில்லை வயிறு வலியில் துடிப்பதாக சொல்லப் போகிறேன் என்றார்._


_*நான்கு இளவரசிகள் அழைக்கப்பட்டார்கள். மன்னன் அவர்களிடம் சொன்னான் பட்டத்து இளவரசன் உடம்பு சரியில்லை அவனுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டு இருக்கு. அதனால் நீங்கள் ஒரு சிறந்த சூப்பை தயார் செய்யுங்கள். முதலில் அரசவையில் அனைவரும் அதை சுவைத்து பார்ப்போம்! எந்த உணவு நன்றாக இருக்கிறதோ அந்த உணவை சமைத்தவர் அடுத்த பட்டத்து இளவரசி ஆவார் என்று சொல்ல!*_


_நான்கு இளவரசிகள் போட்டி போட்டுக் கொண்டு உணவைத் தயார் செய்ய ஆரம்பித்தனர். ஒரு மணி நேரம் கழித்து மன்னரிடம் சுவைக்க எடுத்து வரப்பட்டது!_


_*முதல் இளவரசி சிக்கனை கொண்டு நல்ல சூப் ஒன்றைத் தயார் செய்து இருந்தார்! மன்னர் சுவைத்துப் பார்த்தார் சுவை அலாதியாக இருந்தது.*_


_இரண்டாம் இளவரசி காய்கறிகள் மற்றும் நிறைய மசாலாக்கள் சேர்த்து அருமையான சூப் தயாரித்து இருந்தார்! அதுவும் அமிர்தமாக இருந்தது._


_*மூன்றாவது இளவரசி  வெண்ணெய் சேர்த்து மணக்கும் சூப் ஒன்றை தயார் செய்து இருந்தார்! அதுவும் சுவைக்க அமிர்தம் போல் இருந்தது!*_


_ஆனால் நான்காம் இளவரசி செய்த சூப் உப்பு காரம் மசாலா இல்லாமல் சூடு அதிகம் இல்லாமல் இருந்தது, சுவை ஒன்றும் சொல்லி கொள்ளும் படி இல்லை!_


_*முதல் மூன்று இளவரசியும்*_ _*நான்காவது*_ _*இளவரசியை பார்த்து*_ _*நகைத்தனர்!*_

_*கண்டிப்பாக முதல் மூன்றில் ஒருவர் தான் மன்னன் தேர்ந்து எடுப்பார் என்று முடிவு செய்து இருந்தனர்!*_


_ஆனால் மன்னன்_

_நான்காவது_ _இளவரசியை தேர்ந்து எடுத்தார்!_


அவையில் இருந்த அனைவரும் மன்னனிடம் ஏன் என்று கேட்க அதற்கு மன்னன் சொன்னார், முதல் மூன்று பேரும் எப்படி ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆர்வத்தில் இருந்தார்கள்.


_ஆனால் நான்காவது இளவரசி மட்டும் தான் இளவரசனுக்கு உடம்பு சரியில்லை வயிறு சரியில்லை அதனால் உப்பு, காரம், எண்ணெய் மற்றும் சூடு குறைவாக இருக்கும் சூப்பை அக்கறையுடன் தயார் செய்தார்!


அவர் தான் உண்மையில் குடும்பத்திற்கும் ஏன் நாட்டிற்கும் சிறந்தவராக இருப்பார் என்று தீர்ப்பைச் சொல்லி முடித்தார்!


_உண்மையான உறவு எவ்வாறு இருக்க வேண்டும்_

_உண்மையான உறவு_

_"தாமரை மலர்" போல் இருக்க வேண்டும்._

 

_*எந்த ஒரு  விசயத்தையும் நாம் பார்க்கும் கோணத்திலேயே  இருக்கிறது.*_

 _*நல்லதும்  கெட்டதும்.*_


_நமது கண்கள் சரியாக இருந்தால் இந்த உலகத்தை நமக்குப் பிடிக்கும் ._

_நமது நாக்கு சரியாக இருந்தால் இந்த உலகத்துக்கு நம்மைப் பிடிக்கும்._


_*அமைதியால் நிம்மதி கிடைக்கிறதா*_

 _*இல்லை*_

_*நிம்மதியால் அமைதி கிடைக்கிறதா...*_


நம் துன்பத்துக்கு யார் காரணம்...



நம் துன்பத்துக்கு யார் காரணம்...


நம் துன்பத்திற்கு இவர்தான் காரணம் என்று நாம் யாரையாவது நினைத்துக்கொண்டு மேலும் துன்பப்படுகிறோம்.


உண்மையில் நம் துன்பத்திற்கு யார் காரணம்..? இவர் மட்டுமா ..? இல்லை நம் வினைகளுமா ..?


இதனை அறிய கர்ணன் கதையைக் காணலாம்...


கர்ணனை அர்ஜூனன் தான் கொன்றான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.


உண்மையில் கர்ணனை வலிமை இழக்கச் செய்து கொல்வதற்கு பங்களித்தவர்கள் ஆறு பேர்கள்...!!


கர்ணனைக் கொல்ல அர்ஜூனன் அம்பாய்ப் பயன்பட்டானே தவிர, அவன் மீது அந்த அம்பை எய்தவர்கள் ஆறு பேர்.


யார் அந்த ஆறு பேர்கள்...?


முதலாவதாகப் பரசுராமர்....


இவர் அந்தணர்களுக்கு மட்டும்தான் வில்வித்தை கற்றுக் கொடுப்பேன் என்று சபதம் செய்திருந்தார். இதையறிந்த கர்ணன், தான் அந்தணன் என்று சொல்லி அவரிடம் வில்வித்தை கற்றுக் கொண்டான்.


ஒருநாள் இவன் மடியின் மீது தலை வைத்து, பரசுராமர் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இந்திரன் வண்டுருவில் வந்து, கர்ணனின் தொடையைப் பிளந்து அவனுடைய ரத்தத்தைப் பரசுராமர் மீது விழும்படி செய்தார்.


ஆசிரியரின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்று கர்ணன் வலியைப் பொறுத்துக் கொண்டான். ரத்தம் பட்டதால் விழித்தெழுந்த பரசுராமர், அவன் அந்தணன் இல்லையெனத் தெரிந்து அவனைச் சபித்தார்.


அதாவது, “நீ கற்ற பிரம்மாஸ்திரம் உனக்குத் தக்க சமயத்தில் மறக்கக் கடவது” என்று சபித்தார்.


இரண்டாவதாக ஒரு முனிவர்...


முனிவருடைய பசுங்கன்று, கர்ணனின் தேர்ச்சக்கரத்தில் அடிபட்டு இறந்ததால் "யுத்தத்திலே உன் இரதம் பூமியில் அழுந்தட்டும் " என்று அவர் சபித்தார்.


மூன்றாவதாக இந்திரன்...


கர்ணனின் கவச குண்டலங்களை அந்தணன் போல் வந்து யாசித்துப் பெற்றுச் சென்றான்.


நான்காவதாகக் குந்தி...

கர்ணனைப் பெற்ற குந்தி, பஞ்ச பாண்டவர்களில் அர்ஜூனனைத் தவிர, வேறு யாரையும் கொல்லக் கூடாது என்றும், நாகாஸ்திரத்தை அர்ஜூனன் மீது ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கர்ணனின் வரம் பெற்றாள்.


ஐந்தாவதாகச் சல்லியன்...

கர்ணனுக்குத் தேரோட்டிக் கொண்டிருந்தவன், தக்க சமயத்தில் தேரிலிருந்து குதித்து ஓடிப் போனான்.


ஆறாவதாகக் கண்ணன்...

கர்ணன் அர்ஜூனனை நோக்கிச் செலுத்திய நாகாஸ்திரம் அர்ஜூனனைத் தாக்காதபடித் தேரைத் தரையில் அழுத்தி அர்ஜூனனைக் காப்பாற்றியதுடன், கர்ணனைக் காத்துக் கொண்டிருந்த அவனது புண்ணியத்தையும் யாசித்துப் பெற்றான்.


ஆக இவரால் தான் நமக்கு கஷ்டம் வந்து விட்டது என்று துன்பப் படாமல் , நம்முடைய ஊழ்வினைகள்தான் இப்படி பல உருவில் வருகிறது என்று தெரிந்து கொண்டு, யாரையும் நோகாமல் நமக்கு வரும் கஷ்டங்களுக்கு நாம்தான் பொறுப்பு என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.


நம் கஷ்டங்களுக்கு நாம் தான் பொறுப்பு ..!


பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!


தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!     


முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!    


#வாழ்த்துகள்.


#வாழ்க_வளத்துடன்.


கடவுளின் கருணை - எடிசனின் பதில்...

 


கடவுளின் கருணை - எடிசனின் பதில்...


எடிசன் தனது அறுபத்தைந்தாவது வயதை நெருங்கிக் கொண்டிருக்கையில், 

அவரைப் பேட்டி கண்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை நிருபர்,


 "இத்தனை கண்டுபிடிப்புகளை உங்களைச் செய்யத் தூண்டிய ஆண்டவரின் கருணையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?" என்று கேட்டார்.


எடிசன் சிரித்துக் கொண்டே சொன்னார், 


"இன்று மதியம் நான் உண்ட உணவில் அற்புதமான மீன் கறி ஒன்றை எனக்குப் பரிமாறினார்கள். எனக்குக் கிடைத்த மதிய உணவு கடவுளின் கருணை என்றால், 

அந்த மீனுக்கு கடவுள் காட்டிய கருணை என்ன.? 

நான் உண்ட மீனையும் அந்தக் கடவுள்தானே படைத்திருக்க வேண்டும்..?"


 என்று கேட்டுச் சிரித்தார். 


தொடர்ந்து அவரே சொன்னார்.


 "கடவுள் என்று தனியே ஒன்றும் இல்லை. 

எல்லாம் இயற்கைதான். இயற்கைக்குக் கருணையோ, கொடூரத் தன்மையோ எதுவும் கிடையாது. 

இயற்கைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. 

அது தன் போக்கில் எல்லாச் செயல்களையும் செய்து முடிக்கிறது.!" என்றார் எடிசன்.


"பொறுமை'' - விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்வில் ஒரு நாள்...



"பொறுமை'' - விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்வில் ஒரு நாள்...

...........................................


‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம்.. பொறுமையின் சிறப்பை விளக்கவே இந்த முதுமொழி பிறந்திருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை.


எது நடந்தாலும், என்ன நடந்தாலும் அவைகளை அமைதியாகப் பொறுத்துக் கொள்ளும் தன்மையே ‘பொறுமை’ 


எதற்கும் உணர்ச்சி வசப்படாத தன்மையே ‘பொறுமை’  எதையும் சகித்துக் கொண்டு போவோர் பொறுமையாக இருக்க முடியும்.


விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், ஆயிரம் முறைகளுக்கு மேல் தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின் மின்சார பல்பைக் கண்டு பிடித்தார்.


ஆனால் வெற்றிக்குப் பின்னரும் அந்த ‘பல்பு’ எடிசன் உதவியாளரால் உடைத்து நொறுக்கப்பட்டது.


அப்போது எடிசன் எப்படி நொந்து போய் இருப்பார்...?

அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் எடிசன் பொறுமையுடன் நடந்து கொண்ட சம்பவம்...


தனது நண்பர்களுக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் மின்சார பல்பை ஒளிர வைத்துக் காட்டுவதற்காக எடிசன், ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.அவரது ஆய்வகத்தின் மேல் தளத்தில் இந்த சந்திப்பு நடந்தது.


எடிசன், தனது உதவியாளரை அழைத்து மின்சார பல்பை மேல் தளத்திற்குக் கொண்டு வரச் சொன்னார்.


பல்பைக் கொண்டு வரும் போது, அது கை தவறி விழுந்து உடைந்து விட்டது. அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் எடிசன் சற்றும் திகைக்கவில்லை.


ஆயிரம் தோல்விகளைச் சந்தித்து வெற்றி கண்ட அவருக்கு மின்சார பல்பை மீண்டும் உருவாக்குவது எளிதாக இருந்தது. 


சிறிது முயற்சி செய்து ஒரு பல்பை உடனடியாக உருவாக்கினார்.

அதனை மீண்டும் அந்த உதவியாளரிடமே கொடுத்து மேலே எடுத்து வரச் சொன்னார்.


பல்பைக் கீழே போட்டு உடைத்தவனிடமே மீண்டும் அந்த வேலையைக் கொடுக்கிறீர்களே? என்று சிலர் எடிசனிடம் கேட்டு விட்டனர்.


அதற்கு எடிசன், ‘பல்பு உடைந்தது என்னால் மீண்டும் செய்து கொள்ள முடிந்தது. 


ஆனால் அவரது மனதைக் காயப்படுத்தி விட்டால் அதை என்னால் சரி செய்து கொடுத்து விட முடியுமா?


மீண்டும் அவனிடமே பணியைக் கொடுத்தால் அவன் தனது பொறுப்பையும், எனது நம்பிக்கையும் உணர்ந்து கூடுதல் கவனத்துடன் பணிபுரிவான். அதனால் தான் அப்படி செய்தேன்’ என்றார்.


எடிசனுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த பொறுமை உணர்ச்சியின் எல்லையை அப்போது தான் மற்றவர்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர்!


*ஆம்.,தோழர்களே..,*


*ஒருவனுடைய திறமைகளை* *வெற்றிகளாக*

*உருமாற்றித் தருவது* *பொறுமையே !* 


*பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு !* 


*அதுவே வாழ்வின் அலைகளை எதிர்கொள்ளும்*

*துடுப்பாய்ப் பயன் தரும் !✍🏼🌹*


அமைதியான மனம்...



அமைதியான மனம்...

              

மன அமைதி’ என்கிற இரண்டெழுத்து வசப்பட்டால் போதும். எதிலும், எங்கும் வெற்றியே, ஆனால்!, அனைவருக்கும் எளிதாக அது வாய்ப்பது இல்லை. பரபரப்பான மனம் கொண்ட ஒருவரை விட, மன அமைதி உள்ளவர் சிறப்பாகச் சிந்திப்பார்...


அவர் ஒரு விவசாயி!. அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் ஒரு சிறிய பண்ணை வீட்டில் இருந்த அவர், பல ஆண்டுகளாகத் தன் கையில் ஒரு கடிகாரம் கட்டியிருந்தார்...


அவரைப் பொறுத்தவரை அது வெறும் கைக்கடிகாரம் அல்ல. உணர்வுகள். பல நல்ல தருணங்கள், வெற்றிகள் அவருக்கு நிகழ்ந்ததற்கு அந்தக் கடிகாரம் தான் காரணம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது...


ஒருநாள் பண்ணை வேலை எல்லாம் முடிந்து வெளியே வந்த பிறகுதான் கவனித்தார். அவர் கையில் கட்டி இருந்த கடிகாரத்தை காணவில்லை...


உடனே பரபரப்பாகி, தன் விவசாயக் கிடங்குக்குள் போய்த் தேட ஆரம்பித்தார். எவ்வளவு நேரம் தேடியும் கடிகாரம் கிடைக்கவில்லை. கவலையோடு வெளியே வந்தார்...


அவருடைய கிடங்குக்கு வெளியே சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அவருக்கு உடனே ஒரு ஆலோசனை கிடைத்தது..“சிறுவர்களே...!!” என்று அழைத்தார். சிறுவர்கள் ஓடிவந்தார்கள்...


இந்தக் கிடங்குக்குள் என் கடிகாரம் காணாமல் போய்விட்டது. கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு அருமையான பரிசு ஒன்ற தருவேன்” என்றார்...


மாணவர்கள் துள்ளிக் குதித்தபடி, அவருடைய வேளாண் கிடங்குக்குள் ஓடினார்கள். அத்தனைபேரும் உள்ளே இருந்த வைக்கோற்போர், புல், பூண்டு, இண்டு, இடுக்கு விடாமல் தேடியும் கிடைக்கவில்லை...


சோர்ந்து போனவர்களாக வெளியே திரும்பி வந்தார்கள் விவசாயி வசம், “மன்னியுங்கள் அய்யா!, எங்களால கண்டு பிடிக்க இயலவில்லை’’ என்றார்கள்...


அந்த நேரத்தில், தயங்கித் தயங்கி ஒரு சிறுவன் அவரருகே வந்தான். அய்யா!, எனக்கு மட்டும் இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். நான் அந்த கடிகாரம் கிடைக்கிறதா...? என்று முயற்சி செய்து பார்க்கிறேன்’’ என்றான்...


சிறுவன் கிடங்குக்குள் நுழைந்தான். கதவைச் சாத்திக் கொண்டான். அவன் உள்ளே நுழைந்து பதினைந்து நிமிடங்கள்தாம் ஆகியிருக்கும். கதவு திறக்கப் பட்டது. வெளியே வந்தான்.அவன் கையில் காணாமல் போயிருந்த அவரின் கடிகாரம் இருந்தது...


அவருக்கு ஒரே வியப்பு. தம்பி!, நீ மட்டும் எப்படி சரியாக கடிகாரத்தை கண்டுபிடித்தாயா...?’’ என்று கேட்டார்...


அய்யா!, நான் உள்ளே போய் ஒன்றுமே செய்யவில்லை. கிடங்கிற்கு நடுவில் கண்ணை மூடி அமர்ந்திருந்தேன். ஐந்து நிமிடங்கள் அப்படியே காத்திருந்தேன். அந்த அமைதியில் கடிகாரத்தின் `டிக்...டிக்... டிக்...’ ஒலியானது கேட்டது. ஒலித்த திசைக்கு சென்றேன், கடிகாரத்தை. கண்டு பிடித்தேன் என்றான்.


நாளும் சற்று நேரத்தை, மனதை அமைதிப்படுத்த செலவழித்துப் பாருங்கள்.


உங்களால் எவ்வளவு தெளிவாக, சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை நீங்களே அறிவீர்கள்.


உருவு கண்டு எள்ளாமை வேண்டும்...



உருவு கண்டு எள்ளாமை வேண்டும்...


🧿'' தோற்றத்தை வைத்து..''


முகத்தோற்றதை பார்த்து பழகுகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது தான் கசப்பான உண்மை. பெரும்பாலான அவமானங்களில் உருவம் சார்ந்தது ஒருவகை.


அவமானங்கள் எய்பவர்கள் சாதாரண மனிதர்கள். அதில் வீழ்ந்து அழிபவர்கள் சராசரி மனிதர்கள்.


அந்த அவமானங்களிலிருந்து வாழ்க்கைக்கான உரத்தைப் பெற்றுக் கொள்பவர்கள் தான் அழகில் வெற்றியாளர்கள்.


அழகு என்பது புறம் சார்ந்ததா? அகம் சார்ந்ததா? என்று நடத்திய ஆய்வில் தொண்ணூறு சதவீதம் மக்கள் ‘அழகு அகம் சார்ந்ததே’ என்று சொன்னார்கள்.*


நாம் நமது உடல் அழகுக்கு செலவிடும் நேரத்தில் கொஞ்சமாவது உள்ளத்தின் நல்ல பண்புகளை கடைப்பிடிக்க பயிற்சி செய்தால் நலமாக இருக்கும்.


ஒரு ஊர்ல ஒரு குருவி இருந்தது. அந்தக் குருவி பல வண்ணத்தில் ரொம்ப அழகாக இருந்தது.. தான் மட்டும் அழகு என எப்போதும் பெருமையாக சொல்லிக் கொண்டு இருக்கும்.


நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போதும் கூட அழகைப் பார்த்தே முடிவு எடுக்கும் அந்தக் குருவி.


ஒரு நாள், ஒரு காகம் ஒன்று வந்து அந்த குருவி கிட்ட ‘நாம நண்பர்களாக இருக்கலாமா?’ எனக் கேட்டது.


அதற்கு அந்தக் குருவி, நான் எப்படி அழகாக இருக்கிறேன்.உன்னை நீயே கண்ணடியில் போய்ப் பாரு என்று அசிங்கமாகத் திட்டி அந்தக் காக்காவை விரட்டி விட்டது.


அந்தக் காக்கா மிகவும் வருத்தப்பட்டு அந்த இடத்தை விட்டுப் போனது.


சில மாதங்களுக்கு பிறகு அந்தக் குருவிக்கு உடம்பு சரியில்லாமல் போனது. அந்த குருவிக்கு இறகு எல்லாம் விழுந்து அழகு குலைந்து சாகும் தருவாயில் இருந்தது.


இதைக் கேள்விப்பட்ட காக்கா பதற்றம் அடைந்து மருந்து கொண்டு வந்து அந்த குருவிக்கு கொடுத்தது.  அது மட்டும் அல்லாமல் அருகிலேயே இருந்து அந்தக் குருவியை நன்றாகப் பார்த்துக் கொண்டது.


சில நாட்களுக்கு பிறகு அந்த குருவி குணமடைந்தது.  அந்தக் காக்காவை பார்த்து, ‘எனக்கு துன்பம் வந்த போது எனது நண்பர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை.


ஆனால் நீயோ என்னை காப்பாற்றி விட்டாய். உலகிலேயே நீ தான் அழகானவன் . இனிமேல் நீதான் என் உயிர் நண்பன்’ என்றது.


*😎ஆம்.,தோழர்களே..*


*யாரையும் அவர்களின் தோற்றத்தை வைத்து அசிங்கப்படுத்தக் கூடாது,


*⚽புறத்தோற்ற அழகு அழியக் கூடியது, ஆனால் அகத்தின் அழகோ அழியாதது, நிலையானது..*


*🏵️ஏனென்றால் அக அழகு என்பது அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நாணயம், நம்பிக்கை, தன்னடக்கம் என்று எல்லாவற்றையும் உள் அடங்கியது. அது தான் உண்மையான அழகு.*


*⚽அது எல்லோராலும் பாராட்டப்படும் அழகு. ஆதலால் தான் மற்ற எல்லா வார்த்தைகளை விடவும் அழகு என்ற வார்த்தை வாயில் இருந்து உச்சரிக்கும் போதே நல்ல உணர்வைக் கொடுக்கிறது.*


*🏵️வெளித்தோற்றம் சார்ந்த நிராகரிப்புகளை எண்ணிக் கரங்களை நறுக்கிக் கொள்ளாதீர்கள்.*


*⚽ஏழையின் விரலுக்கு எட்டும் வரை உங்கள் கரங்களை நீட்டுங்கள். அதுவே அழகின் அழகு..


கனவு மெய்ப்படும்...



கனவு மெய்ப்படும்...


1845ல் எலியாஸ் ஹோவே என்ற பொறியாளர், வழக்கம் போல தன்னுடைய கருவியை வடிவமைத்துக் கொண்டிருந்தார். 95% துல்லியமாக வடிவமைத்துவிட்ட அவருக்கு எஞ்சிய அந்த 5% எப்படி செய்வதென்று தெரியவில்லை.அது முடியாவிட்டால் மொத்தக் கண்டுபிடிப்புமே பயனற்று போய்விடக்கூடும்.என்ன செய்வது என்று சிந்தித்தவாறே உறங்கிப் போனார். ஆழந்து உறங்கியவரின் கனவில் ஒரு அதிபயங்கர நிகழ்வு வந்தது.


ஏதோ ஒரு தீவில், மனித மாமிசம் உண்பவர்களிடம் மாட்டிக் கொள்கிறார் ஹோவே. அவரை அப்படியே தூக்கி கொதிக்கும் வெந்நீரில் போட்டு வேக வைக்குமாறு அந்தக் கூட்டத்தின் தலைவன் ஆணையிடுகிறான்.


ஹோவேயைத் தூக்கி அந்த சுடுகலனில் போடுகிறார்கள்.ஹோவே தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார்.கதறுகிறார்.


அதைக் கேட்ட அந்தத் தலைவன்,


"உன்னை விட்டு விடுகிறேன்.ஆனால் அதற்கு நீ ஒரு பணியைச் செய்ய வேண்டும்.அதோ அங்கே ஒரு கருவி உள்ளது.முக்கால்வாசி கருவியை எங்கள் கூட்டத்தவர்கள் வடிவமைத்துவிட்டார்கள்.மீதியை நீ செய்ய வேண்டும்.செய்தால் உனக்கு விடுதலை.இல்லையேல்..." என்று மிரட்ட,


"கண்டிப்பாகச் செய்கிறேன்" என்று ஹோவே கதறுகிறார்.அவரை வெளியே எடுக்கிறார்கள்.


அதோ அங்கே இருக்கிறது அந்தக் கருவி என்று காட்டுகிறார்கள்.அந்தக் கருவி ஒரு துணியால் போர்த்தப்பட்டு மூடிவைக்கப்பட்டுள்ளது.உயிர் மேல் உள்ள பயத்தில் அந்தக் கருவியை நோக்கி ஓடுகிறார் ஹோவே.வேகமாக துணியை எடுக்க, அங்கே அவர் முடிக்க முடியாமல் திணறும் அவருடைய கருவி இருக்கிறது.


"ஆத்தாடி.. இதத்தானே நாமளும் முயற்சிக்கிறோம். இது முடியாதே" என்றெண்ணியபடி ஓடத் துவங்குகிறார்.


அவனைப் பிடியங்கள் என்ற ஆணை பறக்கிறது.ஓடிக் கொண்டிருக்கும் ஹோவே மீது ஈட்டிகள் எறியப்படுகின்றன.அதில் ஒரு ஈட்டி அவரது உடலை துளைக்கிறது.அதை எடுக்கிறார்.எடுத்துப் பார்த்தால் அந்த ஈட்டியின் நுனியில் ஒரு துளை இருக்கிறது.


"கண்டுபிடித்துவிட்டேன்" என்று அலறியபடி அந்த நள்ளிரவில் துள்ளிக் குதித்து எழுகிறார்.தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்திற்கு ஓடுகிறார்.தன் கருவியைப் பார்க்கிறார்.அதில் பொருத்தப்பட்ட ஊசியின் நுனிப் பகுதியில் ஒரு துளையைப் போடுகிறார்.நூலைத் அதில் திணிக்கிறார்.கருவியை ஓட வைக்கிறார்.


தையல் மிஷின் எனும் அந்த கருவி அட்டகாசமாகப் பிறந்தது.


தையல் மிஷின் இந்திய குடும்பங்களில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த கருவி.இது கிராமப்புற பெண்கள் வாழ்க்கையை அப்படியே அலேக்காகப் புரட்டிப் போட்டது.பல லட்சக்கணக்கான தொழில் முனைவோர்களை உருவாக்கியது.


எப்படித்தான் வாழ்வதோ என கலக்கத்தில் இருந்த எத்தனையோ குடும்பங்களை,


"எதைப் பற்றியும் கவலைப்படாதே.என்னை இறுகப் பற்றிக் கொள்.உன்னை காப்பாற்ற வேண்டியது என் கடமை..." 


-- என எப்படியாவது வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கையை தந்தது தையல் மிஷின்.


ஒரே ஒரு ஒற்றை தையல் மிஷின் தரும் தன்னம்பிக்கையை கற்றை கற்றையான புத்தகங்கள் கூட கற்றுத் தராது.


இன்றும் கூட பல அரசுப் பள்ளிகளில் தையல் என்பதை ஒரு பாடமாகவே வைத்திருக்கிறார்கள்.தையல் தெரிந்தால் போதும், அது உறுதியாக உயர்த்தி விடும்.


அப்படியான அந்த மகத்தான தையல் மிஷினை பெருமைப்படுத்த ஜூன் 13 தேசிய தையல் இயந்திர நாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.


இந்த சமூகத்தை, குறிப்பாக பெண்களை மிக தன்னம்பிக்கை உடன், தைரியமாக, பொருளாதார பலம் பெற வைத்துக் கொண்டிருக்கும் அந்த அற்புத கருவி தையல் மிஷின்...


மதியாதார் தலைவாசல் மிதியாதே...

 


மதியாதார் தலைவாசல் மிதியாதே...


ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்து சொன்னார், 


"மகனே, இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப் பார் என்றார். 


அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம்,  இது பழையது என்பதால் 5 டாலர்கள் மட்டுமே தர முடியும் என்கின்றனர், என்றான். 


தந்தை பழைய பொருட்கள் விற்கும் Antique   கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார்.


அவன் போய் கேட்டு விட்டு,  தந்தையிடம் இதற்கு 5000 டாலர்கள் டாலர்கள் தர முடியும் என்கின்றனர் என்றான்.


தந்தை இதனை Museum கொண்டு சென்று விலையை கேட்டுப்பார் என்றார்...


அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து, பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர்கள் என்கின்றனர் என்றான்...


தந்தை மகனை பார்த்து, மகனே! சரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும். 


எனவே,  பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை  மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார்...


" உன்னுடைய  மரியாதையை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்...."

" உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே... "

இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்...


#நமக்கு_மரியாதை இல்லாத இடத்தில் ஒரு நிமிடம் கூட செலவளிக்காதீர்கள்.


நம்பிக்கை என்னும் நூலிழை...



நம்பிக்கை என்னும் நூலிழை...


ஒரு வணிகர் விமானம் ஏறுவதற்கு மிக மிக தாமதமாக வந்தார். போர்டிங் வாயில் மூடப்படும் முன் அவசரமாக வியர்வை மற்றும் மூச்சுவாங்க, அவரது போர்டிங் பாஸ் ஸ்கேன் செய்து கொண்டு விரைவில் விமானம் ஏறினார்.



  அது மூன்று பேர் அமரும் இருக்கை ஒரு நடுத்தர வயது பெண் ஜன்னலோரமும், நடைபாதை அருகே ஒரு சிறிய பெண்னும் இருந்தார்கள் இவர் அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்தவாறே தனது பெட்டியை மேலே வைத்துவிட்டு நடுவில் அமர்ந்தார். 

 

  அவர் அந்த சிறு பெண்ணை பார்க்கும்போது தனது மகளை நினைத்தார் இருவருக்கும் ஒரே வயதுதான் இருக்கும். அந்த பெண் அமைதியாக வண்ணம் தீட்டி கொண்டிருந்தாள் அவரும் அந்த பெண்ணிடம் எப்போதும் போல் பேர் என்ன பொழுதுபோக்கு என்ன என்று பேச்சு கொடுத்துக்கொண்டு வந்தார். 

 

  அதே போல் உனக்கு பிடித்த விலங்கு எது ??? போன்ற ஒரு சில வழக்கமான கேள்வியும், கேட்டு பேசிக்கொண்டு இருந்தார். அவர் மனதில் இந்த சின்ன பெண் தனியாக பயணம் செய்வது விசித்திரமாக பட்டது.



  ஆனால் அவர் தன்னை தனது எண்ணங்களை தன்னுள்ளே புதைத்து வைத்துக்கொண்டார். 

 

  சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பின், விமானம் திடீரென குலுங்க தொடங்கியது. பைலட் ஒலிப்பெருக்கியின் மூலம் பயணிகளிடம் நாம் கடினமான வானிலை எதிர் கொண்டிருக்கிறோம், தங்கள் இருக்கை பெல்ட்கள் போட்டுகொண்டு, அமைதியாக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் கூறினார். 

 

  அடுத்த அரை மணி நேரத்திற்கு மேல் பல முறை விமானம் குலுக்க, கடுமையான தாழ்நிலைகளும் மற்றும் திருப்பங்களை செய்து கொண்டும் சென்றது. சிலர் உயிர் பயத்தில் அழுது கொண்டு இருந்தனர் மற்றும் பலர் பக்கத்து இருக்கை பெண்மணிபோல் பிராத்தனை செய்துகொண்டிருந்தனர். 

 

  இத்துணை விசயங்கள் நடந்தபோதும் அந்த சிறிய பெண் மிகவும் அமைதியாக இருந்தாள். அவள் கலரிங் புக் பென்சில் எல்லாத்தையும் பாக் செய்துவிட்டு அமைதியான முகத்துடன் இருந்தாள் இவருக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை. 

 

  இவ்வாறாக ஒரு வழியாக விமானம் தன்னிலை அடைந்தது. மீண்டும் பைலட் நிலைமை சுமூகமானத்தையும் இன்னும் சற்று நேரத்தில் தரை இறங்க போவதாகவும் அறிவித்தார்.



  அத்தனை பயணிகளிடம் இருந்தும் ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. 

  பின் அவர் அந்த சின்ன பெண்ணை நோக்கி பாராட்டுதலாக இந்த சிறுவயதில் உனக்கு எவ்வளவு மனதைரியம். பெரியவர்கள் அனைவரும் பதட்டத்துடனும் பயத்துடனும் இருக்கும்போது நீ மட்டும் எப்படி இவ்வளவு அமைதியாக இருந்தாய் ????. என கேள்வியுடன் முடித்தார். 

 

  அந்த பெண் சிரித்துக்க்கொண்டே பைலட் என் தந்தை அவர் எப்படியும் என்னை கவனமாக தரையிறக்குவார் என எனக்கு தெரியும். எனவே நான் பயப்படவில்லை என கூறினாள்.
அந்த குழந்தைக்கு தன் தந்தையின் மீது இருந்த நம்பிக்கை. நம்மில் பலருக்கு நாம் வணங்கும் தெய்வத்தின் மீதுகூட இல்லை. நம்பிக்கை வாழ்க்கைக்கு முக்கியமானதாகும். நம்பிக்கையின் அஸ்திவாரத்தில்தான் இந்தச் சமூக அமைப்பு சுழன்று கொண்டி ருக்கிறது. பெரிய வலைப் பின்னல்களைப் போல, 
ஒவ்வொருவருக்கிடையேயும் மெல்லிய நூலிழை போன்ற நம்பிக்கை இழையோடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருக்கிடையேயும் எந்த பந்தமோ, உறவோ, சம்பந்தமோ இல்லாவிட்டாலும், நம்பிக்கை என்ற நூலிழையில் எல்லோரும் பிணைக்கப்பட்டிருக்கிறோம்.                  

           

🌹இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும். நற்காலை வணக்கம்...🌹


தீர்மானிப்பது நாமாக இருக்கவேண்டும் - இன்று ஒரு சிறு கதை...



தீர்மானிப்பது நாமாக இருக்கவேண்டும் - இன்று ஒரு சிறு கதை...


We must be decide


ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதை. பல மன்னர்கள் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.


ஒரு நாள் ஊர்த் தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாக, "அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!” என்றார்.


அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?” என்று கேட்டார். பையன் ”தங்கம்” என்று சொன்னான்.


”பின் ஏன் ஊர்த் தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?” கோபத்துடன் கேட்டார் அறிஞர்.


"தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்து 'இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள்' என்பார். நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!


வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns